"அரசியலுக்கு வருவேன்'’ என தனது ரசிகர்களிடம் அறிவித்த பிறகுதான் ரஜினி சினிமாவில் முன்பைக் காட்டிலும் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
"காலா'’முடித்த கையோடு "பேட்ட'’முடித்தார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்த படத்திற்குப்பின் மீண்டும் "பேட்ட'’டைரக்டர் கார்த்திக் சுப்புராஜோடு ஒரு படத்தில் ரஜினி இணைவார் என்றும் சொல்லப்படுகிறது.
ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் என்பது போய்... வருஷத்துக்கு ரெண்டு படம் என்பதுபோல... ‘2018-ல் ‘"காலா',’"2.ஓ', 2019 பொங்கலில் "பேட்ட', தீபாவளிக்கு முருகதாசுடனான படம்... என்கிறது ரஜினியின் கால்ஷீட் டைரி.
"அரசியலுக்கு வரமாட்டேன்'’என தனது ரசிகர்களிடம் அறிவித்த பிறகுதான் அஜித் சினிமாவில் முன்பைக்காட்டிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
"வீரம்', "வேதாளம்',’"விவேகம்',’"விஸ்வாசம்'’என டைரக்டர் சிவாவுடன் தொடர்ந்து நான்கு படங
"அரசியலுக்கு வருவேன்'’ என தனது ரசிகர்களிடம் அறிவித்த பிறகுதான் ரஜினி சினிமாவில் முன்பைக் காட்டிலும் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
"காலா'’முடித்த கையோடு "பேட்ட'’முடித்தார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்த படத்திற்குப்பின் மீண்டும் "பேட்ட'’டைரக்டர் கார்த்திக் சுப்புராஜோடு ஒரு படத்தில் ரஜினி இணைவார் என்றும் சொல்லப்படுகிறது.
ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் என்பது போய்... வருஷத்துக்கு ரெண்டு படம் என்பதுபோல... ‘2018-ல் ‘"காலா',’"2.ஓ', 2019 பொங்கலில் "பேட்ட', தீபாவளிக்கு முருகதாசுடனான படம்... என்கிறது ரஜினியின் கால்ஷீட் டைரி.
"அரசியலுக்கு வரமாட்டேன்'’என தனது ரசிகர்களிடம் அறிவித்த பிறகுதான் அஜித் சினிமாவில் முன்பைக்காட்டிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
"வீரம்', "வேதாளம்',’"விவேகம்',’"விஸ்வாசம்'’என டைரக்டர் சிவாவுடன் தொடர்ந்து நான்கு படங்கள் செய்த அஜித், தனது அடுத்த பட டைரக்டருடனும் தொடர்ந்து படம் செய்யவிருக்கிறார் எனத் தெரிகிறது.
"சதுரங்கவேட்டை', "தீரன் அதிகாரம் ஒன்று'’படங்களை இயக்கிய ஹெச்.வினோத், அஜித்துக்காக ஒரு ஆக்ஷன் மாஸ் ஸ்கிரிப்ட்டை தயார் செய்து சொன்னார். இந்தச் சமயம் ஸ்ரீதேவியிடம் முன்பே சொல்லியிருந்தபடி... ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூருக்கு கால்ஷீட் கொடுத்த அஜித், "பிங்க்'’இந்திப் படத்தை தமிழில் ரீ-மேக் செய்து நடிக்க விரும்புவதை டைரக்டர் வினோத்திடம் சொன்னார் அஜித். அதனால் அஜித்துக்காக உருவாக்கி வைத்திருந்த ஸ்கிரிப்ட்டை விட்டுவிட்டு... "பிங்க்'’படத்தை தமிழுக்கேற்பவும், அஜித்திற்கேற்பவும் சில மாறுதல்களைச் செய்தார் வினோத்.
பட வேலைகள் தொடங்கிவிட்டன. பாலிவுட்டின் பிரபல நடிகையான வித்யா பாலன் அஜித்திற்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கிறார்.
ஸ்ரீதேவிக்காக அவரின் கணவர் போனிக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார் அஜித்.
