Advertisment

டூரிங் டாக்கீஸ்! பழசு... ஆனாலும் மவுசு!

touringtalkies

பொங்கலின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று பழையன கழித்தல்!

இந்த வருட பொங்கல் சினிமாவில் வியப்பும், திகைப்புமாக ‘பழைய களித்தல்’ நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

Advertisment

ரஜினியின் ‘"பேட்ட'’, அஜீத்தின் "விஸ்வாசம்'’ஆகிய இரண்டு படங் களுக்குமே வரவேற்பும், வசூலும் சிறப்பான சம்பவங்கள்போல அமைந்திருக்கிறது.

அமைப்பு ரீதியாக இயங்கிவரும் ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு சற்றும் சளைக்காமல் அமைப்பு ரீதியாக இயங்காத அஜீத் ரசிகர்களின் கொண்டாட்டமும் அமைந்திருக்கிறது.

இரு படங்களுமே பழைய "டச்'சோடு வந்திருக்கிறபோதும் இரு தரப்பு ரசிகர்களுக்குமே ‘நல்ல படம்’என்கிற திருப்தி கிடைத்திருக்கிறது.

Advertisment

rajini

1970-களின் இறுதியிலிருந்து ரஜினியை ரசித்துவரும் அவரின் ரசிகர்களும் இப்போது நடுத்தரவயதைத் தாண்டியவர்களாக இருக்கிற போதும்... தங்கள் தலை வரை "பெருசு'வாக பார்க்க விரும்ப வில்லை

பொங்கலின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று பழையன கழித்தல்!

இந்த வருட பொங்கல் சினிமாவில் வியப்பும், திகைப்புமாக ‘பழைய களித்தல்’ நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

Advertisment

ரஜினியின் ‘"பேட்ட'’, அஜீத்தின் "விஸ்வாசம்'’ஆகிய இரண்டு படங் களுக்குமே வரவேற்பும், வசூலும் சிறப்பான சம்பவங்கள்போல அமைந்திருக்கிறது.

அமைப்பு ரீதியாக இயங்கிவரும் ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு சற்றும் சளைக்காமல் அமைப்பு ரீதியாக இயங்காத அஜீத் ரசிகர்களின் கொண்டாட்டமும் அமைந்திருக்கிறது.

இரு படங்களுமே பழைய "டச்'சோடு வந்திருக்கிறபோதும் இரு தரப்பு ரசிகர்களுக்குமே ‘நல்ல படம்’என்கிற திருப்தி கிடைத்திருக்கிறது.

Advertisment

rajini

1970-களின் இறுதியிலிருந்து ரஜினியை ரசித்துவரும் அவரின் ரசிகர்களும் இப்போது நடுத்தரவயதைத் தாண்டியவர்களாக இருக்கிற போதும்... தங்கள் தலை வரை "பெருசு'வாக பார்க்க விரும்ப வில்லை. சினிமாவில் அவரை துடிப்பான ஹீரோவாகவே பார்க்க ஏங்கி னார்கள்.

அந்த ஏக்கம் ரஜினி ரசிகரான டைரக்டர் கார்த்திக் சுப்புராஜுக்கும் இருந்த தால்... தனது ஸ்டைலை விட்டுவிட்டு... ரஜினி ஸ்டைலிலேயே "பேட்ட'’ படத்தைத் தந்துள்ளார்.

சிலபல வருடங் களாக திரையில் தாங் கள் தேடிக்கொண்டிருந்த துறுதுறு ரஜினியை... பழைய ரஜினியை... "பேட்ட'’யில் சந்தித்த தால்... பழையன களிக் கிறார்கள் ரசிகர்கள்.

பிரபலங்களுக்குமே இந்த பழைய ஸ்டைல் ரஜினியை மிகவும் பிடித்துவிட்டது. கஸ்தூரி, ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் மற்றும் தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு உட்பட பலரும் இளமை ரஜினியை பாராட்டியுள்ளனர்.

ரஜினியின் பழைய வேகம் "பேட்ட'யில் சூடுபிடித்துள்ளதால் இப்படிக் களிப்புறுகிறார்கள்.

சமீபகால ரஜினி படங்களைப் பார்த்து ரஜினியை விமர்சித்துக் கொண்டிருந்த பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா... "எப்பவும் சூப்பர்ஸ்டார் ரஜினி'’எனச் சொல்லியுள்ளார்.

இந்த ஜெனரேஷன் ரசிகர் களையும் ரஜினி தனது "பேட்டை'க் குள் கொண்டு வந்திருப்பது சிறப்பு.

"என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தியே இப்படி நடிக்க வச்சார் கார்த்திக் சுப்புராஜ்'’என தனக்கு கிடைத்த பாராட்டுக்கு "டைரக்டர் செயல்'’என பெருந் தன்மையாகச் சொல்லியுள்ளார் ரஜினி.

"அடுத்த சூப்பர்ஸ்டார்’ ‘மக்கள் சூப்பர்ஸ்டார்'’என ஆளாளுக்கு பட்டம் தேடிப் பறந்த நிலையில்... ரஜினி தனது மாஸ் என்ன என்பதை வலிமையாக நிரூபித்திருக்கிறார்.

ருபது வருடங்களுக்கு முன்னால் வந்திருக்க வேண்டிய படம்’ என்றும், ‘டி.வி. சீரியல் போன்ற கதை’ அஜீத்தின் "விஸ்வாசம்'’

-இப்படித்தான் சமூக வலைத்தளங்களில் தொடக்கத்தில் கருத்து பரவியது.

ajith

"கிராமம், விவசாயம், கூட்டுக் குடும்பம், திருவிழா...' என்கிற கதையமைப்பு அப்படி எண்ண வைத்தபோதும்... கணவன்-மனைவி பிரிவு, குழந்தை பாசம்... என சமூகத்தின் இன்றைய நிலையோடு பொருத்தி... படம் முடிந்து வெளிவரும்போது ரசிகனுக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தி யிருக்கிறது.

ஆக்ஷனும், சென்ட்டிமென்ட்டும் கலந்த அஜீத்தின் நடிப்பு லெவலும் விஸ்வாசத்தில் வீரியமாக இருக்கிறது.

அதனால்.. "தலடா'’என ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள்.

ரஜினியின் பழைய ஸ்டைல் நடிப்பும், அஜீத்தின் பழைய பாணி கதையமைப்பும் அவர்களின் ரசிகர்களை களிப்புறச் செய்வதுபோல... அந்தப் படங்களின் வர்த்தகர்களையும் களிப்புறச் செய்துள்ளதாக பரவலாக சொல்லப்பட்டாலும்... அதை அதிகாரப்பூர்வமாகத் தெரிந்துகொள்ள... தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் கேட்டோம்.

""சென்னை நகரத்திலும், கோவை நகரத்திலும் ரஜினியின் "பேட்ட'’வசூலில் முந்தி யிருக்கு. தமிழகம் முழுமைக்குமாகப் பார்த்தால்... அஜீத்தின் ‘"விஸ்வாசம்'’ வசூலில் முன்னணியில் இருக்கு. அதே சமயம்... ரஜினி சாருக்கு இந்தியா முழுவதிலும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பெரிய செல்வாக்கு உண்டு. இந்திய அளவிலும், உலக அளவிலும் "பேட்ட'’வசூலில் முன்னணியில் இருக்கு. வசூலில் இரண்டு படங்களுமே குறை வைக்கவில்லை.

"பேட்ட'’படம் ரஜினி ரசிகர்களுக்கு திருப்தியாக இருந்தாலும்... பொதுவான ரசிகர்கள் ‘படம் நீளமாக இருப்பதாக’ சொல்வதால்... 18 நிமிட காட்சிகளை நீக்கி... இரண்டரை மணிநேர படமாக மாற்றும் வேலைகளில் கார்த்திக் சுப்புராஜ் ஈடுபட்டுள்ளார்.

இதுவரைக்கும் ரஜினி ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் மட்டுமே திரையரங்குகளை ஆக்கிரமித் திருக்கிறார்கள். தொடர்விடுமுறையால் இனி பொதுமக்களும் வருவார்கள். அதன்பிறகு... வசூலில் மக்களின் வரவேற்புக்கு தகுந்த மாதிரி மாறுதல் இருக்கும். "பேட்ட'யும், ‘"விஸ்வாச'மும் வசூலை பொறுத்தவரைக்கும் சர்க்கரைப் பொங்கல்தான்’’

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn180119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe