டூரிங் டாக்கீஸ்! மனிதர்களையும், இயற்கையையும் நேசிக்கிறேன்''” -மிஷ்கினின் உருக்கமான பேச்சு

ss

"ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவாவின் ‘"செவன் சாமுராய்'’ படம் பார்த்திருக் கியா? ஜெர்மனிய எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய ’"சித்தார்த்தா'’ நாவல் வாசித்திருக்கியா?' என்று தன்னிடம் உதவி இயக்குந ராக வாய்ப்புக்கேட்டு வரு கிறவர்களின் அறிவுத்தேட லுக்கு உந்துசக்தியாக உலக சினிமாவையும், சர்வதேச இலக்கியங்களையும் தேடிப் பார்க்க, படிக்க காரணகர்த்தா வான அறிவுஜீவி, யாராவது எப்போ தும் கழட்டாமல் கூலிங் கிளாஸ் போட்டிருந்தால் "மனசுல என்ன இவருன்னு நினைப்போ...' என்ற கிண்டலுக் கும் உரியவர் இயக்குநர், நடிகர் மிஷ்கின்.

tt

இவரது பேச்சு தமிழ் சினிமா வட்டாரத் திலும், சமூகவலைத்தளங்களிலும் எப்போதும் பேசுபொருளாக அமையும். பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டால் "இந்த பாட்டை இன்னும் கேட்கலை, ஆனால் நல்லாத்தான் இருக்கும்' என்றும், "இந்த இயக்குநரோட இதற்கு முந

"ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவாவின் ‘"செவன் சாமுராய்'’ படம் பார்த்திருக் கியா? ஜெர்மனிய எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய ’"சித்தார்த்தா'’ நாவல் வாசித்திருக்கியா?' என்று தன்னிடம் உதவி இயக்குந ராக வாய்ப்புக்கேட்டு வரு கிறவர்களின் அறிவுத்தேட லுக்கு உந்துசக்தியாக உலக சினிமாவையும், சர்வதேச இலக்கியங்களையும் தேடிப் பார்க்க, படிக்க காரணகர்த்தா வான அறிவுஜீவி, யாராவது எப்போ தும் கழட்டாமல் கூலிங் கிளாஸ் போட்டிருந்தால் "மனசுல என்ன இவருன்னு நினைப்போ...' என்ற கிண்டலுக் கும் உரியவர் இயக்குநர், நடிகர் மிஷ்கின்.

tt

இவரது பேச்சு தமிழ் சினிமா வட்டாரத் திலும், சமூகவலைத்தளங்களிலும் எப்போதும் பேசுபொருளாக அமையும். பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டால் "இந்த பாட்டை இன்னும் கேட்கலை, ஆனால் நல்லாத்தான் இருக்கும்' என்றும், "இந்த இயக்குநரோட இதற்கு முந்தைய எந்த படத்தையும் இன்னும் பார்க்கலை ஆனால் நல்லாத்தான் எடுத் திருப்பான்' என்றும் மேடைப்பேச்சுக்கான எந்த ஒப்பனையும் இல்லாமல் பேசிவிடுவார். அத்தோடு சக இயக்குநர்களை, நடிகர்களை சர்வசாதாரணமாக அவன், இவன் என்று ஒருமையில் பேசிவிடுவார். அந்த பேச்சு சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால் பார்ப்பவர்களுக்கு சற்று நெருடலாகவே இருக்கும். ஆனால் பெரியஅளவில் அவர் மீது வெளிப்படை யான விமர்சனமோ, கண்டிப்போ இருந்ததில்லை. இவ்வாறு பேசிவிட்டோமே என்று அவரும் அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின் பேசிய பேச்சிற்கு கண்டனக்குரல்கள் எழுந்து அவரும் அதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

