ன் 28 வயதில்... 2012-ஆம் ஆண்டில் தன் தலையை மொட்டையடித்துக்கொண்டு, சில காலம் சாமியார் வாழ்க்கையை வாழ்ந்தவர் தனுஸ்ரீ தத்தா. இமயமலை அடிவாரங்களில், காஷ்மீர் லடாக் பள்ளத்தாக்குகளில் சாமியார்களோடு சாமியாரிணியாக அமைதி தேடி அலைந்தார்.

தனது ஆன்மிக ஈடுபாட்டுக்கு அப்போது அவர் சொன்ன காரணம்..

danushree""என்னுடைய பதினாறு வயதில் நடிக்கத் தொடங்கினேன். பத்து ஆண்டுகளாக ஓய்வின்றி நடித்தேன். ஆனால் சினிமா உலகில் எனக்கு நேர்ந்த அனுபவங்கள் கொடுமையானவை. இரக்கமற்ற மனிதர்களாலும், இதயத்தை நொறுக்கியவர்களாலும் நான் பட்ட மனவேதனை கொஞ்சமல்ல. எனக்கு ஆதரவு தரக்கூட நண்பர்கள் இல்லை. என் மன அழுத்தங்களை, பாரங்களை இறக்கிவைக்க எனக்கு நம்பிக்கையானவர்கள் கிடைக்கவில்லை. அதனால் கடவுளிடம் ஓடுகிறேன். அங்கே என்னை அடையாளம் தெரிந்துகொள்ளாமல் இருக்கத்தான் மொட்டை போட்டுக்கொண்டேன்'' எனச் சொல்லியிருந்தார். ஆனால் குடும்பத்தாரின் வற்புறுத்தல் காரணமாக தீவிர ஆன்மிகத்திலிருந்து விலகினார்.

சினிமா உலக அனுபவம் குறித்து அப்போது தனுஸ்ரீ தத்தா சொன்னபோது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

சினிமா உலக அனுபவம் குறித்து இப்போது தனுஸ்ரீ தத்தா சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம்... அவர் குற்றம் சாட்டியிருக்கும் நபர் மிகவும் பிரபலமானவர்.

பாரதிராஜாவின் "பொம்மலாட்டம்' படத்தின் கதைநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நானா படேகர். பாலிவுட்டில் பிரபலமான கேரக்டர் ஆர்டிஸ்ட். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ரஜினியின் "காலா' படத்தில் நடித்தார். மகாராஷ்டிரக்காரரான நானா... தன் வீட்டில், தான் மட்டும் கருப்பாக பிறந்ததால் தாழ்வு மனப்பான்மையுடனும், முரட்டுத்தனத்துடனும் வளர்ந்தவர். ஆனால் நடிப்பில் புலி. அதனால்... அவரை பாலிவுட் கொண்டாடுகிறது. மனீஷா கொய்ராலாவும், நானாவும் சிலமாத காலம் ஒன்றாக வசித்து, பிறகு பிரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நானா மிகுந்த கோபக்காரர். அதனால் அவரை "ஆங்ரி மேன்' என்றுதான் இண்டஸ்ட்ரியில் சொல்வார்கள்.

Advertisment

2008-ஆம் ஆண்டில் "ஹாரன் ஓகே ப்ளீஸ்' இந்திப் படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடவந்தார் தனுஸ்ரீ.

""அப்போது சம்பந்தமே இல்லாமல் நானாபடேகர் வந்து எனக்கு டான்ஸ் ஸ்டெப்ஸ் சொல்லிக்கொடுக்கிற சாக்கில் என்னிடம் அத்துமீறினார். நானா படேகர் அத்துமீறியதால் அதிர்ச்சியடைந்தேன்'' எனச் சொல்லி சம்பவம் நடந்த அன்றே மீடியாவுக்கு பேட்டியளித்தார் தனுஸ்ரீ. இந்த களேபரத்துக்கு மத்தியில் உடனடியாக நடிகை ராக்கி சாவந்த்தை வரவழைத்து அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கினார்கள்.

