Advertisment

டூரிங் டாக்கீஸ்! : மிரட்டி விலகிய "ரெட்' அலர்ட்! -விஷால்... விஜய்சேதுபதி... விவகாரம்!

vishal

சினிமா நடப்பு!

சினிமா தயாரிப்புத் தொழிலில் பெரும்பாலும் யாரும் முழு பட்ஜெட் தொகையையும் வைத்துக்கொண்டு படம் எடுப்பதில்லை. முக்கிய நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களுக்கு சம்பள அட்வான்ஸாக சொந்தப் பணத்தை கொடுத்துவிட்டு, ஃபைனான்ஸ் வாங்கித்தான் படப்பிடிப்பு நடத்துவார்கள். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டும்போது, ஏரியா விநியோகம், வெளிநாட்டு உரிமை, சாடிலைட் ரைட்ஸ்... உள்ளிட்ட வகைகளில் படத்தை வர்த்தகம் செய்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் படக்குழுவினருக்கு செட்டில்மெண்ட் செய்வதுடன், ஃபைனான்ஸியருக்கும் செட்டில்மெண்ட் செய்வார் தயாரிப்பாளர். ஒருவேளை ஃபுல் செட்டில்மெண்ட்டுக்கு வருமானம் வராதபட்சத்தில் புதிய கடன்களை வாங்கி, பழைய கடன்களை செட்டில்மெண்ட் செய்யவேண்டும். அப்போதுதான் படத்திற்கு கிளீயரன்ஸ் கிடைக்கும். அப்படி செய்யாதபோது... படம் ரிலீஸாவதில் சிக்கல் நேரும். இதுதான் சினிமா

சினிமா நடப்பு!

சினிமா தயாரிப்புத் தொழிலில் பெரும்பாலும் யாரும் முழு பட்ஜெட் தொகையையும் வைத்துக்கொண்டு படம் எடுப்பதில்லை. முக்கிய நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களுக்கு சம்பள அட்வான்ஸாக சொந்தப் பணத்தை கொடுத்துவிட்டு, ஃபைனான்ஸ் வாங்கித்தான் படப்பிடிப்பு நடத்துவார்கள். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டும்போது, ஏரியா விநியோகம், வெளிநாட்டு உரிமை, சாடிலைட் ரைட்ஸ்... உள்ளிட்ட வகைகளில் படத்தை வர்த்தகம் செய்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் படக்குழுவினருக்கு செட்டில்மெண்ட் செய்வதுடன், ஃபைனான்ஸியருக்கும் செட்டில்மெண்ட் செய்வார் தயாரிப்பாளர். ஒருவேளை ஃபுல் செட்டில்மெண்ட்டுக்கு வருமானம் வராதபட்சத்தில் புதிய கடன்களை வாங்கி, பழைய கடன்களை செட்டில்மெண்ட் செய்யவேண்டும். அப்போதுதான் படத்திற்கு கிளீயரன்ஸ் கிடைக்கும். அப்படி செய்யாதபோது... படம் ரிலீஸாவதில் சிக்கல் நேரும். இதுதான் சினிமா உலகின் நடைமுறை.

விஷால் எதிர்பார்ப்பு!

Advertisment

விஷால் நடித்த ‘"கத்திச் சண்ட'’ படத்தை தயாரித்த நந்தகோபாலுக்கு பட ரிலீஸ் நேரத்தில் பண நெருக்கடிவர... ஃபைனான்ஸியர் ராமவாசுவிடம் இரண்டுகோடி ரூபாய் ஃபைனான்ஸை தன் பொறுப்பில் வாங்கிக் கொடுத்தார் விஷால். நந்தகோபால் தயாரிக்கும் அடுத்த பட வெளியீட்டின்போது விஷால் வாங்கிக் கொடுத்த ஃபைனான்ஸை செட்டில்பண்ணிவிட வேண்டும்... என்பது நடைமுறை. ஆனால் விஷால் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.

விஜய்சேதுபதியின் பதற்றம்!

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து... ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், நல்லவிதமான விமர்சனத்தையும் விமரிசையாகப் பெற்றிருக்கும் "96'’படத்தை நந்தகோபால் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் வெளியீட்டின்போது... விடிய விடிய செட்டில்மெண்ட் பஞ்சாயத்து நடந்தது. ஃபைனான்ஸியர் மதுரை அன்புவிற்கு செட்டில்மெண்ட் செய்யாததால் படம் வெளியாவதில் பிரச்சினை ஏற்பட்டது. அதிகாலைக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது.

"ஒரு நல்ல படம்... வெளியாகாமல் போகக்கூடாதே...' என பதற்றமடைந்த விஜய்சேதுபதி, மதுரை அன்புவிற்கு, தயாரிப்பாளர் நந்தகோபால் தரவேண்டிய பணத்தில் மூன்றரைக் கோடி ரூபாய்க்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisment

"ஸ்ஸ்ஸ்... அப்பாடா...'’என பெருமூச்சுவிட்ட விஜய்சேதுபதிக்கு அடுத்த அதிர்ச்சியாக... ஃபைனான்ஸியர் ராமவாசுவிடமிருந்து விஷால் பொறுப்பில் நந்தகோபாலுக்கு தரப்பட்ட தொகை இரண்டரைக் கோடியை செட்டில் செய்தால்தான் படம் வெளியாகும் என்கிற விஷயம் தெரியவந்தது.

விஷால் முன்னணி நடிகராக இருக்கிறார். நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கிறார், தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கிறார். பட வெளியீட்டுக்கு விஷாலுக்கான செட்டில்மெண்ட் இடைஞ்சலாக இருக்கும் என வெளியே தெரியவந்தால்... விஷாலுக்கு இமேஜ் டேமேஜ் ஆகும்.... தயாரிப்பாளர்கள் சங்க தலைவரே ஒரு படத்தை வெளியிட குறுக்கே நிற்பதாக தகவல் பரவும்... என திட்டமிட்டு, விஷாலுக்கான செட்டில்மெண்ட் விஷயத்தை முதலில் மறைத்துவிட்டார் நந்தகோபால். ஆனால் ஒப்பந்தப்படி இதை கிளீயரன்ஸ் செய்யவேண்டும்... என நந்தகோபாலிடம் விஷால் தரப்பு கேட்டதால்... பிரச்சினை வெளியே வந்தது.

தன் பட வெளியீட்டுக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வருவதால் மேலும் பதற்றமான விஜய்சேதுபதி, ‘"விஷாலுக்கான செட்டில்மெண்ட்டையும் நானே ஏற்கிறேன்'’என ஒப்புக்கொண்டார்.

விஷால் விளக்கம்!

"விஜய்சேதுபதி பணம் தர்றதா சொன்ன பிறகுதான் "96'’படத்தை வெளியிட விஷால் அனுமதிச்சார்'’ என தகவல்கள் தீயாய்ப் பரவ... விஜய்சேதுபதியை தொடர்புகொண்டார் விஷால். ஆனால் அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால்... அவரின் மைத்துனரும், மேனேஜருமான ராஜேஷிடம் செல்போன் மூலம் தொடர்புகொண்ட விஷால்... “""இன்னைக்கி சினிமா இண்டஸ்ட்ரியில அதிக கடனாளி நான்தான். தொடர்ந்து வட்டி கட்டிக்கிட்டிருக்கேன். நந்தகோபாலுக்கு வாங்கிக் கொடுத்த ஃபைனான்ஸுக்கும் வட்டி கட்டிக்கிட்டுத்தான் இருக்கேன். கடன், வட்டி... இதோட வலி என்னானு எனக்குத் தெரியும். அந்தமாதிரி ஒரு வலி விஜய்சேதுபதிக்கு என்னால வரவேண்டாம். விஜய்சேதுபதி தன்னோட ஒவ்வொரு படத்தோட ரிலீஸ் சமயமும் தன்னோட சம்பளத்த விட்டுக் கொடுக்குறார். அவரை நான் மேலும் கஷ்டப்படுத்த விரும்பல. எனக்கும், நந்தகோபாலுக்கும்தான் கொடுக்கல் வாங்கல். அதனால விஜய்சேதுபதி எனக்கு பணம் தரவேண்டாம். "96'’படம் நல்லாருக்குனு சொன்னாங்க. மனசாட்சியோட நந்தகோபாலே எனக்கு அந்தப் பணத்தை எப்ப தர்றாரோ... அப்ப தரட்டும்...''’எனச் சொல்லியிருக்கிறார்.

இரண்டு ஹீரோக்களுக்கு இடையில் மோதலை உண்டாக்குவதுபோல "ரெட் அலர்ட்'’ சொல்லி... பிறகு ‘வாபஸ்’ வாங்கியிருக்கிறது... ரிலீஸ் நேர நெருக்கடி என்கிற சகஜமான விஷயம்.

-இரா.த.சக்திவேல்

nkn121018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe