Advertisment

டூரிங் டாக்கீஸ்! ஜெ.வின் பாசப்பிள்ளை! அஜித்தின் அரசியல் வரலாறு!

ajith

காதல்கோட்டை!

னக்குத் தொழில் சினிமா! அரசியலில் எனக்கு ஆர்வமில்லை' என தெள்ளத்தெளிவாக அஜித் விட்ட அறிக்கை... அரசியல் களத்தில் எல்லோரின் ஆதரவையும் பரவலாகப் பெற்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். அதிலும் எந்த அரசியல் கட்சி உருவாக்கிய சர்ச்சையால் அஜித் இந்த அறிக்கையை வெளியிட்டாரோ... அந்த அரசியல் கட்சியே அஜித்தை பாராட்டியிருப்பதுதான் ஹைலைட்டான விஷயம்.

Advertisment

திருப்பூரில் பி.ஜே.பி.யில் பல்வேறு கட்சியினர் இணைந்த விழாவில், அஜித் ரசிகர்களும் ஒரு குழுவாக இணைந்தபோது... ""திரைப்பட கலைஞர்களில் நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப்போல அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இனி மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும். அஜித் ரசிகர்கள் மோடி தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும்''’எனப் பேசினார் தமிழக பி.ஜே.பி. தலைவர் டாக்டர் தமிழிசை.

இதற்குத்தான் அஜித், தன் நிலையை விளக்கி அறிக்கை அளித்தார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!

இதனை வரவேற்ற தமிழிசை, ""அஜித்தை நாங்கள் எங்கள் கட்சியில் சேர அழைக்கவில்லை. நான் டாக்டராக இருந்தபோது ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவியவர் அஜித். அதனால்தான் அவரை பாராட்டினேன். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை பா.ஜ.வுக்கு பதிலடி இல்லை... பா.ஜ.வுக்கு பதில்தான் சொல்லியிருக்கிறார். மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் ஒரு தெளிவான முடிவு எடுத்துள்ளார்''’என பாராட்டியுள்ளார். அமைச்சர் ஜெயகுமார், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி என பல தரப்பிலிருந்தும் அஜித்துக்கு பாராட்டு.

"ஏற்கனவே இருக்கிற நடிகத் தலைவர்கள் போதாதென்று இவரும் வருவாரோ?'’என ஒரு குழப்பம் நிலவிவந்த நிலையில்.

காதல்கோட்டை!

னக்குத் தொழில் சினிமா! அரசியலில் எனக்கு ஆர்வமில்லை' என தெள்ளத்தெளிவாக அஜித் விட்ட அறிக்கை... அரசியல் களத்தில் எல்லோரின் ஆதரவையும் பரவலாகப் பெற்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். அதிலும் எந்த அரசியல் கட்சி உருவாக்கிய சர்ச்சையால் அஜித் இந்த அறிக்கையை வெளியிட்டாரோ... அந்த அரசியல் கட்சியே அஜித்தை பாராட்டியிருப்பதுதான் ஹைலைட்டான விஷயம்.

Advertisment

திருப்பூரில் பி.ஜே.பி.யில் பல்வேறு கட்சியினர் இணைந்த விழாவில், அஜித் ரசிகர்களும் ஒரு குழுவாக இணைந்தபோது... ""திரைப்பட கலைஞர்களில் நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப்போல அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இனி மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும். அஜித் ரசிகர்கள் மோடி தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும்''’எனப் பேசினார் தமிழக பி.ஜே.பி. தலைவர் டாக்டர் தமிழிசை.

இதற்குத்தான் அஜித், தன் நிலையை விளக்கி அறிக்கை அளித்தார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!

இதனை வரவேற்ற தமிழிசை, ""அஜித்தை நாங்கள் எங்கள் கட்சியில் சேர அழைக்கவில்லை. நான் டாக்டராக இருந்தபோது ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவியவர் அஜித். அதனால்தான் அவரை பாராட்டினேன். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை பா.ஜ.வுக்கு பதிலடி இல்லை... பா.ஜ.வுக்கு பதில்தான் சொல்லியிருக்கிறார். மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் ஒரு தெளிவான முடிவு எடுத்துள்ளார்''’என பாராட்டியுள்ளார். அமைச்சர் ஜெயகுமார், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி என பல தரப்பிலிருந்தும் அஜித்துக்கு பாராட்டு.

"ஏற்கனவே இருக்கிற நடிகத் தலைவர்கள் போதாதென்று இவரும் வருவாரோ?'’என ஒரு குழப்பம் நிலவிவந்த நிலையில்... அஜித்தின் அறிக்கையின் மூலம் அவர் அரசியலுக்கு வரவிரும்பவில்லை என கண்டுகொண்டு... ‘"தல வரல... ஸ்வீட் எடு... கொண்டாடு'’ என அஜித்தை பாகுபாடில்லாமல் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

விஸ்வாசம்!

