பொங்கல் விருந்தாக ரஜினியின் "பேட்ட', அஜீத்தின் "விஸ்வாசம்'’மற்றும் சிம்புவின் ‘"வந்தா ராஜாவாகத்தான் வருவேன்'’படங்கள் வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் சிம்பு படம் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது.
ஆக இந்தப் பொங்கல் ரஜினி ரசிகர்களுக்கும், அஜீத் ரசிகர்களுக்கும்தான். கூடவே ‘"பேட்ட'யால் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.
கூடவே திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். காரணம்... நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களின் செல்வாக்குப் பெற்ற இரண்டு முக்கிய ஹீரோக்களின் படம் வெளியாவதால்... திரையரங்கம் திருவிழா எஃபெக்ட்டில் மின்னுமே.
அதிலும் பல ஊர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளைக் கொண்ட காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் "பேட்ட'யில் "விஸ்வாச'’பொங்கல் வரப்போகுதே.
தேனி மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த தூக்குதுரை என்கிற இளைஞனாக அஜீத், நயன்

தேனி மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த தூக்குதுரை என்கிற இளைஞனாக அஜீத், நயன் தாரா நடிக்க... சிவா இயக்கத்தில் "சத்யஜோதி ஃபிலிம்ஸ்' தயாரித்திருக்கும் படம் ‘"விஸ்வாசம்.'
கிராமம், நகரம் என இருதளத்தில் பயணிக்கிற கதை. குடும்ப நிம்மதியைக் கெடுத்தவர்களைப் பழிவாங்கும் கதை.
பாட்டு, ஃபைட்டு, ஃபேமிலி சென்ட்டிமென்ட்... என அஜீத் ரசிகர்களின் உற்சாகத்துக்கு ஏற்ப தயாராகியிருக்கும் படம் இது.
"விஸ்வாசம்'’பட பிரிண்ட் சென்ஸாருக்கு எப்படிப் போச்சோ... அப்படியே... கத்திரி படாம... ‘"எல்லாரும் பார்க்கலாம்'’என "யு'’சான்று பெற்று வந்திருக்கிறது.
விழா நாளுக்கு சில நாட்கள் முன்பாகவே படத்தை வெளியிடும் ஸ்டைலை அஜீத் படங்கள்தான் தொடங்கி வைத்தது. அதன்படி... "விஸ்வாசம்'’ஜனவரி 10-ஆம் தேதியே வெளியாகலாம்.
ஆணவக்கொலை உள்ளிட்ட சமூக பிரச்சினைகளை வைத்து கிராமம், நகரம் என இரு தளங்களில் பயணிக்கும் ரஜினியின் "பேட்ட'’படத்திற்கு வன்முறைக் காட்சிகள் காரணமாக யு/ஏ தணிக்கைச் சான்று கிடைத்திருப்பதை, கடந்த இதழில் சொல்லியிருந்தோம்.
வார்த்தைகளை மியூட் செய்வது, மாற்று வார்த்தைகளால் நிரப்புவது, நீளத்தை குறைப்பது... என "பேட்ட'’ படத்தை சில திருத்தங்களோடு அனுமதித்திருக்கிறது சென்ஸார் போர்டு.
ரீல் நம்பர் 1-ல் 286-வது ஷாட்டில் "ஆட்ட முடியாது'’என்ற வார்த்தையையும், 448-வது ஷாட்டில் ’"...தா...'’என்கிற சென்னை பாஷை வார்த்தையையும் ஸைலண்ட் செய்யச் சொல்லிவிட்டது. இரட்டை அர்த்தம் மற்றும் பொது நாகரிகத்துக்கு எதிரானது என்பதால் இந்த ‘மியூட்.
ரீல் 3-ல் ஷாட் 92-ல் பின்புறத்தைக் குறிக்கும் கொச்சை வார்த்தையை நீக்கச் சொல்லி, அதற்குப் பதிலாக "ஹள்ள்' என்கிற வார்த்தையை பயன்படுத்தச் சொல்லிவிட்டது.
ரீல் 5-ல் ஷாட்-186 மற்றும் 237-ல் விதவைப் பெண்களைக் குறிக்கும் கொச்சை வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது. இது பெண்களை இழிவு செய்வதாக உள்ளதால்... அந்த வார்த்தையை ‘மியூட்’ செய்யச் சொல்லிவிட்டது.
ரீல் 7-ல் ஷாட்-167 முதல் 227-வரை துப்பாக்கிச் சண்டைக் காட்சியில் வன்முறை தூக்கலாக இருந்ததால்... காட்சியின் நீளத்தை குறைக்கச் சொல்லிவிட்டது. இதேரீலில் ஷாட் 1, 2 மற்றும் 3-ல் வாய்ஸ்ஓவரில் யாரோ அழைக்கும் "ராகுல்' என்கிற பெயரை மாற்றச் சொல்லிவிட்டது. "இதற்கு ‘மானநஷ்டம் உருவாக்கலாம்'’என்கிற காரணத்தைச் சொல்லியதுடன்... இதேரீலில் ஷாட் 73-ல் "கூ...'’என்கிற வார்த்தையை ’மியூட்’ செய்துள்ளது. "மக்கு' என்பதைக் குறிக்கும் "கூ'’என்று சொன்னபோதும்... அதை சைலண்ட் பண்ணிவிட்டது.
ரீல் 8-ல் ஷாட்-192 மற்றும் 260-261-ல் ரத்தக்களறி மற்றும் வன்முறை அதிகமிருந்ததால்... அதன் நீளத்தை ட்ரிம் செய்யச் சொல்லிவிட்டது.
மற்றபடி பெரியளவில் சென்ஸாரின் சிஸரில் "பேட்ட'’சிக்கவில்லை.
ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியிருப்பதால்... "ரஜினி ரசிகர்கள் விரும்பிய ரஜினி படமாக இது இருக்கும்...' என்கிற பேச்சு நிலவுகிறது. அதற்கேற்ப.. கிடா மீசையுடன் கூடிய ரஜினியின் தோற்றம்... பழைய ரஜினியை நினைவூட்டுவதாக ரசிகர்கள் குஷியாகச் சொல்கிறார்கள். அதிலும் த்ரிஷாவுக்கு ஏற்ற இளமையாக ரஜினி தெரிகிறார். பழிவாங்கும் படலத்தில் ரஜினிக்கு ஜோடி சிம்ரன். விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட இந்தத் தலைமுறை நடிகர்கள், படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள்.
"படையப்பா'’படத்திலிருந்து, ரஜினி படங்களில் நிறைய நட்சத்திர கூட்டம் இருப்பதால்... எல்லாருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக படத்தின் நீளம் அதற்கேற்ப இருக்கும். ‘"பேட்ட'யும் மூன்றுமணி நேரத்திற்கு எட்டு நிமிஷம் மட்டுமே குறைவான நேரம் ஓடும் படமாக உள்ளது.
ரஜினி படங்களில் இடம்பெறும் மத நல்லிணக்கப்படி இதிலும் "காளி'’ரஜினி, "மாலிக்'’சசிகுமார், "மைக்கேல்'’பாபிசிம்ஹா என கேரக்டர்கள் புனையப்பட்டுள்ளது.
"சன் பிக்ஸர்ஸ்' தயாரித்துள்ள "பேட்ட'’ஜனவரி 10-ஆம் தேதியேகூட வெளியாகலாம்.
ஆமா... "பேட்ட'க்காரங்களா... "அந்த ‘"ராகுல்'ங்கிற பேர எதுக்கு வச்சீங்க?'
-ஆர்.டி.எ(க்)ஸ்