நானா படேகர் மீது "மீ டூ' புகார் சொன்ன நடிகை தனுஸ்ரீ தத்தாவை, "குடிகாரி' என்றார் நடிகை ராக்கி சாவந்த். இதனால் ராக்கி மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடுத்திருக்கிறார் தனுஸ்ரீ.
தன் மீது வழக்குத் தொடுத்த தால் எரிச்சலான ராக்கி... "தனுஸ்ரீ என்னை வற்புறுத்தி ஓரினச் சேர்க்கை உறவுகொண்டார்' என பதிலடி தந்தார். இதனால் கடுப் பான தனுஸ்ரீ "ராக்கி ஒரு திருநங்கை' என்றார். பதிலுக்கு இப்போது... ""என்னுடைய உடலின் ஒவ்வொரு இஞ்ச்சும் தனுஸ்ரீக்கு அத்துபடி. என்னை லெஸ்பியன் உறவுக்குப் பயன்படுத்தினார். ஆண் களோடும், பெண்களோடும் உடலுறவு வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவர். படுக்கையை பகிர்ந்துகொண்டுதான் "மிஸ் இந்தியா' பட்டம் வாங்கினார். என் னுடன் அவர் லெஸ்பியன் உறவு வைத்ததற்கு ஆதாரம் இருக்கு'' என ராக்கி ரவுசு பண்ண... ""நீ சேற்றில் கிடக்கும் பன்றி. சேற்றை தன்மீது பூசிக்கொள்
நானா படேகர் மீது "மீ டூ' புகார் சொன்ன நடிகை தனுஸ்ரீ தத்தாவை, "குடிகாரி' என்றார் நடிகை ராக்கி சாவந்த். இதனால் ராக்கி மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடுத்திருக்கிறார் தனுஸ்ரீ.
தன் மீது வழக்குத் தொடுத்த தால் எரிச்சலான ராக்கி... "தனுஸ்ரீ என்னை வற்புறுத்தி ஓரினச் சேர்க்கை உறவுகொண்டார்' என பதிலடி தந்தார். இதனால் கடுப் பான தனுஸ்ரீ "ராக்கி ஒரு திருநங்கை' என்றார். பதிலுக்கு இப்போது... ""என்னுடைய உடலின் ஒவ்வொரு இஞ்ச்சும் தனுஸ்ரீக்கு அத்துபடி. என்னை லெஸ்பியன் உறவுக்குப் பயன்படுத்தினார். ஆண் களோடும், பெண்களோடும் உடலுறவு வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவர். படுக்கையை பகிர்ந்துகொண்டுதான் "மிஸ் இந்தியா' பட்டம் வாங்கினார். என் னுடன் அவர் லெஸ்பியன் உறவு வைத்ததற்கு ஆதாரம் இருக்கு'' என ராக்கி ரவுசு பண்ண... ""நீ சேற்றில் கிடக்கும் பன்றி. சேற்றை தன்மீது பூசிக்கொள்ளும் விருப்பமுள்ளது பன்றி. அப்படித்தான் நீயும்'' என தனுஸ்ரீ சூடானார். இதற்கும் ஒரு பதிலடியை ராக்கி கொடுத்துள்ளார். "நீ போதைக்கு அடிமை யான... தின்று கொழுத்த எருமை மாடு' எனச் சொல்ல... "உன் மேல் கோபமில்லை. உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது' என தனுஸ்ரீ சொல்லியுள்ளார்.
இந்த விவகாரத் தில் மூக்கை நுழைத்த ஸ்ரீ ரெட்டியோ... "ராக்கி மனநலமில்லாதவர். அவர் உளவியல் மருத் துவரைச் சந்தித்து சௌ கரியமாகட்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
"மீ டூ' இயக்கம் திரையுலகில் பிரபல மாவதற்கு முன்பே... அதிரடியாக "மீ டூ' புகார் களைச் சொன்னவர் "கபாலி'’ராதிகா ஆப்தே.
அவர் இப்போது மீண்டும் தமிழ் சினிமா குறித்து ஒரு "மீ டூ' புகாரை தெரிவித்துள்ளார்.
""சில வருடங்களுக்கு முன்... விக்ரம் நடிக்கும் படம் ஒன்றிற்காக எனக்கு டெஸ்ட் எடுக்க வந்த ஒரு டைரக்டரும் (டைரக்டரின் பெயர் தெரியவில்லை) அவருடன் இருந்த பத்து பேர்களும், மும்பையி லுள்ள ஒரு பாடாவதி லாட்ஜுக்கு என்னை வரச்சொன்னார்கள். ஜாக்கெட் என்ற பெயரில் உடல் பாகங்கள் தெரியும் ஒரு உடையைக் கொடுத்து அணியச் சொன்னார்கள். "இது பீரியட் ஃபிலிம். அதனால் இப்படித்தான் காஸ்ட்யூம் இருக்கும்' என்றார்கள். அவர்கள் மிக மட்டமானவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். லாட்ஜில் இரவு தங்கச் சொன்னார்கள். நான் தப்பி ஓடிவந்துவிட்டேன்'' எனத் தெரிவித்துள்ளார் ராதிகா ஆப்தே.
ராதிகா சொல்கிறபடி பார்த்தால்... அது விக்ரம் நடிப்பில் பிரமாண்ட மாக துவக்கப்பட்ட "கரிகாலன்' படம். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ‘ஜரீன்கான் நாயகியாக நடித்தார். இந்த வரலாற்றுப் படத்திற்காக படப் பிடிப்பு சென்னையில் நடந்துவந்த நிலையில்... பட நிறுவனத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் விக்ரம்.
"நிபுணன்' படப்பிடிப்பு சமயம் நடந்ததாக அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்ததோடு கர்நாடகத்தில் கப்பன்பார்க் காவல் நிலையத்தில் ஸ்ருதி புகார் அளித்தார். அதன் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மாஜிஸ்ட்ரேட்டிடம் ரகசிய வாக்கு மூலமும் கொடுத்தார் ஸ்ருதி. இந்த வழக்கில் அர்ஜுனை கைதுசெய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. ஸ்ருதி மீது நஷ்ட ஈடு வழக்கு தொடுத்துள்ளார் அர்ஜுன்.
ஏற்கனவே புதிய கன்னடப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஸ்ருதியை ""கோர்ட்டுக்கு அலையவே உங்களுக்கு நேரம் சரியா இருக்கும். ஷூட்டிங்கிற்கு எப்படி வருவீங்க?'' எனக் கேட்டு, படத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.
பொதுவாக கோர்ட்டு, வழக்கு சிக்கல்களில் சிக்கும் பிரபலங்கள் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்று நெய்விளக்கு பூஜை போட்டு வழிபட்டால் சிக்கல் தீரும் என்பது ஐதீகம். அர்ஜுன் தன் குடும்பத்தினருடன் சென்று இந்தக் கோவிலில் வழிபட்டிருக்கிறார்.
""இப்படியெல்லாம் கும்பலோடு கும்பலாக "மீ டூ' புகார் செய்வது தனக்கு உடன்பாடில்லை. எனக்கு நெருக்கடிகள் வந்தபோது, அந்த இடத்திலேயே வேறுமாதிரி பதிலடி கொடுத்திருக்கிறேன்...'' எனத் தெரிவித்துள்ளார் நித்யாமேனன்.
""விருப்பத்தின் பேரில் நடப்பது வேறு. வற்புறுத்துவது வேறு. பாதிக்கப் பட்டவர்கள் "மீ டூ'வில் புகார் தெரிவிப்பது நியாயம்தான் என்றாலும்.. சிலர் பழி வாங்குவதுபோல இப்படி புகார்களைச் சொல்லக்கூடாது. எனது படங்களில் நடித்த நடிகைகளுக்கு எப்போதும் பாதுகாப்பு தந்துள்ளோம். இந்தியா முழுக்க இதே பாதுகாப்பு நிலைமை ஏற்படவேண்டும். நான் கூட இரண்டு நடிகைகளுடன் டேட்டிங் சென்றுள்ளேன். ஆனால் அது "மீ டூ' ஆகாது'' என விஷால் விளக்கமாகச் சொல்கிறார்.
-ஆர்.டி.எ(க்)ஸ்