டூரிங் டாக்கீஸ்!

touringtalkies

எல்லா சினிமாவும் ஒரே "மாதிரி'தான்!

touringtalkiesபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் காலம்காலமாக இருக்கு. எல்லா துறையிலும் இது இருக்கு. சினிமாவை மட்டும் குற்றம் சொல்ல வேணாம். படுக்கைக்கு அழைத்தால் என்ன... ஏமாறவில்லையே... படவாய்ப்பு கிடைத்துவிடுகிறதே!

-"தேசிய விருது' பெற்ற டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான்

ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படியா பேசுவது? உங்கள் மீதிருந்த மரியாதை போய்விட்டது.

-தெலுங்கு சினிமா பாலியல் நெருக்கடிகளை அம்பலப்படுத்திவரும் ஸ்ரீரெட்டி

படுக்கைக்கு அழைக்கப்படுவதும், விரும்பிச் செல்வதும் சினிமாவிலும், அரசியலிலும் காலங்காலமாக இருக்கிறது. "நீ என்னைக் கவனிச்சா நான் உன்னைக் கவனிச்சுக்குவேன்' என்கிற அண்டர்ஸ்டாண்டிங்தான். மனதில் பட்டதை பேசியிருக்கிறார் சரோஜ்கான். ரேகா, மாதுரி தீக்ஷித், ஸ்ரீதேவி என பல நடிகைகள் சினிமாவில் உயர உதவியவர் சரோஜ். ஒருவேளை அ

எல்லா சினிமாவும் ஒரே "மாதிரி'தான்!

touringtalkiesபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் காலம்காலமாக இருக்கு. எல்லா துறையிலும் இது இருக்கு. சினிமாவை மட்டும் குற்றம் சொல்ல வேணாம். படுக்கைக்கு அழைத்தால் என்ன... ஏமாறவில்லையே... படவாய்ப்பு கிடைத்துவிடுகிறதே!

-"தேசிய விருது' பெற்ற டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான்

ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படியா பேசுவது? உங்கள் மீதிருந்த மரியாதை போய்விட்டது.

-தெலுங்கு சினிமா பாலியல் நெருக்கடிகளை அம்பலப்படுத்திவரும் ஸ்ரீரெட்டி

படுக்கைக்கு அழைக்கப்படுவதும், விரும்பிச் செல்வதும் சினிமாவிலும், அரசியலிலும் காலங்காலமாக இருக்கிறது. "நீ என்னைக் கவனிச்சா நான் உன்னைக் கவனிச்சுக்குவேன்' என்கிற அண்டர்ஸ்டாண்டிங்தான். மனதில் பட்டதை பேசியிருக்கிறார் சரோஜ்கான். ரேகா, மாதுரி தீக்ஷித், ஸ்ரீதேவி என பல நடிகைகள் சினிமாவில் உயர உதவியவர் சரோஜ். ஒருவேளை அவரும் இந்த கஷ்டத்தை அனுபவித்திருக்கலாம். இப்படிப்பட்ட ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ நிலைமையை உருவாக்கி வைத்திருப்பவர்களைத்தான் நாம் கண்டிக்கவேண்டும்.

-நடிகரும், மோடியைப் பிடிக்காத பி.ஜே.பி. எம்.பி.களில் ஒருவருமான சத்ருஹன் சின்ஹா

சரோஜ்கானை ஏன் குற்றம் சொல்லணும். எல்லாத்துறையிலும் இது நடக்குது. சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் மோசம்னு சித்தரிக்கக்கூடாது.

-"ஷகீலாவின் வாழ்க்கைக் கதை' படத்தில் நடிக்கும் ரிச்சா சடா

"பட வாய்ப்புத் தருவதற்கு பதிலுக்கு ஏதாவது நீங்கள் தரவேண்டும்' எனக் கேட்டார்கள். ‘"தருவதற்கு என்னிடம் பணம் இல்லையே?' என்றேன். "டைரக்டரையும், தயாரிப்பாளரையும் படுக்கையில் மகிழ்வியுங்கள்' என்றார்கள்.