"பிங்க்'’ரீ-மேக் படத்தை விரைந்து முடித்து அஜித்தின் பிறந்தநாளான மே 1-ல் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் படம் முடிந்ததும் ஜூலை மாசம் போனியின் நிறுவனத்திற்கே அடுத்த படத்தையும் நடித்துத் தரவிருக்கிறார். இது வினோத் சொன்ன ஸ்கிரிப்ட் எனச் சொல்லப்படுகிறது.
இந்தப் படம் 2020 பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆக 2019-ல் பொங்கலுக்கு "விஸ்வாசம்', பிறந்தநாளுக்கு "பிங்க்'’ரீ-மேக்... என வருஷத்துக்கு ரெண்டு படம் என்கிறது அஜித்தின் கால்ஷீட் டைரி.
அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு இளம்பெண்ணுக்கு நியாயம் கிடைக்க போராடுபவராக ரேவதியும், அந்தப் பெண்ணுக்கு வாதாடும் வக்கீலாக பிரபுவும், குற்றவாளி தரப்பு வக்கீலாக நாசரும் நடித்த படம் "பிரியங்கா'. இதுவும் இந்திப் படம் "தாமினி'யின் ரீ-மேக்தான். பல வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்தப் படம் சிறந்த படமாக அமைந்திருந்தது.
அஜித்தும், மீடியா பிரபலம் ரங்கராஜ் பாண்டேவும் வக்கீலாகவும் நடிக்கும் இந்தப் படமும், கிட்டத்தட்ட அதே கதையமைப்பு கொண்டது என்றாலும்கூட... நவநாகரிக உலகில் பெண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாறுதலை இந்தச் சமூகம் தவறாகக் கருதக்கூடாது... என்பதைப் பற்றியது.
"அரசியலில் தீவிரமாக செயல்படவிருப்பதால் தொடர்ந்து சினிமாவில் நடிக்கமாட்டேன்'’ என தெரிவித்திருக்கும் கமல், "இந்தியன்-2'’படத்துடன் நடிப்பிற்கு முழுக்குப் போடுகிறார்.
நேதாஜியின் சிஷ்யராக, ஊழலுக்கு எதிராக போர்க்கோலம் பூணும் சேனாபதி கிழவனாக கமல் நடித்த ‘இந்தியன்’ வேஷம் இருபதாண்டுகளைக் கடந்தபின்பும் மக்கள் மனதில் நிற்கிறது. இந்தமுறை வெளிநாட்டிலிருந்து தன் வேட்டையை ஆரம்பிக்கிறார் சேனாபதி.
கமலின் வயதான தோற்றத்தை மேலும் துல்லியமாக காட்ட... பிராஸ்தடிக் மேக்-அப் எனும் ஒப்பனையை கமலுக்கு செய்துவருகிறது அமெரிக்காவைச் சேர்ந்த லீகஸி எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோ.
"இந்தப் படத்தில் கமலின் அரசியல் அம்சங்கள் இடம்பெறும்' எனச் சொல்லப்பட்ட நிலையில்... "எனது கட்சி, அரசியல் சார்ந்த விஷயங்கள் படத்தில் இருக்காது'’எனச் சொல்லியுள்ளார் கமல்.
அரசியலுக்கு வருவதாகவோ, இஷ்டமில்லை என்றோ’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத விஜய்... தனது படத்தின் கதைக் களங்களை பரபரப்பானதாக தேர்வுசெய்து நடித்துவருகிறார்.
எப்போதும்போல வருஷத்திற்கு ஒருபடம்தான் என்பது போல... 2018 தீபாவளிக்கு ‘"சர்கார்', 2019 தீபாவளிக்கு விஜய்-டைரக்டர் அட்லி படம்... என்கிறது விஜய்யின் கால்ஷீட் டைரி.
"மூன்றாவது முறையாக "தெறி', "மெர்சல்'’படங்களைத் தொடர்ந்து... இந்த கூட்டணிப் படம்... விளையாட்டுத் துறையில் நிகழும் அரசியலைப் பேசும் படம்' என தகவல்கள் வருகின்றன.
-ஆர்.டி.எ(க்)ஸ்