Advertisment

டூரிங் டாக்கீஸ்! ஹன்ஸிகா - அமலா அலப்பரை!

amalabal

பூக்கள்விடும் புகை!

காவிஉடை காஸ்ட்யூமில் சாமியாரிணி கெட்-அப்பில் "மஹா' படத்திற்காகத் தோன்றும் ஹன்ஸிகா, குடுவையில் புகையிலை நிரப்பி hanshikaபுகைப்பது போன்ற போஸ்டர்கள் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்... எதிர்பார்த்த சர்ச்சை கிளம்பிவிட்டதால் சந்தோஷத்தில் இருக்கிறார் ஹன்ஸிகா.

Advertisment

படத்தை இயக்கியிருப்பவர் புதுமுக டைரக்டர் ஜமீல் என்பதால்... இந்த சர்ச்சைக்கு மதச்சாயம் பூசுறாங்க.

இப்படி பூ ஒன்று புகைவிடும் லுக் வம்பாகியிருக்கும் நிலையில்... "புகைக்கிற ஸ்டைலில் தனது புகைப்படம் ஒன்று வேண்டும்' என்பதற்காக... சிகரெட் புகைத்தபடி போஸ் கொடுத்து இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அமலாபால்.

ஏற்கனவே லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு... கையில் கள்ளுப் பாட்டிலுடன் "மீனும், கள்ளும் சாப்பிட வாங்க'’என அமலா அதிரடி பண்ணியிருந்தார். இப்போது புகைவிட்டுள்ளார்.

வர்மப் பெண்!

Advertisment

கமலின் "இந்தியன் -2' படப்பிடிப்பு இந்

பூக்கள்விடும் புகை!

காவிஉடை காஸ்ட்யூமில் சாமியாரிணி கெட்-அப்பில் "மஹா' படத்திற்காகத் தோன்றும் ஹன்ஸிகா, குடுவையில் புகையிலை நிரப்பி hanshikaபுகைப்பது போன்ற போஸ்டர்கள் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்... எதிர்பார்த்த சர்ச்சை கிளம்பிவிட்டதால் சந்தோஷத்தில் இருக்கிறார் ஹன்ஸிகா.

Advertisment

படத்தை இயக்கியிருப்பவர் புதுமுக டைரக்டர் ஜமீல் என்பதால்... இந்த சர்ச்சைக்கு மதச்சாயம் பூசுறாங்க.

இப்படி பூ ஒன்று புகைவிடும் லுக் வம்பாகியிருக்கும் நிலையில்... "புகைக்கிற ஸ்டைலில் தனது புகைப்படம் ஒன்று வேண்டும்' என்பதற்காக... சிகரெட் புகைத்தபடி போஸ் கொடுத்து இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அமலாபால்.

ஏற்கனவே லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு... கையில் கள்ளுப் பாட்டிலுடன் "மீனும், கள்ளும் சாப்பிட வாங்க'’என அமலா அதிரடி பண்ணியிருந்தார். இப்போது புகைவிட்டுள்ளார்.

வர்மப் பெண்!

Advertisment

கமலின் "இந்தியன் -2' படப்பிடிப்பு இந்த வாரத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் செட் அமைக்கும் பணிகள் முடிவடையாததாலும்... மார்கழி மாதம் பிறந்துவிட்டதாலும் புத்தாண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும். கமலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் காஜல் அகர்வால், இந்த கேரக்டருக்காக வர்மக் கலைப் பயிற்சி பெறவிருக்கிறார்.

amalbal

தாயார் ஆக தயார்!

பிரியங்கா சோப்ராவின் தோழிகள் பலரும் டீன் ஏஜ் பிள்ளைகளின் தாயார்களாக இருக்கிறார்கள். பிள்ளைப்பாசம் அதிகரித்ததால்... அமெரிக்க பாடகர் நிக்குடன் ஏற்பட்ட காதலை காதலாகவே நீட்டித்துக்கொண்டிருக்காமல் கல்யாணம் செய்துகொண்டுள்ளார். சுவிட்ஸர்லாந்துக்கு தேனிலவு செல்லும் பிரியங்கா தம்பதி... அமெரிக்காவில் ஹாலிவுட் பிரபலங்களின் குடியிருப்புப் பகுதியான "பேவர்லி ஹில்ஸ்'ஸில் குடியேறவிருக்கிறார்கள்.

’நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளப்போவதாக’தெரிவித்துள்ளார் பிரியங்கா.

-ஆர்.டி.எ(க்)ஸ்

__________________

"துப்பாக்கி முனை'யில் மனசாட்சியின் குரல்!

vikramprabhuதினமும் இடம்பெறும் செய்தியாகிவிட்டது பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை. டெல்லியில் நிர்பயா மீது நடந்தாலும் சென்னையில் ஹாசினி மீது நடந்தாலும் நமக்குக் கோபம் வருகிறது. இத்தகைய கொடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று விவாதங்கள் நடக்கின்றன. இத்தகைய கொடூரர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்ற விவாதத்தில் ஒரு பலமான, தீர்க்கமான வாதமாய் வந்திருக்கிறது 'துப்பாக்கி முனை'.

படத்தில் என்கவுன்ட்டருக்கு பேர்போன போலீஸ் அதிகாரியாக வருகிறார் விக்ரம் பிரபு. தினம் தினம் என்கவுண்டர் என்ற பெயரில் கொலை செய்வதால் தாய், காதலி என அனைவரும் இவரைப் பிரிய, அதே நேரம் வேலையிலும் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. விரக்தியில் இருக்கும் விக்ரம் பிரபுவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக புதிய கேஸ் ஒன்று வருகிறது. அந்த கேஸில் குற்றம் என்ன, குற்றவாளி யார், தண்டனை என்ன என்பதை இயக்குனர் தினேஷ் செல்வராஜ் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைத்து சொல்ல முயன்றிருக்கும் படம் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் "துப்பாக்கி முனை'.

உயரம், இயல்பான முகபாவனை, வசன உச்சரிப்பு என போலீசுக்கு உரித்தான நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார் நாயகன் விக்ரம் பிரபு. படத்தில் ஹன்சிகா வரும் பகுதி குறைவாக வருவதால் நமக்கு நிறைவாக இல்லை. அத்தனை பேரையும் தாண்டி நம் மனதில் பதிபவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையாக வாழ்ந்துள்ள நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். மனதில் பதிவது மட்டுமின்றி நம் மனசாட்சியாகப் பேசுகிறார். போரூர் குழந்தை ஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த்தின் மீது நமக்கு ஏற்பட்ட கோபம் இந்தப் படம் பார்க்கும்போது மீண்டும் ஏற்படுகிறது. "8 தோட்டாக்களு'க்குப் பிறகு மீண்டும் ஒரு நிறைவான படம் அவருக்கு. படம் முழுவதும் நடிப்பில் அனுதாபத்தையும் -குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அப்ளாஸ்களையும் அள்ளி படத்தின் முக்கிய பலமாக இருக்கிறார். மிரட்டல் வில்லன் வேல ராமமூர்த்தி, மிர்ச்சி ஷா, பரத் ரெட்டி, சங்கிலி முருகன், "ஆடுகளம்' நரேன் ஆகியோர் கொடுத்த வேலையை நன்றாகச் செய்துள்ளனர்.

முதல் பாதி சற்று வேகமாகவும் இரண்டாம் பாதி சற்று உணர்ச்சிப்பூர்வமாகவும் கலந்துகட்டி கொடுத்துள்ளார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். முதலில் இந்தக் கதை தேர்வுக்கும், கதையில் வரும் பிரச்சினைக்கு ரசிகர்கள் ஏற்கும்படி தீர்வு சொன்னதற்கும் தினேஷ் செல்வராஜிற்குப் பாராட்டுகள். கதை தேர்வை சரியாக செய்த இயக்குனர் திரைக்கதையின் வேகத்தை இன்னும் கூட்டி இருக்கலாம். சில இடங்கள் யூகிக்கக்கூடியதாக இருப்பது குறை. படத்திற்கு மிகப்பெரிய பலம் இசையும் ஒளிப்பதிவும். இசையமைப்பாளர் எல்.வி.முத்துகணேஷ் தன் பின்னணி இசையில் காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டத்தைக் கூட்டி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராசாமதியின் கேமராவில் ராமேஸ்வரம் அழகாகப் பளிச்சிட்டுள்ளது, தேடல், துரத்தல் காட்சிகள் பரபரப்பாகப் பயணிக்கின்றன.

-வசந்த்

nkn191218
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe