விஷாலும், வரலட்சுமியும் காதலிப்பதாக பலமாக கிசுகிசுக்கப்பட்டது. தயாரிப்பாளரின் மகன் -நடிகரின் மகள் என்ற வகையில் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்தனர் விஷாலும், வரலட்சுமியும். ஒரு கட்டத்தில்... நட்பு காதலானது.

talkiesஇதை வரலட்சுமி மறுத்தபோதிலும்... "லட்சுமிகரமான பெண்ணை திருமணம் செய்வேன்' என கிசுகிசு பாணியில் சொன்னார் விஷால்.

ஆனால் நடிகர்சங்க விஷயத்தில் சரத்துக்கும், விஷாலுக்கும் இருந்த பகையால்... அவ்வப்போது இவர்களின் காதலில் பிணக்கும் ஏற்பட்டது.

"இந்த விஷயத்தில் நான் என் அப்பா பக்கம்' என வரலட்சுமி சொன்னார்.

Advertisment

இந்நிலையில்தான்... காதல் பிரேக்-அப் ஆனதாக தனது மேனேஜர் மூலமாக வரலட்சுமிக்கு தகவல் சொல்லியனுப்பினார் விஷால்.

"ஏழாண்டு காதலை மேனேஜர் மூலமாகவா முறிப்பது? இதைவிட மோசமான ஒரு நிலையில் காதலர்கள் பிரிந்திருக்கமாட்டார்கள்' என அதிருப்தி தெரிவித்தார் வரலட்சுமி.

இதுவரை... பழைய காதல்...

Advertisment

ஆந்திர தொழிலதிபரின் மகளான அனிஷா ரெட்டி, அமெரிக்காவில் படித்தவர். ஒருசில தெலுங்குப் படங்களில் கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் அனிஷாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே தனக்கு காதல் வந்துவிட்டதாகவும், அனிஷாவும் தன் காதலை ஏற்றுக்கொண்டதாகவும் விஷால் சொல்லியிருக்கிறார்.

இருவீட்டாரின் சம்மதத்துடன் விஷால்-அனிஷா திருமணம் நடக்கவிருக்கிறது.

இனி... புதிய காதல்...

"பிக்-அப் நடிகர்' என கிசுகிசு பெயரே உண்டு ஆர்யாவுக்கு. "ஒன்லி பிக்-அப்... நோ டிராப்' என ஆர்யாவும் ஓபனாகவே சொன்னார்.

அந்தளவுக்கு ஆர்யாவையும், அவருடன் நடிக்கும் நாயகிகளையும் இணைத்து செய்திகள் பரவும்.

தன்வீட்டு கிரஹப்பிரவேசத்திற்கு நயன்தாராவை மட்டும் அழைத்திருந்தார். நயனும் விழாவில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்.

அப்போது இருவரையும் பற்றி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில்... அதற்கு மட்டும்தான் வெளிப்படையாக மறுப்பைச் சொன்னார் ஆர்யா.

"நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ்சிவனும் காதலிக்கிறார்கள்' என்பதை அந்த மறுப்பின் மூலம் முதலில் சொன்னது ஆர்யாதான்.

அப்புறம் த்ரிஷாவையும், ஆர்யாவையும் சம்பந்தப்படுத்தி பேசப்பட்டது. அதற்கு மேலும் பரபரப்பை சேர்க்கிற விதமாக... ஆர்யாவை "குஞ்சுமணி' என பட்டப்பெயர் வைத்து அழைத்துவந்தார் த்ரிஷா.

இதுவரை... ஆல் இஸ் ஜொள்...

அதன்பிறகு... "கஜினிகாந்த்' படத்தில் சேர்ந்து நடித்த ஆர்யாவையும், சாயிஷாவையும் இணைத்து பேசப்பட்டது.

"இது வழக்கமான ஒண்ணு'னு எல்லோரும் நினைக்க... வழக்கத்துக்கு மாறா... "இதுதான் ஆர்யா கட்டிக்கப்போற பொண்ணு' என உறுதியாகிவிட்டது.

பாலிவுட் பழைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான திலீப்குமாரின் மனைவியான நடிகை சாய்ராபானுவின் சகோதரரின் மகள் நடிகை ஷாகுன் பானுவின் மகள்தான் சாயிஷா.

talkies

"கஜினிகாந்த்' படத்தைத் தொடர்ந்து "காப்பான்'’படத்திலும் இருவரும் இணைந்து நடித்தபோது... ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சாயிஷாவுடன் வரும் அவரின் அம்மாவுக்கும் ஆர்யா மீது மதிப்பு ஏற்பட... இருவரின் குடும்பத்தாரின் சம்மதத்துடன் நிக்காஹ் நடக்கவிருக்கிறது.

இனி... ஆல் இஸ் வெல்!

ஜினியின் இளையமகள் சௌந்தர்யாவும், தொழிலதிபர் வீட்டுப்பிள்ளையான அஸ்வினும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஒரு குழந்தையும் உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் முறைப்படி பிரிந்துவிட்டனர்.

கோவையை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபரின் மகன் விசாகன் பிசினஸ்மேனாக இருந்துகொண்டே... "வஞ்சகர் உலகம்' உட்பட சில சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். பிரபல முன்னாள் பத்திரிகை அதிபரின் மகளை மணந்து... பிறகு கருத்து வேறுபாடால் மனைவியைப் பிரிந்தவர் விசாகன்.

இதுவரை... பழைய வாழ்க்கை...

சௌந்தர்யாவும், விசாகனும் சில மாதங்களுக்கு முன் சந்தித்துக்கொண்டபோது... இருவரின் சிந்தனையும் ஒரே அலைவரிசையில் இருக்கவே... இருவரும் வாழ்க்கையில் இணைய முடிவெடுத்திருக்கிறார்கள்.

இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடக்கவிருக்கிறது.

இனி... புதிய வாழ்க்கை...

-ஆர்.டி.எ(க்)ஸ்