காஜல் அகர்வால் நடிக்க "பாரீஸ் பாரீஸ்'’என்ற பெயரில் தமிழிலும், தமன்னா நடிக்க "தட்ஸ் மகாலட்சுமி' என்ற பெயரில் தெலுங்கிலும், மஞ்சிமா நடிக்க "ஜம் ஜம்' என்ற பெயரில் மலையாளத்திலும், பாருல் யாதவ் நடிக்க "பட்டர்ஃப்ளை' என்ற பெயரில் கன்னடத்திலும் ரீ-மேக் ஆகியிருக்கிறது கங்கனா ரணவத் நடித்த "குயின்' பாலிவுட் திரைப்படம்.
ஒரு அப்பாவிப் பெண், காதலித்து திருமணம் செய்யவிருந்த நேரத்தில்... காதலன் மற்றும் காதலனின் குடும்பத்தாரால் பிரச்சினை. "திருமணமே வாழ்க்கையில் வேண்டாம்' என பாரீஸுக்கு கிளம்பிப்போகும் அந்தப் பெண் காணும் புதிய உலகமும், அனுபவமும்தான் "குயின்' கதை.
முதலில் இந்தப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் தியாகராஜன் தயாரிப்பதாக இருந்தது. இதில் கதாநாயகியாக நடித்துவிட மிகுந்த முயற்சி செய்தார் த்ரிஷா. அந்தளவுக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. ஆனால் பிறகு "குயின்'’ரைட்ஸ் கை மாறியது.
கன்னட "பட்டர்ஃப்ளை'யில் நடித்திருப்பதுடன் தமிழிலும், கன்னடத்திலும் இணை தயாரிப்பாளராக இருந்து, நடிகை பாரூல் யாதவ் தயாரிக்க... இரு மொழிகளிலும் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் நான்கு மொழிகளிலும் டீசர் வெளியாகியுள்ளது.
இதில் காஜல் நடித்த "பாரீஸ் பாரீஸ்' சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஒரு காட்சியில்... சக நடிகை ஒருவர் காஜலின் மார்பைப் பிடித்து அழுத்த... காஜல்... வெட்கமும், வியப்புமாக ரியாக்ஷன் பண்ணுகிறார்.
ஓரிரு வருடங்களுக்கு முன்புவரை "பாகுபலி' ராணா டகுபதியும், த்ரிஷாவும் நெருக்கம்காட்டி வந்ததையும், அடிக்கடி கோவாவுக்கு அவர்கள் டேட்டிங் சென்று வந்ததையும் பலமுறை சொல்லியுள்ளோம். "என் இதயத்திற்கு நெருக்கமானவர் ராணா'’என த்ரிஷாவும், ‘"சிறுவயதிலிருந்தே நாங்கள் நண்பர்கள்'’என ராணாவும் சொன்னாலும்... தங்களின் நெருக்கம் பற்றி வெளிப்படையாகச் சொல்லவில்லை.
பாலிவுட் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராணா... ""எங்களுக்குள் நீண்ட கால பழக்கம் உண்டு. நாங்கள் டேட்டிங் சென்றதுண்டு. ஆனால்... எங்களுக்குள் சரிப்படாததால் இப்போது தொடர்பில் இல்லை'' எனச் சொல்லியுள்ளார்.
போகிற போக்கில்... "எனக்கு பலன்கள் கிடைக்கச் செய்த தோழிகள் இருந்தனர்'’எனவும் சொல்லியுள்ளார்.
ரசிக்க வேண்டியதுதான்... அதுக்கும், எதுக்கும் ஒரு எல்லை இருக்குல்ல.
டாப்ஸியின் டுவிட்டர் ஃபாலோயரில் ஒருவர்... "உங்க உடல் பாகங்கள் மிகவும் கவர்ச்சியா இருக்கு'’என பதிவிட...
டாப்ஸிக்கும் கோபம்தான். ஆனாலும் புத்திசாலித்தனமாக பதிவிட்டுள்ளார்.
""என் உடல் பாகங்களில் நான் எனது பெருமூளையை விரும்புறேன். உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?'' என "நங்'கென பதில் சொல்லியிருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா- நிக் தம்பதியின் திருமண வரவேற்பு, ஏற்கனவே டெல்லியில் நடந்தது; இப்போது மும்பையில்.
இந்த வரவேற்பின்போது பிரியங்காவிடம் பப்ளிக்கா கிஸ் கேட்டார் நிக். நாணமும், கூச்சமுமாய்... புருஷன் கன்னத்தில் "பச்சக்'’என ஒரு முத்தம்போட்டு அசத்த... விருந்தினர்கள் கிக் ஆகிவிட்டனர். அதோடு விட்டிருந்தா பரவால்ல... விருந்தினர்களில் ஒருவர் கூட்டத்தோடு கூட்டமாக... "ஒன்ஸ்மோர்' எனக் கேட்க... வெட்கத்தில் சிவந்துபோயிருக்கிறார் பிரி.
இது அந்த "ஏ' இல்ல... ஆனாலும் "ஏ' மேட்டர்தான்.
ரஜினி, சிம்ரன், த்ரிஷா நடித்துள்ள "பேட்ட'’படம் பழைய ரஜினியைப் பார்ப்பதுபோல் அவரின் ரசிகர்களுக்குப் பரவசமாக இருக்கும்படி இயக்கியிருக்கிறாராம் தீவிர ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்புராஜ்.
இந்தப் படத்திற்கு "யூ/ஏ' சான்று அளித்துள்ளது தணிக்கைக்குழு.
பெரியவர்கள் பார்க்கலாம்... பெரியவர்கள் துணையோடு சிறுவர்களும் பார்க்கலாம்.
படத்தில் கசமுசாவாக எதுவும் இல்லை. ஆக்ஷன் காட்சிகளில் லிமிட்டை தாண்டிய வன்முறைக்காக இப்படி சர்டிஃபிகேட் கொடுத்திருக்காங்க.
-ஆர்.டி.எ(க்)ஸ்