-2017-ஆம் ஆண்டிற்கான "சிறந்த நடிகை'க்கான "தேசிய விருது'வுக்கு தேர்வாகியிருக்கும் நடிகை உஷா ஜாதவ்

கடவுளைப் போன்று பார்க்கப்படுபவர்கள்... அதிகாரம் மிக்கவர்கள் மீது பாலியல் புகார் சொன்னால் யாரும் நம்புவதில்லை. அப்படியே புகார் சொன்னாலும் புகார் சொல்லும் நடிகையின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

-"கபாலி'’ ராதிகா ஆப்தே

இப்போது பரவாயில்லை. நான் நடிக்க வந்த காலத்தில் நிலைமை மிகமோசமாக இருந்தது!

-"சாமுராய்'’அனிதா

அனைத்துத் துறையிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. சினிமாத்துறையை மட்டும் பூதக்கண்ணாடி வச்சு பார்க்கக்கூடாது. பெண்களுக்கான தொல்லை சொந்த உறவினர்களிடமிருதே தொடங்குது. பெண்களை மதிக்கச் சொல்லி ஆண்குழந்தைகளை வளர்க்கணும்.

-"சாப்ளின் -2' படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துவரும் ஆதா சர்மா

touringtalkiesபோவதும் போகாததும் அவரவர் விருப்பம். ஆனால் எல்லா நடிகைகளையுமே சினிமா வாய்ப்புத் தர படுக்கைக்கு அழைக்கிறார்கள். ‘என்னை யாரும் அழைக்கவில்லை’ என்று நான் சொன்னால் அது பொய்யாகத்தான் இருக்கும்!

-2017-ஆம் ஆண்டுக்காக ‘"சிறந்த துணை நடிகை'’ தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் திவ்யா தத்தா

நடிகைகளுக்கு பாலியல் ரீதியான வற்புறுத்தல் சினிமாவில் இருக்கு. நல்லவேளையாக எனக்கு அந்த நெருக்கடி ஏற்படல.

-ரம்யா நம்பீசன்

எனக்கு அப்படியான நெருக்கடிகள் ஏற்படவில்லை. யாராவது எனக்கு நெருக்கடி தந்தால் அவர்களை சும்மா விடமாட்டேன்.

-நயன்தாரா, அதர்வாவுடன் "இமைக்கா நொடிகள்'’ படத்தில் நடித்து வரும் ராசிகன்னா

சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பரவலாக நடக்கிறது. ஆனால் அதை தவிர்ப்பதும், அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதும் நம் கைகளில்தான் இருக்கிறது.

-இலியானா

படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. நடிகைகள் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவாலாக இது இருக்கிறது!

-வரலட்சுமி

எனக்கு இப்படி ஒரு பிரச்சினை வந்தபோது... எனக்குத் தெரிந்த டான்ஸ் மாஸ்டரிடம் உதவி கேட்டேன். ‘"உன்னால இந்தப் பிரச்சினைகளை சமாளிக்க முடியலேன்னா... சினிமாவை விட்டு touringtalkiesவிலகிடு'னு சொன்னார். நான் அட்ஜெஸ்ட்மெண்ட்டுகளுக்கு சம்மதிக்காததால் நிறைய வாய்ப்புகள் வருவதில்லை!

-ஸ்ருதி ஹரிஹரன்

"மூன்று, நான்கு பேர்களுக்கு உடன்பட்டால் முதல் பட வாய்ப்பு கிடைக்கும்'னு சொன்னபோது நான் அழுது, திட்டி... அந்த வாய்ப்பை மறுத்தேன்.

-"சிலம்பாட்டம்'’சானாகான்

முதல் சினிமா வாய்ப்புக்காகப் போனபோது... "என்னுடைய மேலாடையை முழுவதுமாக நீக்கி முன்னழகை காட்டும்படி' சொன்னார் அந்த டைரக்டர். அந்த வாய்ப்பே வேண்டாம் என அப்படிச் செய்ய மறுத்துவிட்டேன். முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் எப்படி இப்படி கேட்கத் துணிகிறார்கள்?

-உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... பாலிவுட், கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட்...னு ஆல் வுட்லயும் இந்த அக்கப்போர் இருக்கே...

-ஆர்.டி.எ(க்)ஸ்

touringtalkies
இதையும் படியுங்கள்
Subscribe