குடிப்பழக்கத்தினால் ஏற்படும் சிக்கல்களை பேசுகிற படமாக கடந்த வாரம் வெளியான ‘"பாட்டல் ராதா'’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், "சாராயம் காய்ச்சுகிற டெக்னிக் எனக்குத் தெரியும். சினிமாவைவிட அதைத்தான் அதிகமாக கரைத்துக் குடித்திருக்கிறேன். குடி என்பதை மனிதன் காரித்துப்பின எச்சில் போல பார்க்கிறார்கள். நான் மதுவை விரும்பி நேசித்து குடிப்பவன். ஆனால் அது என்னை ஒரு போதும் கட்டுப்படுத்திய தில்லை''’என்றார். மேலும், பேச்சின் இடையே எப்போதும் போல அவன், இவன் என்று ஒருமையில் பேசுவதும், இன்னும் ஒருபடி மேலே போய் ஆபாசமான, தரக்குறைவான வார்த்தைகளையும் பேசி முகம் சுளிக்க வைத்தார்.

இந்த பேச்சுக்கும், இதை மேடையில் கேட்டு சிரித்துக்கொண்டி ருந்த மற்ற இயக்குநர்களுக்கு கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தது. இதற்காக இயக்குநர் மிஷ்கின் கண்டனக் குரல் எழுப்பிய ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு பகிரங்கமாக வருத்தம் தெரி வித்து, மன்னிப்பும் கேட்டு உருக்கமாகப் பேசியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ‘"பேட் கேர்ள்'’ டீசர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசுகை யில், "என் சக இயக்கு நர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள் கிறேன். அவர்கள் என் பேச்சிற்கு சிரித்தார் கள் என நிறைய பேர் அவர்களையும் திட்டினார்கள். நான் நகைச்சுவையாகத் தான் பேசினேன். ஒரு சில வார்த்தைகள் எல்லைமீறி போய்விட்டது. மனதில் இருந்து பேசும்போது அப்படி வந்துவிட்டது''’என்றார்.

மேலும் “"என் படங்கள் நல்ல படங்கள் இல்லையா? சமூக கருத்துச் சொல்ல வில்லையா? மனிதர்களையும் இயற்கையையும் நேசிப்பவன் நான். நான் பேசியது ஆபாசமாக இருக்கிறது என நீங்கள் சொல்கிறீர்கள். "பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் கதையின் தன்மைக்காக நடிகை ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சி தேவைப்பட்டது. அதை எடுத்து முடித்துவிட்டு அந்த காட்சியை ஒரு இளைஞன் இலக்கியத் தன்மையோடு பார்க்கமாட்டான், விரசமாகத்தான் பார்ப்பான் என்று அந்த காட்சியை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அந்த காட்சியின் ஒரு போட்டோவை பயன்படுத்தி யிருந்தாலும், அந்தப் படம் ஓடியிருக்கும். ஆனால் இன்னும் இரண்டரை வருசமாகியும் ரிலீஸ் ஆகவில்லை.

"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தின் டி.வி. உரிமைக்காக என்னை மிரட்டி கையெழுத்து போட வைத்தார்கள். அதற்காக கொடுத்த செக்கை கிழித்துப் போட்டேன். வெறும் வெள்ளை பேப்பரும், பென்சிலும் மட்டும் எடுத்துக்கொண்டு சென்னை வந்தவன். கஷ்டத்தையும், துரோகத் தையும் அதிகம் பார்த்திருக்கிறேன். நான் ஏன் மனிதர்களை மோசமாகப் பேசப்போகிறேன். படத்தை கூவி விற்கிறோம். அந்த படம் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்று எதோ பேசிவிட்டேன்'' என்று பகிரங்க மன்னிப்பு கேட்டு உருக்கமாகப் பேசினார்.

நாவினால் சுட்ட வடு ஆறா தென்று வள்ளுவர் அன்றே அறிவுறுத்தியிருக்கிறார்.

-தாஸ்

nkn010225
இதையும் படியுங்கள்
Subscribe