அஜித் அரசியல் வலையில் இதற்கு முன் சிக்கிய தில்லையா?

சிக்கினார். ஆனாலும் சாதுர்யமாக வெளியே வந்துவிட்டார்.

Advertisment

"அது எப்படி?'’என அஜித்துக்கு நெருக்கமானவர்களின் வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது? பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

ajith

ஜெயலலிதா, கலைஞர்... என இரு தலைவர்கள்மீதும் மிகுந்த மதிப்பு கொண்டவர் அஜித். அவரின் திருமணத்திற்கு இரு தலைவர்களுமே சென்று வாழ்த்தினார்கள். ஆயினும் அஜித்தை ஜெ., மகன்போல பாவித் தார். முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் இல்லத் திருமண விழாவிற்கு வந்த ஜெயலலிதாவிடம், "வணக்கம்மா... டி.வி.யில உங்க பிரச்சாரக் கூட்டங்களப் பார்த் தேம்மா... மக்கள் ஆதரவு உங்களுக் குத்தாம்மா'’என அரசியல் பேசினார் விஜய். (அதன்பின் விஜய் மக்கள் இயக்கம் 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது) அந்த திருமண விழாவுக்கு வந்திருந்த அஜித் தம்பதி, ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.

பிரபலமான ஒரு போலீஸ் அதிகாரியின் டாக்டர் மனைவி, அஜித் குடும்பத்திற்கு ஃபேமிலி டாக்டர்போல ஆனார். அதனால் அஜித்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அந்த போலீஸ் அதிகாரிக்கு கிடைத்தது. ஜெயலலிதா மீது அஜித் வைத்திருக்கும் தனிப்பட்ட மதிப்பு, அஜித்தின் நல்ல குணங்கள் குறித்து ஜெ.விடம் அந்த அதிகாரி அவ்வப்போது சொல்வதுண்டு. அதனால் ஜெ.வின் மனதில் அஜித்திற்கு உயர்ந்த இடம் கிடைத்தது. பிற்காலத்தில்... ஒரு கட்டத்தில் அஜித்தை அ.தி.மு.க.விற்குள் தலைமையிடத்திற்கு கொண்டுவரும் திட்டம்கூட ஜெ.வுக்கு இருந்தது. இதுபற்றி விளக்கமாகச் சொல்லாமல் பூடகமாக அஜித்திடம் அந்த போலீஸ் அதிகாரியும் சொல்லியிருக் கிறார்.

பகைவன்!

திரைத்தொழிலாளர்களுக்கு வீட்டு மனைத் திட்டத்தை அறிவித்த கலைஞருக்கு பாராட்டுவிழா நடந்தபோது “""என்னை மிரட்டிக் கூப்பிடுறாங்கய்யா''’என மேடையி லேயே சொன்னார் அஜித். அது பெரிய சர்ச்சையாகி... தி.மு.க.வினர், அஜித்தை பகைவனாக பார்க்கும் அளவிற்கு பரபரப் பானது. இந்த அரசியல் சர்ச்சை வலையிலிருந்து மீட்கும்படி... ரஜினியின் உதவியோடு கலைஞரை சந்தித்தார் அஜித். அஜித்தை அந்தப் பிரச்சினையிலிருந்து சுமுகமாக மீட்டார் கலைஞர்.

ரெட்!

jayalalitha

2011 சட்டமன்றத் தேர்தலின்போது அஜித் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அந்தந்த ஊர்களில் தங்களுக்கு பிடித்தமான கட்சி வேட்பாளர்களை ஆதரித்தனர். இதை தலைமை நிர்வாகிகள் மூலமாக அஜித் கண்டித்து தடை போட்டபோதும், தலை மைக்கு அடங்காமல் சில ரசிகர்கள் கட்சிகளுக்கு ஆதரவைத் தர... தேர்தல் முடிந்தபின்... இதுபற்றிய ஒட்டுமொத்த விபரங்களையும் திரட்டிய அஜித், ‘"என் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்வது சரியாக வராது'’ என முடிவெடுத்து... தனது அஜித் நற்பணி இயக்கத்தை கலைத்தார். 2011 ஏப்ரல் 29-ஆம் தேதி அந்த முடிவை அறிக்கையாகவும் வெளியிட்டார்.

""எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். கோஷ்டிப் பூசல், ஒற்றுமை யின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல் படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தைப் பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னு டைய எண்ண ஓட்டத் திற்கு உகந்ததாக இல் லை. நலத்திட்டங்கள் செய்வதற்கு ‘இயக்கம்’ என்ற அமைப்பு வேண் டாம், நல் உள்ளமும், எண்ணமும் போதும் என்பதே என் கருத்து. இன்றுமுதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்''’என அறிவிப்பை வெளியிட்டார்.

மன்றத்தை கலைத்தபோதும் அஜித்துக்கு ரசிகர்களிடம் இருக்கும் செல்வாக்கு பெருகியதே தவிர... சரிய வில்லை.

அட்டகாசம்!

சமூக வலைத்தளங்கள் தாக்கம் பெரிய அளவில் ஆரம்பித்தவுடன்... அஜித் ரசிகர்கள் சிலர் பல பெயர்களில் குழுவாக குறிப்பிட்டு மற்ற நடிகர்களை தாக்குவது, அரசியல் கட்சிகளை கலாய்ப்பது, தலைவர்களை கடுமையாக விமர்சிப்பது அதிகரித்தது. இதை எல்லா ரசிகர்களும் செய்தாலும், அஜித்திற்கு இந்தப்போக்கு பிடிக்கவில்லை. அதிலும் அஜித் kalaingarபெயரிலேயேகூட கணக்குத் துவங்கி கலாய்ப்புப் பணிகளைச் செய்தனர். இது டி.வி.களிலும் விவாதப் பொருளானது. இந்த அட்டகாசத்திற்கு முடிவு கட்ட... தனது சட்ட ஆலோசனை நிபுணர்கள் மூலம் 19 ஆகஸ்ட் 2017-ல் ஒரு பொதுஅறிவிப்பு வெளியிடச் செய்தார் அஜித்.

""எனது கட்சிக்காரர் அஜித்குமார் எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்தவர் இல்லை. எனது கட்சிக்காரர் தனக்கு அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றம் இல்லை என்றும், அதிகாரப்பூர்வ சமூக வலைப்பக்கங்கள் இல்லை என்றும் தெரிவிக்கிறார். ஆயினும், சில தனிப்பட்ட, சுய அதிகாரம் எடுத்துக்கொண்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்களுடைய அரசியல் ரீதியான கருத்துகளை எனது கட்சிக்காரரின் கருத்தாக பிரகடனப்படுத்தி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் வன்மமாக பேசிவருவது என் கட்சிக்காரருக்கு கடும் மன உளைச்சலை தருகிறது''’என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

வேதாளம்!

அஜித் இப்படி தனிப்பட்ட முறையிலும், சட்டரீதியாகவும் அறிவிப்பு செய்தும் சமூக வலைப்பக்கங்களில் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் மற்றவர்களை கலாய்ப்பதும் தொடர்ந்தது. மீண்டும் அரசியல் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளங்களாக திருப்பூர் பகுதியைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஒரு குழுவாக ‘"அஜித் ரசிகர்கள்'’ என்ற அடையாளத்துடன் பி.ஜே.பி.யில் இணைந்ததால்... 21 ஜனவரி 2019-ல் அறிக்கை வெளியிட்டுள்ளார் அஜித்.

""எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட் டில் எந்த ஆர்வமும் இல்லை'' என்றும், ""நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதையேதான் நான் வலியுறுத்துகிறேன். அரசியல் சார்ந்த எந்தவொரு வெளிப்பாடையும் நான் தெரிவிப்பதில்லை. என் ரசிகர்களும் அவ்வாறே இருக்கவேண்டும் என விரும்புகிறேன்''’என்றும், ""அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை நான் யார்மீதும் திணிப்பதில்லை. மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்கவிட்டதும் இல்லை. என் பெயரோ, புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை''’என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் அஜித்.

விவேகம்!

tamilisai

அஜித் மீது ஜெ.வுக்கும், ஜெ.மீது அஜித்திற்கும் இருந்த பரஸ்பர மதிப்பினாலும்,. அஜித்தை வைத்து ஜெ. எண்ணியிருந்த பிற்கால திட்டத்தாலும் தன் அரசியல் நிலைப்பாடு குறித்து மௌனமாகவே இருந்தார் அஜித்.

2011 அறிக்கையிலும், 2017-ல் சட்டக்குழு மூலம் வெளியிட்ட அறிவிப்பிலும் "நான் கட்சி அரசியல் சார்பற்றவன். என் பெயரில் அரசியல் செய்யக்கூடாது'’ என்று மட்டுமே சொல்லியிருந்தார் அஜித். ‘"அரசியல் ஈடுபாட்டில் ஆர்வமில்லை'’ என அந்த அறிக்கைகளில் சொல்லவில்லை.

ஜெ.வின் எதிர்பாராத மரணமும், அதைத் தொடர்ந்து நிகழும் அரசியலும்... அஜித்தை ‘"என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே. எனக்கு அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு'’ என்கிற முடிவை அஜித் தீர்க்கமாக எடுக்கக் காரணமாக அமைந்திருக்கிறது.

-இரா.த.சக்திவேல்

nkn290119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe