அட... அப்படியா?
அந்தச் சிரிப்பு நடிகருக்கு இரண்டு முக்கிய ஸ்டார்களின் கட்சியிலிருந்தும் அழைப்பாம். ‘"யாரோட சேர்றது?'’என மலைவாசஸ்தலம் ஒன்றில் இருக்கும் ஒரு சாமியாரிடம் அருள்வாக்கு கேட்டாராம் சிரிப்பு நடிகர். ஆனால்... "இந்த இரு தரப்பில் எந்தப்பக்கம் நீங்கள் போனாலும் அது விவேகமாக இருக்காது'’ என சாமியார் சொல்லீட்டாராம்!
படாதிபதி அமைப்பு... படத்தை ரிலீஸ் செய்யும் டிஜிட்டல் கம்பெனிகள் அதிகத் தொகை கேட்பதாக ஸ்டிரைக் அடித்தது. அதன் விளைவாக கட்டணம் சிறிது குறைக்கப்பட்டது. இருப்பினும்... குறைந்த விலைக்கு படம் ரிலீஸ் பண்ணித்தர முன்வந்த ஒரு புதுக்கம்பெனியுடன் படாதிபதி அமைப்பு ஒப்பந்தம் போட்டது. ஆனால் "அந்த ஒப்பந்தத்தை ஆறு மாசங்களுக்கு பிறகு பார்க்கலாம்' என கிடப்பில் போட்டிருச்சாம் படாதிபதி அமைப்பு. கிடப்பில் போடப்பட்டதன் பின்னணியில் தியேட்டர் அமைப்பும், டிஜிட்டல் கம்பெனிகளும் கமுக்கமாக சதித்திட்டங்கள் போட்டிருக்காம். மாற்றம் வரும் என எதிர்பார்த்த படாதிபதி அமைப்பு மெம்பர்கள் ஏமாற்றத்தில் இருக்காங்களாம்!
ஒல்லி ஹீரோவுக்கும், ஒல்லி இசைக்கும் சண்டை. ஒல்லி ஹீரோவுக்கும், வருத்தப்படாத ஹீரோவுக்கும் சண்டை. இதனால் ஒல்லி இசையும், வருத்தப்படாத ஹீரோவும் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த கூட்டணியில் இப்போது குழப்பமாம். தனது இரண்டு புதிய படங்களில் ஒல்லி இசைக்கு வாய்ப்பளிக்கவில்லையாம் வருத்தப்படாத ஹீரோ.
போக்குவரத்து சாமியான பிரமுகரின் கதை படமாகி உள்ளது. இதில் சாமியாக "தள'’ஹீரோவின் தந்தை நடித்திருக்கிறார். மறைந்த முதலமைச்சராக கெஸ்ட் ரோலில்... சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பூ நடிகை நடித்துள்ளாராம்.
சென்டர் கட்சி லீடரான ஹீரோவின் "மெகாரூப' படத்திற்கு தமிழில் பெரிதாக சிக்கல் இல்லை. ஆனால் இந்தியில் மத-அரசியல் சம்பந்தப்பட்ட காட்சி வசனங்களுக்கு 18 இடத்தில் வெட்டு கொடுத்திருக்காம் தணிக்கைக் குழு! "யு'’சான்றிதழா? "யு/ஏ' சன்றிதழா? என்பதில் குழு உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடும் ஏற்பட்டிருக்காம்.
உச்சத்தின் ரெண்டெழுத்து படத்தை வெளியிட படாதிபதி சங்கம் தேதி ஒதுக்கிக் கொடுத்தும் ‘"நாங்க மெதுவா ரிலீஸ் பண்ணிக்கிறோம்'’என படத்தரப்பு சொன்னதில் உச்சத்தின் அரசியல் கண்ணோட்டம் இருக்காம். "அண்டை மாநில தேர்தல் முடியட்டும், ஆறு பிரச்சினையில் ஒரு முடிவும் எட்டப்படும்... அதுவரை பொறுக்கலாம்' என உச்சம் சொன்னதால்தான்... அடுத்த மாசத்துக்கு பட ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டிருக்காம். "அந்தப் படம் ரிலீஸாக நாங்க என்.ஓ.சி. கொடுத்திட்டோம். எப்ப ரிலீஸ் ஆகணும்கிறத... அந்த படத்தோட சம்பந்தப்பட்டவங்கதான் முடிவு செஞ்சிருக்காங்க'’ என படாதிபதி அமைப்புத் தலைவரான சண்டக்கோழி சொல்லியிருக்கார்.
நடுவுல பக்கம் தொலைத்த’ ஹீரோவுக்கு உதவிகரமாக செயல்பட்டு வந்த ஹீரோவின் பள்ளித் தோழர்... ஹீரோவிடமிருந்து விலகிட்டாராம். ஹீரோவின் உறவினர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து அதிகாரம் பண்ணியதால் ஏற்பட்ட சங்கடம்தான் இதுக்கு காரணமாம்.
“ஒரு பெரிய நடிகர் கட்சி ஆரம்பிச்சிட்டார். இன்னொரு பெரிய நடிகர் கட்சியை அறிவிக்கப்போறார். இந்த நேரத்துல... "தள'’ஹீரோவும் கட்சி ஆரம்பிச்சா மக்களுக்கு போரடிச்சிடும்’ என ‘தள’தந்தை சொல்லிவருவதால்... தள’ரசிகர்களிடம் உற்சாக குறைச்சல் ஏற்பட... இதைச் சரிசெய்யும் விதமாகவே... திடீர்னு தனது ரசிகர் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளை வரவழைச்சு சந்திச்சு, விருந்து வச்சு... போட்டோ எடுத்துக்கிட்டாராம் ‘தள’ ஹீரோ.
-ஆர்.டி.எ(க்)ஸ்