பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள்... துன்புறுத்தலுக்கு ஆளான சமயத்தில் அதை வெளியே சொல்ல முடியாமல்... இப்போது அதை வெளியில் சொல்ல... சமூக வலைத்தளத்தில் "me too' என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்துகிறார்கள்.
பாலியல் பாதிப்புகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதை "ம்ங்ங் ற்ர்ர் ள்ற்ர்ழ்ஹ்' என்கிறார்கள்.
"நானும் பாதிக்கப்பட்டேன்'’என்கிற அர்த்தத்தில் பேசப்படும் இந்த "மீ டூ' ஸ்டோரி’ அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது உலகம் முழுக்க. குற்றம்சாட்டுபவர்களை விட, குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பெரும் பிரபலங்களாக இருப்பதுதான் இந்த அதிர்வுக்கு காரணம்.
"மீ டூ'’வில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பெயரைக் கேட்டால்... ‘"யூ டூ?'’ என கேட்கத் தோன்றுகிறது.
பிரபல ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வென்ஸ்டைன் மீது, அவரது நிறுவனங்களிலும், படங்களிலும் பணிபுரிந்த 86 பெண்கள் குற்றம் சுமத்தியது உலகை அதிர வைத்தது.
"அதேபோல... தனக்கு சினிமா வாய்ப்புத் தருவதாகச் சொல்லி, பாலியல் உறவு வைத்து மோசடி செய்ததாக' சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கோலிவுட், டோலிவுட் பிரபலங்களை ‘"மீ டூ' ஸ்டோரியில் பகிரங்கப்படுத்தினார் ஸ்ரீ ரெட்டி.
2008-ல் நானாபடேகர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக சம்பவம் நடந்தபோதே சொன்னார் தனுஸ்ரீ தத்தா. அப்போது அந்த விஷயம் பெரிதாகவில்லை. அதே குற்றச்சாட்டை "மீ டூ' ஸ்டோரியாக தனுஸ்ரீ சொன்னதும்... இப்போது தீப்பிடிக்கிறது. மஹாராஷ்டிரா மகளிர் ஆணையம், நானாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போலீஸாரும் நானா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட்டில் அதிரடியான கருத்துகளைச் சொல்லி பரபரப்பேற்படுத்தும் ஹீரோயினான கங்கனா ரணவத்தும் ‘"மீ டூ' ஸ்டோரி’ சொல்லியுள்ளார்.
கங்கனாவின் சினிமா வாழ்க்கையில், அவரின் அந்தஸ்துக்கு மகுடம் வைத்த படம், அவருக்கு தேசிய விருதை வாங்கித் தந்த படம் "குயின்'.’
இந்தப் படத்தின் டைரக்டர் விகாஸ் பாஹல் மீது கங்கனா சொல்லியுள்ள குற்றச்சாட்டு....
""அவர் திருமணமானவர். ஆனாலும் தினமும் ஒரு பெண்ணுடன் உறவு வைப்பதை பெருமையாக நினைப்பவர். அவர் தினமும் பார்ட்டி வைப்பார். அந்த பார்ட்டியில் கலந்துகொள்ளாமல்... தூங்கச் சென்றுவிடுவேன். நான் அவரை சந்திக்க நேரும்பொழுதெல்லாம் "என்னை இறுக்கி அணைத்துக்கொண்டு, என் கழுத்தில் தன் முகத்தை அழுத்தமாகப் பதிப்பார். என் கூந்தலில் முகத்தை நுழைத்து நுகர்வார். "உன் வாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும்'’ என்பார். நான் என் பலத்தை பிரயோகித்து அவரிடமிருந்து விடுபடுவேன். அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தின் பார்ட்னரான ஒரு பெண்ணுக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். நான் அந்த பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்தேன். அதனால் விகாஸ் என்னுடன் பேசுவதில்லை''’ எனச் சொல்லியுள்ளார் கங்கனா.
"செக்கச் சிவந்த வானம்'’ படப் புகழ் அதிதிராவ் ஹைதாரி, யாருடைய பெயரையும் குறிப்பிடாமல்... “"நான் சில விஷயங்களுக்கு உடன்படாததால் மூன்று பட வாய்ப்புகள் என் கையை விட்டுப் போனது'’எனச் சொல்லியுள்ளார்.
முன்னணியில் இருக்கும் பின்னணிப்பாடகி சின்மயி, தான் சிறுவயதில், சொந்தங்களால் பாலியல் பாதிப்பிற்கு ஆளானதாக தெரிவித்து வருகிறார். பிரபலங்களால் பாதிக்கப்பட்ட சில பெண்களின் "மீ டூ'’பதிவையும் தனது டுவிட்டரில் டேக் செய்து வெளியிட்டு வருகிறார். அதில் சில இளம்பெண்கள் கவிஞர் வைரமுத்துவின் பாலியல் அட்டாக்கிலிருந்து தப்பியதாகவும், ஒரு பெண் ராதாரவியின் பாலியல் தாக்குதலிலிருந்து தப்பியதாகவும் சொல்லியுள்ளனர்.
"ஆதாரமில்லாமல் அவர்கள் சொல்வதை எப்படி நீங்கள் மறுபதிவு செய்யலாம்?'’என டுவிட்டர் ஃபாலோயர்கள் சின்மயியிடம் கேட்க... “"அது உண்மைதான்'’’ என பதில் பதிவிட்டுள்ளார் சின்மயி.
பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டை மறுபதிவு செய்துவருவதற்காக நடிகர் சித்தார்த், சின்மயிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
"திருப்பிக் கொடுங்கள் பெண்களே... மீ டூ மூலம்'’என ‘"மீ டூ'’ இயக்கத்திற்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
""அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்''’என தனது டுவிட்டரில் விளக்கம் சொல்லியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன். தனக்கு நானா படேகரால் பாலியல் ரீதியான தொல்லை நேர்ந்ததாக... சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட அன்றே மீடியாவிலும், நடிகர் சங்கத்திலும் புகார் தெரிவித்தார் தனுஸ்ரீ. அதே புகாரைத்தான் இப்போதும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால்... பாதிக்கப்பட்டதாகச் சொல்லும் பெரும்பாலானவர்கள்... ’"சம்பவம் நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பாக...' எனச் சொல்கிறார்கள்.
இதுதான் புகாரின் மீதான நம்பகத்தன்மையை சந்தேகத்துடன் பார்க்க வைக்கிறது. ‘"சண்டைக்கோழி'’ என்றும், ‘"ஆணாதிக்கத்திற்கு அடிபணியாதவர்'’ என்றும் சொல்லப்படும் கங்கனா ரணவத்கூட... ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்ததைத்தான் இப்போது சொல்கிறாரே...
இப்படி ஒரு ஐயப்பாடு பொதுவாக நிலவுகிறது.
இருப்பினும்... "பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய பாதிப்புகளை இப்போது "மீ டூ'வில் வெளிப்படுத்தினாலும், அந்தப் புகாரை சட்டம் ஏற்க வேண்டும்'’ என மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
தாமதமாக வெளிப்படும் உண்மையான வலியும், உணர்வும் கவனிக்கப்பட வேண்டியவைதான். ஆயினும் ‘"பழுத்த மரம்... கல்வீசிப் பார்ப்போம்'’என்கிற மனநிலை கொண்டதாக மாறிவிடக்கூடாது "மீ டூ'’இயக்கம்.
-ஆர்.டி.எ(க்)ஸ்