நானாவுக்கு எதிராக தனுஸ்ரீ புகார் தெரிவித்ததால்... பீகார் பெண்ணான தனுஸ்ரீயை ராஜ் தாக்கரேவின் "நவ நிர்மான் சேனா' ஆட்கள் வழிமறித்து தாக்க முனைந்ததுடன், மிரட்டலும் விட்டார்கள். இந்த சர்ச்சைகளால் nanapadikarதனுஸ்ரீக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படியே தென்னிந்திய சினிமாவுக்கு நகர்ந்தார். விஷாலுடன் "தீராத விளையாட்டுப்பிள்ளை' படத்தில் நடித்தார். அதன்பிறகு ஆன்மிக நாட்டம் கொண்டார். பின் தீவிர ஆன்மிகத்தை கைவிட்டவர்.. கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வசித்து வந்தார்.

சமீபத்தில் இந்தியா திரும்பிய தனுஸ்ரீ... சினிமா நடிகைகள் சமீபகாலமாக பாலியல் குற்றச்சாட்டுகளை ஒளிவு மறைவில்லாமல் சொல்லிவரும் இந்த நேரத்தில் தனக்கு நேர்ந்த பழைய தொல்லைகளை மீண்டும் டி.வி. பேட்டி மூலம் பதிவு செய்திருக்கிறார்.

""2005-ஆம் ஆண்டு "சாக்லெட்: டீப் டார்க் சீக்ரெட்ஸ்' படத்தில் நடித்தபோது இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, என்னிடம் மோசமாக நடந்துகொண்டார். நடிகர் இர்பான்கானை க்ளோஸ்-அப்பில் காட்டும் காட்சியை படமாக்கினார். நான் அந்த ஷாட்டிலேயே வர மாட்டேன். இர்பான் எதையோ பார்த்துவிட்டு முகபாவனை செய்ய வேண்டும். ஆனால்... "உன்னோட ட்ரெஸ்ஸை கழற்றிவிட்டு இர்பான் முன்பு நில். கேமரா உன்னை படம் பிடிக்காது. ஆனால், இர்பான் உன்னை பார்த்துச் செய்யும் முகபாவனைதான் படமாகும்' எனச் சொன்னார். நான் மறுத்தபோது... எனக்கு ஆதரவாக இர்பானும், சுனில் ஷெட்டியும் "அப்படியெல்லாம் செய்ய வேண்டாம்' எனச் சொன்னார்கள்.

நானா படேகரால் என் சினிமா வாழ்க்கை நாசமாகிவிட்டது. பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன. நானா, பெண்களை மதிக்கமாட்டார். பல நடிகைகள் அவரிடம் அடி வாங்கியுள்ளனர். ஆனால் நானாவைப் பற்றிய செய்திகள் வெளியில் வராது. இனியும் நான் பொறுக்கப் போவதில்லை. ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் தங்கள் படங்களில் நானாவுக்கு வாய்ப்புத் தரக்கூடாது'' எனச் சொல்லியுள்ளார் தனுஸ்ரீ.

"தனுஸ்ரீமேல் சட்ட நடவடிக்கை எடுப்பேன்' என சொல்லியுள்ளார் நானா.

"அந்தப் பாடல் காட்சி எடுக்கப்பட்டபோது... நானா அப்படி நடந்துகொள்ளவில்லை' என "ஹாரன் ஓகே ப்ளீஸ்' படத்தின் அந்த பாடல்உகாட்சிக்கு நடனம் அமைத்த சென்னையைச் சேர்ந்தவரான பிரபல டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா சொல்ல...

"கணேஷ் ஒரு பொய்யர்'’என தனுஸ்ரீ பாய்ந்துள்ளார்.

"ஐட்டம் டான்ஸுக்கு ஆடணும்னு திடீர்னு அழைப்பு வரவும் போனேன். அப்போ கேரவேன் அருகில் கூட்டமா இருந்துச்சு. தனுஸ்ரீ போதைல மயங்கிக் கிடப்பதாச் சொன்னாங்க' என தனுஸ்ரீயை டேமேஜ் பண்ணியுள்ளார் ராக்கி சாவந்த்.

பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர் உள்ளிட்ட நடிகைகள் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

-ஆர்.டி.எ(க்)ஸ்