Advertisment

கோலிவுட்டில் உற்சாகப் பொங்கல்! டூரிங் டாக்கீஸ்!

ajith

ajith

Advertisment

"பொங்கல் சூடே இன்னும் ஆறாத நிலையில்... இந்த ஆண்டின் தீபாவளி எந்தளவுக்கு சூடாக இருக்கும்' என பேசப்பட்டு வருகிறது இண்டஸ்ட்ரியில் இடையில் சில படங்கள் வசூல் ரீதியாக சொதப்பியதால் ரஜினியின் சினிமா மார்க்கெட்டில் சரிவு ஏற்பட்டதாக பேசப்பட்டது. ஆனால்... "பேட்ட'’படம் மூலம் "தனக்கான இடம் தனக்கானதுதான்' என்பதை நிரூபித்துவிட்டார் ரஜினி.

தனக்கு பிந்தைய தலைமுறை நடிகரான அஜீத்தின் "விஸ்வாசம்'’படத்துடன் ரஜினியின் "பேட்ட'’வெளியாகி டஃப் ஃபைட் கொடுத்துள்ளது. விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகவிருக்கும் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதனால் ரஜினி-ஏ.ஆர்.ம

ajith

Advertisment

"பொங்கல் சூடே இன்னும் ஆறாத நிலையில்... இந்த ஆண்டின் தீபாவளி எந்தளவுக்கு சூடாக இருக்கும்' என பேசப்பட்டு வருகிறது இண்டஸ்ட்ரியில் இடையில் சில படங்கள் வசூல் ரீதியாக சொதப்பியதால் ரஜினியின் சினிமா மார்க்கெட்டில் சரிவு ஏற்பட்டதாக பேசப்பட்டது. ஆனால்... "பேட்ட'’படம் மூலம் "தனக்கான இடம் தனக்கானதுதான்' என்பதை நிரூபித்துவிட்டார் ரஜினி.

தனக்கு பிந்தைய தலைமுறை நடிகரான அஜீத்தின் "விஸ்வாசம்'’படத்துடன் ரஜினியின் "பேட்ட'’வெளியாகி டஃப் ஃபைட் கொடுத்துள்ளது. விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகவிருக்கும் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதனால் ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தை தீபாவளிக்கே வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.ரஜினியை வைத்து எடுக்கவிருக்கும் படத்திற்கு மூன்று கதைகளைச் சொல்லியுள்ளார் முருகதாஸ். இதில் மூன்றாவது கதைதான் ஓ.கே.வாகியுள்ளதாம். இந்தப் படத்திற்கு "நாற்காலி'’என டைட்டில் வைக்கவிருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால்... ‘"இந்த டைட்டில் இல்லை... இது வதந்தி'’என தெரிவித்துள்ளார் முருகதாஸ். இந்த ஆண்டின் தீபாவளிக்கு ரஜினி படமும், விஜய் படமும் மட்டும் மோதவில்லை. சிம்புவை வைத்து சீமான் இயக்கவிருக்கும் படத்தையும் தீபாவளியில் வெளியிடவிருப்பதாக சீமான் சொல்லியுள்ளார்.

Advertisment

அஜீத் நடித்த "விவேகம்'’படத்தில் ஏற்பட்ட இழப்பைச் சரிக்கட்ட... அப்படத்தை தயாரித்திருந்த சத்யஜோதி நிறுவனத்திற்கு "விஸ்வாசம்'’படத்தை நடித்துக்கொடுத்தார். இது செம ஹிட்டாகியுள்ளது.இதேபோல... தனுஷ் நடித்த "தொடரி'’படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிக்கட்ட அப்படத்தை தயாரித்திருந்த சத்யஜோதி நிறுவனத்திற்கு.. இரண்டு படங்கள் நடித்துத்தர கால்ஷீட் கொடுத்துள்ளார் தனுஷ்.

ajith

வரவிருக்கும் பிப்ரவரி மாதத்தில் வெளியாவதற்குப் பல பெரிய படங்கள் தயாராக இருக்கின்றன.சிம்புவின் "வந்தா ராஜாவாத்தான் வருவேன்', பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் நடித்திருக்கும் "வர்மா', கார்த்தி நடித்திருக்கும் "தேவ்', ஜீ.விபிரகாஷ் நடிப்பில் ராஜீவ்மேனன் இயக்கியிருக்கும் "சர்வம் தாளமயம்', சேரன் இயக்கியிருக்கும் ‘"திருமணம்', உதயநிதி நடித்து, தயாரித்திருக்கும் "கண்ணே கலைமானே',’டைரக்டர் ராமின் "பேரன்பு'’உட்பட இருபது படங்கள் வெளியிடும் வேலைகள் மும்முரமாக நடக்கின்றன.

"ஒரு மாசத்துல இம்புட்டுப் படம் தாங்குமா?'’ என வர்த்தக வட்டாரங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன.

பிக்பாஸ்’ புகழ் ரைசா நாயகியாக நடித்த "பியார் பிரேமா காதல்'’படத்தை தயாரித்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜா. மீண்டும் ரைசாவை நாயகியாக வைத்து "ஆலிஸ்'’ என்கிற திகில் படத்தை தயாரிக்கிறார் யுவன்.

அஜீத்தை வைத்து படம் தயாரிக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார் குஷ்பு. சில ஆண்டுகள் முயற்சி, இந்த ஆண்டில் குஷ்புவுக்கு பலிக்கும்போல் தெரிகிறது."மயிலு' ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜீத். பட வேலைகள் தொடங்கிவிட்டன. இதில் அரசியல்வாதி வீட்டுப் பிள்ளையால் பாதிக்கப்படும் மூன்று இளம்பெண்களை சட்டரீதியாக காப்பாற்றும் வக்கீல் வேஷத்தில் நடிக்கிறார் அஜீத். இது அமிதாப் வக்கீலாக நடித்த "பிங்க்'’இந்திப்பட ரீ-மேக் என்பதால் விரைவில் படப்பிடிப்பை முடித்து அஜீத் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செஞ்சிருக்காங்களாம்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

touringtalkies ajith vijay rajini
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe