மாளவிகா நெகிழ்ச்சி!
தாய்மொழியான மலையாளத் தில் தனது சினிமா கேரியரைத் தொடங் கிய மாளவிகா மோகனன், பின்பு தமிழ், இந்தி என பிரபலமாகிவிட்டார். சினிமாவை விட தனது கவர்ச்சி ஃபோட்டோஷூட்டால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர், கைவசம் தமிழில் கார்த்தியின் ‘"சர்தார் 2'’, தெலுங்கில் பிரபாஸின் ‘"தி ராஜா சாப்'’ உள்ளிட்ட படங்களை வைத்துள்ளார். தொடர்ந்து பிரபல ஹீரோக்களுடன் நடித்துவரும் அவர் மீண்டும் தாய்மொழிக்கு திரும்பியுள்ளார். அங்கு முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் ‘"ஹிருதயப்பூர்வம்'’ படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதில் மாளவிகா மோகனனும் கலந்து கொண்டுள்ளார். முதல்முறையாக சீனியர் நடிகருடன் நடித்தது குறித்து அனுபவம் பகிர்ந்த
மாளவிகா நெகிழ்ச்சி!
தாய்மொழியான மலையாளத் தில் தனது சினிமா கேரியரைத் தொடங் கிய மாளவிகா மோகனன், பின்பு தமிழ், இந்தி என பிரபலமாகிவிட்டார். சினிமாவை விட தனது கவர்ச்சி ஃபோட்டோஷூட்டால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர், கைவசம் தமிழில் கார்த்தியின் ‘"சர்தார் 2'’, தெலுங்கில் பிரபாஸின் ‘"தி ராஜா சாப்'’ உள்ளிட்ட படங்களை வைத்துள்ளார். தொடர்ந்து பிரபல ஹீரோக்களுடன் நடித்துவரும் அவர் மீண்டும் தாய்மொழிக்கு திரும்பியுள்ளார். அங்கு முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் ‘"ஹிருதயப்பூர்வம்'’ படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதில் மாளவிகா மோகனனும் கலந்து கொண்டுள்ளார். முதல்முறையாக சீனியர் நடிகருடன் நடித்தது குறித்து அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன், “"என் கனவுகளில் ஒன்று நிறைவேறியிருக்கிறது. இந்த அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது''” என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
ரியல் ஜோடி!
"மரகத நாணயம்' படத்தில் ரீல் ஜோடி யாக நடித்து ரியல் ஜோடியாக மாறியவர்கள் ஆதி -நிக்கி கல்ராணி. ஆனால் திருமணத் திற்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. இப்போது மரகத நாணயம் படத்தின் இரண் டாம் பாகத்திற்காக மீண்டும் இருவரும் இணையவுள்ளனர். படத்தின் ஆரம்பகட்ட பணி கள் மும்முரமாக நடை பெற்றுக் கொண்டிருக் கிறது. முதல் பாகத்தை விட பெரிய பட்ஜெட்டிலும் இந்தப் படம் உருவாகிறது. படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஆனால் அதில் இரண்டாவது ஹீரோயின் முக்கிய கதா பாத்திரம். யார் என படக்குழு தெரிவிக்கவில்லை. சஸ் பென்ஸாக வைத்துள்ளனர். நிக்கி கல்ராணிதான் ஆதிக்கு ஜோடி. இவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதால் இரண்டாம் பாகத்தில் கூடுதல் காதல் காட்சிகளை படத்தின் இயக்குநர் சரவன் இணைத் துள்ளார். திருமணத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளதால் ஆதியும் நிக்கி கல்ராணியும் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
நண்பர்கள்தானாம்!
மாடலிங் மூலம் பிரபலமாகி பின்பு ஹீரோயினாக மாறியவர் திவ்யபாரதி. "பேச்சுலர்' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியிருந்தாலும் அதற்குப்பிறகு அவர் நடித்த "மதில் மேல் காதல்' மற்றும் ‘"ஆசை'’ படங்கள் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்த திவ்யபாரதி, கேமியோ ரோலில் நடித்த "மகாராஜா' படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதால் ஆறுதலடைந்தார். இருப்பினும் ஹீரோயினாக நாம் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லையே என்ற கவலையிருக்க, தற்போது நீண்ட இடை வெளிக்குப் பிறகு அவர் ஹீரோயினாக நடித்த ‘கிங்ஸ்டன்’ படம் வருகிற மார்ச் 7ஆம் தேதி வெளியாகிறது. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகராக ஜி.வி.பிரகாஷுக்கு இது 25வது படம். இந்த ஸ்பெஷலான படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பது மகிழ்ச்சி என திவ்யபாரதி சொல்கிறார். இருவரும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வருவதாக ஒரு தகவல் உலா வந்துகொண் டிருக்க... இருவருமே இந்தப் பட புரொமோஷனுக்காக ஒன்றாக இணைந்து பேட்டி கொடுத்தபோது, டேட்டிங் தகவலை மறுத்துள்ளனர்.
குவியும் வாய்ப்புகள்!
"டிராகன்'’ படம் மூலம் மீண்டும் டாக் ஆஃப் தி டவுனாக மாறியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அவரது நண்பர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. தமிழைத் தவிர்த்து படத்தில் அனுபமா பரமேஸ்வரன் இருப்பதால் தெலுங் கிலும் படத்திற்கு நல்ல ரிப்போர்ட். இதனால் இப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலிக்கும் என சினிமா தட்பவெட்பம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இதனால் பிரதீப் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் மீண்டும் ஒரு படம் உருவாகிறது. இது ஒருபுறமிருக்க இப்படத்தால் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறார் நடிகை கயாடு லோஹர். தன் அழகு மூலம் இளைஞர்கள் மனதை கொள்ளைகொண்ட இவர், இது தனக்கு முதல் படம் என்றும், அதுவே இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதால் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
-கவிதாசன் ஜெ.