டூரிங் டாக்கீஸ்..!

sridevi

டிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்றிருந்தார்.

24-ஆம் தேதி இரவு... ஸ்ரீதேவி தான் தங்கியிருந்த ஜிமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் இறந்துகிடந்தார். பார்ட்டியில் மது அருந்தியிருந்த நிலையில் குளித்தபோது... மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக மருத்துவ அறிக்கை சொன்னது.

ஆனால்... இதில் மர்மம் இருப்பதாக அரசல்புரசலாக பேசப்பட்டும் வந்தது.

sridevi

""ஸ்ரீதேவி பாலிவுட்டிற்கு போன காலத்திலிருந்து அவருக்கு உதவிகர மாக செயல்பட்டு, அவரின் கணவராகவும் ஆனவர் போனிகபூர். இரண்டு மகள்கள், கணவர் என மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்தார். ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் கிளப்புவது... அதிலும் போனிகபூர் மீது சந்தேகப்பார்வை வீசுவது சரி

டிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்றிருந்தார்.

24-ஆம் தேதி இரவு... ஸ்ரீதேவி தான் தங்கியிருந்த ஜிமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் இறந்துகிடந்தார். பார்ட்டியில் மது அருந்தியிருந்த நிலையில் குளித்தபோது... மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக மருத்துவ அறிக்கை சொன்னது.

ஆனால்... இதில் மர்மம் இருப்பதாக அரசல்புரசலாக பேசப்பட்டும் வந்தது.

sridevi

""ஸ்ரீதேவி பாலிவுட்டிற்கு போன காலத்திலிருந்து அவருக்கு உதவிகர மாக செயல்பட்டு, அவரின் கணவராகவும் ஆனவர் போனிகபூர். இரண்டு மகள்கள், கணவர் என மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்தார். ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் கிளப்புவது... அதிலும் போனிகபூர் மீது சந்தேகப்பார்வை வீசுவது சரியல்ல...'' என்கிற கருத்தும் அப்போது நிலவியது. ஸ்ரீதேவி மறைந்து ஓராண்டு ஆகவிருக்கும் நிலையில்... ஒரு திரைப்படம்... மீண்டும் ஸ்ரீதேவி யின் மரணம் குறித்து விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீதேவியின் அதிதீவிர ரசிகரான டைரக்டர் ராம்கோபால் வர்மா... 2017-ல் ஒரு திரைப் படம் எடுத்தார்.

ஒரு இளம் டீச்சர் மீது பள்ளி மாணவன் ஒருவனுக்கு ஏற்படும் ஈர்ப்பை வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத் திற்கு, தனக்குப் பிடித்தமான நடிகையான ஸ்ரீதேவியின் பெய ரையே சூட்டினார். "ஸ்ரீதேவி' என்ற பெயரில் வெளியான அந்தப் படத்தின் கவர்ச்சியான புகைப்படங்கள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில்....

sridevi

"ஸ்ரீதேவி' என்கிற படத் தலைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தார் போனிகபூர். ஆனால் அந்த எதிர்ப்பை வர்மா பொருட்படுத்தவில்லை. இதையடுத்து... "ஸ்ரீதேவியின் புகழுக்கு இந்தப் படம் குந்தகம் விளைவிக்கும்' எனச் சொல்லி சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக வர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து... தனது படத்தின் தலைப்பை "சாவித்ரி' என மாற்றினார் வர்மா.

இப்போதும் ஒரு திரைப் படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளார் போனிகபூர்.

"ஒரு அடார் லவ்' மலையாளப் படத்தின் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் அந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியில் தன் புருவத்தால் பருவக் குறும்பு செய்து, கண்ணடித்த காட்சி உலக ஃபேமஸ் ஆனது. சமீபத்தில் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்து... ராகுல்காந்தி கண்ணடித்தார். அந்த அளவுக்கு இந்தப் புருவப் பெண்ணின் சேட்டை பிர பலம்.

அந்த கண்ணடி பிரியா நடிக்க, கேரளாவைச் சேர்ந்த கதாசிரியர்-இயக்குநர் பிரசாந்த் மம்புலி பலமொழிகளில் எடுத்துவரும் படம் "ஸ்ரீதேவி பங்களா'.

இது ஒரு சினிமா நடிகை யின் கதை. அந்த நடிகையின் பெயர் ஸ்ரீதேவி. ஒரு சிறுமிக்கு "ஸ்ரீதேவி' என ஆட்டோ கிராஃப் போட்டுத்தருகிறார் அந்த நடிகை. புகைப்பிடிக் கிறார், மது அருந்துகிறார், சினிமா படப்பிடிப்பில் கவர்ச்சியாக நடிக்கிறார். வீட்டில் குதூகலமாக இருக் கிறார். ஷவரில் நனைந்தபடி பாத்ரூமில் கதறி அழுகிறார், இறுதியில்... ஒரு பெரிய குளியல் தொட்டியில் அந்த நடிகையின் இரண்டு கால்களின் பாதப்பகுதியில் விறைத்த நிலையில் காணப்படுகிறது.

"ஸ்ரீதேவி பங்களா' படத் திற்காக வெளியிடப்பட்டிருக் கும் இந்த முன்னோட்ட டீஸர் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது வலைத்தளங் களில்.

இது ஸ்ரீதேவியின் குடும்பத்தினரை அதிர்ச்சி யாக்கியுள்ளது.

ஸ்ரீதேவியின் மூத்த மகளும், நடிகையுமான ஜான்வி கபூர், ஒரு பிரஸ்மீட்டில் இந்தப் படம் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டதால் மனம் நொந்து வெளியேறியிருக் கிறார்.

இந்நிலையில்... படத்தின் டைரக்டர் பிரசாந்த் துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி யுள்ளார் போனிகபூர்.

""ஸ்ரீதேவி என்பது பொதுவான பெயர்தான். இது ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த கதை. அதை த்ரில்லர் படமாக எடுத்துவருகிறோம். நாங்கள் சட்டரீதியாக இதை சந்திப்போம்'' என விளக்கம் சொல்லியுள்ளார்.

""நான் ஒரு நடிகை யாக நடிக்கிறேன். ஸ்ரீதேவி என்பது என கேரக்டர் பெயர். அவ்வளவுதான்'' என பிரியாவும் சொல்கிறார்.

’ஸ்ரீதேவி என்கிற பெயரை பயன்படுத்தக் கூடாது. அதை நோக்கித்தான் போனியின் சட்ட நடவடிக்கை இருக்கும்’ என போனிகபூரின் தரப்பில் சொல்லப் படுகிறது.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn250119
இதையும் படியுங்கள்
Subscribe