நானா படேகர் மீது "மீ டூ' புகார் சொன்னார் தனுஸ்ரீ தத்தா. நானாவுக்கு ஆதரவாக "அவ ஒரு குடிகாரி' என தனுஸ்ரீ மீது பாய்ந்தார் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்.
தன்னை போதைப்பார்ட்டி என்றதால் ராக்கி மீது மான நஷ்டஈடு வழக்கு தொடுத்திருக்கிறார் தனுஸ்ரீ.
தன் மீது வழக்குத் தொடுத்ததால் எரிச்சலான ராக்கி... தனுஸ்ரீ மீது ‘ஒரு மாதிரியான’ வகையில் "மீ டூ' புகார் தெரிவித் திருக்கிறார்.
""ஒரு பார்ட்டியில் ஓரினச் சேர்க்கைக்கு என்னை வற்புறுத்தினார் தனுஸ்ரீ'' எனச் சொல்லியுள்ளார் ராக்கி.
தன்னை ஓரினச் சேர்க்கையாளர் என்பதுபோல சித்தரித்ததால் எரிச்சலான தனுஸ்ரீ.. ""பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, துன்பப்படும் பெண்களுக்கு ஆதரவாக இல்லாமல், பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாக இருக்கலாமா? பாலிவுட்டில் பரவலாகவே நீங்கள் ஒரு திருநங்கை என்கிற பேச்சு இருக்கே...'' என தனுஸ்ரீ சொல்லியுள்ளார்.
இப்படி... இருவரும் குஸ்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விரைவில்... தன் காதலரான அமெரிக்கப் பாடகர் நிக்கிற்கு நெக்கை நீட்டவிருக்கும் பிரியங்கா சோப்ரா... தன் நெருங்கிய நண்பர்களுக்கு ’பேச்சிலர் பார்ட்டி’ கொடுத்துள்ளார். அதாவது ஃபேமிலி வுமன் ஆகவிருப்பதால் இந்த பேச்சிலர் பார்ட்டி.
இந்த ஸ்டைலில்தான் நயன்தாராவும், அவரின் காதலர் டைரக்டர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து ஒரு பார்ட்டி கொடுத்திருக்கிறார்கள். இது தீபாவளி பார்ட்டி என்றாலும்... விரைவில் "நயனும், சிவனும் அதிகாரப்பூர்வமாக ஃபேமிலியாகவிருப்பதால்... கொடுத்த பேச்சிலர் பார்ட்டி' என்கிற பேச்சும் நிலவுகிறது.
இதற்குமுன் ஓணம் பண்டிகை உள்ளிட்ட விசேஷங்களுக்கு சிவனுக்கு மட்டுமே பார்ட்டி கொடுத்தார் நயன். இப்போது இருவரும் சேர்ந்து தங்களது நட்பு வட்டத்திற்கு குதூகலம் நிறைந்த பார்ட்டி கொடுத்துள்ளார்கள்.
இந்த நயனவிருந்தில் சிவகார்த்திகேயன், அனிருத், டைரக்டர் அட்லி தம்பதி உள்ளிட்ட சினிமா பிரபலங் களோடு, வெளிநண்பர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
"சர்கார்' படப்பிடிப்பின்போது கதாநாயகி கீர்த்தி சுரேஷை வைத்து எடுக்கப்பட்ட பல காட்சிகள் படத்தில் இல்லையாம். தன்னை மிகவும் டம்மியாக்கிவிட்டதாக மனதிற்குள் குமைச்சல்படுகிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்த ஏமாற்றத்தை தவிர்க்க... ஓரிரு மாதங்களுக்கு சினிமாவில் நடிக்காமல் அமெரிக்காவில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார் கீர்த்தி. ரெஸ்ட்டோடு, சில அழகுச் சிகிச்சைகளையும் மேற் கொள்ளவிருக்கிறார். அதன்பிறகு... கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிக்கப்போகிறாராம். கீர்த்தி இப்போது புதிய படம் எதிலும் கமிட் ஆகவில்லை.
"தேவர் மகன்' என தனது படத்திற்கு தலைப்பு வைத்ததற்காக இப்போது வெட்கப்படுவதாக ஒருமுறை தெரிவித்தார் கமல். "இந்தியன்-2' படத்திற்குப் பிறகு "தேவர் மகன் -2' எடுக்கவிருப்பதாக கமல் சொல்லியிருந்தாலும், படத்தின் தலைப்பில் "தேவர் மகன்' என்பது இருக்காது... என மக்கள் நீதி மய்ய பிரமுகர்கள் சொல்கிறார்கள். இருப்பினும் கமல் "சண்டியர்' என்கிற டைட்டிலில் படம் எடுத்தபோது... "இது ஒரு ஜாதியைக் குறிக்கும் சொல்' எனச்சொல்லி, எச்சரிக்கை, போராட்டம்... அறிக்கை... என கமலுடன் குஸ்திக்கு நின்று... "விருமாண்டி' என டைட்டிலை மாற்றவைத்தார் ‘புதிய தமிழகம்’ கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ஓரிரு வருடங்களுக்கு முன் புதுமுகங்கள் நடிப்பில் "சண்டியர்' என்ற பெயரில் படம் வெளியானது. ஆனால் கிருஷ்ணசாமி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பிரச்சினையின் முக்கியத் துவத்தைவிட... பிரபலத்துடன் மோதுவதுதான் நோக்கமாக இருந்தது. இப்போது "தேவர் மகன்-2' என டைட்டில் வைக்காமல், "தேவேந்திரன் மகன்' என டைட்டில் வைத்து படம் எடுக்கலாம்... என கமலுக்கு கடுதாசி போட்டுள்ளார் கிருஷ்ணசாமி.
ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறதாம். "பொங்கல் விழா முடிந்த பிறகு படப்பிடிப்பு துவங்கலாம்...' எனச் சொல்லப்படுகிறது.
என்ன கதை?
யாருக்குத் தெரியும் அந்தக் கதை!
-ஆர்.டி.எ(க்)ஸ்