பெரிய நடிகர்களின் படங்கள் எப்போது வேண்டுமானாலும் ரிலீஸாகும்... என்கிற தடாலடியால்... சிறுபடத் தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல்... தேவையான திரையரங்குகள் கிடைக்காமல் தவிப்பிற்கு ஆளானதால்... அதை சரிசெய்யும் விதமாக ‘"ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி'’ ஒன்றை ஏற்படுத்தி... ரிலீஸ் தேதிகளை ஒழுங்குபடுத்தும் ஒரு நல்ல காரியத்தை விஷாலின் தலைமையிலான "தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்' ஏற்படுத்தியது.

ஆனாலும் சமீபகாலமாக அந்த நடைமுறையில் குழப்பம் ஏற்படுத்தும் வேலைகளும் நடந்து வருவதையும், விஜய் ஆண்டனி நடித்த ‘"திமிரு பிடிச்சவன்'’படத்திற்கு கமிட்டி இரண்டுமுறை ஒதுக்கித் தந்த தேதிகளில் ரிலீஸ்பண்ணாமல் வேறு தேதியில் படத்தை ரிலீஸ் செய்ததால் சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸாகாமல் பாதிக்கப்பட்டதையும், விஜய்சேதுபதியின் "சீதக்காதி'’ படத்திற்கு டிசம்பர் 14-ஆம் தேதியை கமிட்டி ஒதுக்கித் தந்தும், டிசம்பர் 21-ல் ‘"சீதக்காதி'’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதையும்... கடந்த நவம்பர் 28-30 தேதியிட்ட இதழில் நாம் விரிவாக எழுதியிருந்தோம்.

vishal

Advertisment

அடுத்தடுத்து... ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டிக்கு ஆப்பு வைக்கும் வேலைகளில் தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களே இறங்கியிருப்பதால்... "எப்படியோ போங்க... எனக்கென்ன?'’என எரிச்சலாகிவிட்டார் விஷால்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஜெயம் ரவி நடித்துள்ள "அடங்க மறு', சிவகார்த்திகேயன் தயாரித்து கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் "கனா', விஷ்ணு விஷால் நடித்துள்ள "சிலுக்குவார்பட்டி சிங்கம்'’ஆகிய படங்கள் டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டிற்கு உறுதி செய்யப்பட்டது. விஜய்சேதுபதி நடித்துள்ள "சீதக்காதி' படக்குழுவும், ‘"நாங்களும் டிசம்பர் 21-ல் வருவோம்'’ என அறிவித்தது. தான், தயாரித்து நடித்துள்ள "மாரி-2'’படத்தையும் டிசம்பர் 21-ல் வெளியிட விரும்பினார் தனுஷ். இந்த தேதியை உறுதிசெய்ய தயாரிப்பாளர் சங்கத்திடம் கேட்கப்பட்டது.

ஆனால்... ‘"டிசம்பர் 14-ஆம் தேதி ஏற்கனவே திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களில் சில தூக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதால்... டிசம்பர் 14-ல் ஓரிரு புதிய படங்களை வெளியிட்டால் போதுமான திரையரங்குகள் கிடைக்கும். அதைவிட்டுவிட்டு டிசம்பர் 21-ல் ஐந்தாறு படங்கள்... அதிலும் முன்னணி நடிகர்கள் படங்கள் வந்தால் எப்படி தியேட்டரை ஒதுக்குவது?'’ என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சொன்னதால்... இந்தக் கருத்து பற்றி பரிசீலிக்கப்பட்டு வந்தது.

Advertisment

ந்நிலையில் எதிர்பாராதவிதமாக... விஷால் உள்ளிட்ட தயாரிப்பளர் சங்க நிர்வாகிகள் மீது பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை வைத்தது தனுஷின் "வுண்டர்பார்'’நிறுவனம்.

""ரிலீஸ் தேதி சம்பந்தமாக மீட்டிங் என்று போன் செய்துவிட்டு, ‘தலைவருக்கு உடம்பு சரியில்ல... அதனால் மீட்டிங் கேன்ஸல்னு சொல்வாங்க. இது தொடர்ச்சியா நடக்குது. வெளியீட்டு தேதி போடாததால வியாபாரம் செய்ய முடியல. வேணும்னே இழுத்தடிக்கிறாங்க தயாரிப்பாளர் சங்கத்துல. 33 கோடி பட்ஜெட் ஆகியுள்ளதால், மாதம் 1 கோடி வரை வட்டி கட்ட வேண்டியுள்ளது. ஆகையால், டிசம்பர் 21-ம் தேதி "மாரி-2' படத்தை வெளியிடுவது என முடிவு எடுத்துவிட்டோம். கவுன்சிலுக்கு கட்டுப்பட்டு போகவேண்டும் என்றுதான் இவ்வளவு நாள் காத்திருந்தோம். எந்தவொரு பதிலுமே யாருமே சொல்லவில்லை. இதனால் எங்களுடைய முடிவு இதுதான்''

-இப்படியாக குற்றம் சொல்லியிருந்தது தனுஷின் நிறுவனம்.

னுஷ் படம் வெளியானால் தியேட்டர்காரர்கள் அந்தப் படத்திற்கும், விஜய்சேதுபதியின் ‘"சீதக்காதி'’படத்திற்குமே முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதாலும்... தனுஷ் தரப்பின் பகிரங்க குற்றச்சாட்டாலும்... தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், டிசம்பர் 21-ல் படத்தை வெளியிட முடிவு செய்த ஐந்து படங்களின் தயாரிப்பு நிறுவன நிர்வாகிகள், விநியோகஸ்தர் சங்க நிர்வாகிகள், திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

"ஒரேநாளில் ஐந்து படங்கள் வெளியானால்... இதில் சில படங்களுக்குப் போதுமான தியேட்டர்கள் கிடைக்காது. வசூல் பாதிக்கும். அதனால் ஓரிரு படத் தயாரிப்பாளர்கள் தங்களின் நலன்கருதி வேறு தேதியில் தங்கள் படத்தை ரிலீஸ் செய்யலாம்...'’என அறிவுறுத்தப்பட்டது.

danushடிசம்பர் 14-ல் வெளியிட்டால் 21-ல் வெளியாகும் படங்களால் தங்கள் பட மவுசு குறைந்துவிடும். டிசம்பர் தாண்டி வெளியிட்டால்... பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் ‘"பேட்ட', அஜீத்தின் "விஸ்வாசம்'’படங்களால், தங்கள் படம் தியேட்டர்களிலிருந்து தூக்கப்படும். விடுமுறை காலம், கிறிஸ்துமஸ் பண்டிகை, வருஷக் கடைசி, புத்தாண்டு கொண்டாட்டம்... என டிசம்பரின் இறுதி வாரம் உற்சாகமூடில் இருக்கும் என்பதால்... ‘டிசம்பர் 21-தான் தங்கள் படத்தின் ரிலீஸுக்கு சரியான நேரம்... என ஐந்து படங்களின் தயாரிப்பாளர்களும் கணக்குப் போட்டிருப்பதால்... 21-ல் உறுதியாக நின்றனர்.

இதையடுத்து... ‘"டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டில் என்ன பிரச்சினை நடந்தாலும் அதில் தயாரிப்பாளர் சங்கம் தலையிடுவதில்லை'‘என்று முடிவெடுத்துள்ளனர். அத்துடன்... ‘"நாங்களும் டிசம்பர் 21-ல் ரிலீஸ் பண்ணுவோம்'னு எந்தப் படத் தயாரிப்பாளராவது கேட்டாலும்... ‘"தாராளமா ரிலீஸ் பண்ணிக்கோங்க'’ என சொல்லிவிடவும் முடிவு செய்தனர்.

அத்துடன்...

’டிசம்பர் 14-ம் தேதி அன்று நிறைய திரையரங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், ஒருசில திரைப்படங்கள் வெளிவரலாம் என்று பேசப்பட்டது. மேலும், ஒரே தேதியில் நிறைய திரைப்படங்கள் வெளிவருவதால் ஏற்படும் பிரச்சினை குறித்தும், பாதிப்புகள் குறித்தும் பேசப்பட்டது. ஆனால் எந்த தயாரிப்பாளரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. "கிருஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய இரு தேதிகளில் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களது திரைப்படங்களை வெளியிட்டுகொள்ளலாம்' என்று தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. இதைப் பயன்படுத்தி "சீதக்காதி' 20-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஆனால் இந்த பிரச்சினைகளின் பின்னணியில் ஹீரோக்களின் ஈகோ யுத்தமும் இருக்கிறது... எனச் சொல்லப்படுகிறது.

“""ரஜினி நடித்து தனுஷ் தயாரித்த "காலா'’பட ரிலீஸ் தேதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விஷால் மீது தனுஷுக்கு அதிருப்தி.

அதன்பின், தான் தயாரித்து நடித்த "வடசென்னை'’படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய தேதி பெற்று அறிவித்தார் தனுஷ். இதனால் தான், தயாரித்து நடித்த "சண்டக்கோழி-2'’ படத்திற்கு அக்டோபரில் தேதி பெற்று அறிவித்தார் விஷால். ஆனால்... படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் "வடசென்னை'’ படம் அக்டோபரில் வரும் என அறிவிக்கப்பட்டது. அதாவது... விஷால் பட ரிலீஸ் அன்றே தனுஷ் படமும் ரிலீஸானது. இதனால் தியேட்டர் பிடிப்பதிலும், வசூலிலும் பின்தங்கிப் போனது விஷால் படம். இந்த கோபத்தில்தான் தனுஷின் ‘"மாரி-2'’ படத்திற்கு ரிலீஸ் தேதியை முடிவுசெய்து தராமல் இழுத்தடித்தார் விஷால்...''’’ என தனுஷ் தரப்பினர் சொல்கிறார்கள்.

""தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்புப் பணியை மட்டுமே செய்யும் யாரோ ஒரு தயாரிப்பாளர் தலைவராக இருந்தால்... தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவை பிரபலங்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பிரபல நடிகரான விஷால் தலைவராக இருக்கிறார். "சக நடிகர் எடுக்கிற முடிவுக்கு நாம கட்டுப்படணுமா?'ன்னு சில ஹீரோக்கள் நினைக்கிறாங்க. அதனால்தான் விஷாலுக்கு எதிரா செயல்படுறதா நினைச்சு... சிறு தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க விஷால் எடுக்குற நடவடிக்கைகளையும்கூட எதிர்க்கிறாங்க...''’என்கிறார்கள் விஷால் தரப்பில்.

இதற்கிடையே... ’""எங்கள் ‘"சிலுக்குவார்பட்டி சிங்கம்'’ படத்திற்கு முறைப்படி ரிலீஸ் தேதி வாங்கியிருந்தோம். ஆனால் எங்களை ஒழிக்கும் நோக்கில் பல படங்களை வெளியிடுகிறார்கள். ஆனாலும் நாங்கள் பின்வாங்கமாட்டோம். தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலை பார்க்கவே விடவில்லை''’என விஷ்ணு விஷால் கூற...

""தயாரிப்பாளர் சங்கம்கிறது போலீஸ் ஸ்டேஷன் கிடையாது.. நாங்க வழிகாட்டதான் முடியும். எங்களால் முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்தப் பார்க்கிறோம். சங்கம் சார்பாக ஒரு விஷயத்தை கொண்டு வரும்போது விஷாலின் தனிப்பட்ட முடிவாக பார்க்கிறார்கள். வெளியீட்டுக்கு ஒழுங்கு கமிட்டி கொண்டுவந்ததால்தான் இந்த ஆண்டு அதிகமான படங்கள் வெற்றி அடைந்தன. எல்லோரும் சம்பாதித்தார்கள். தேவைக்கு மீறிய உற்பத்தி நடக்கும்போது இதுபோன்ற பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.. பொங்கல் படங்களுக்குப் பிறகு மீண்டும் ஒழுங்கு கமிட்டி செயல்படும். இன்னும் கட்டுப்பாட்டுடன் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும். சினிமாக்காரர்கள் பட வெளியீட்டுக்கு பின்னும்கூட ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் விட்டுக்கொடுத்து போகச் சொல்கிறேன். இந்த வாரமும், போன வாரமும் தியேட்டர்கள் காலியாக இருந்தன. எந்த பெரிய படமும் வெளியாகவில்லை. இந்த வாரங்களில் ஏதாவது படங்கள் வெளியாகி இருந்தால் நெருக்கடி இருந்திருக்காது''’என விஷால் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் "ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி'யை கலைத்துவிட்டுப் போகலாம் என்கிற சலிப்பே தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் உள்ளது.

எப்படியோ போங்க!

-ஆர்.டி.எ(க்)ஸ்