Advertisment

டூரிங் டாக்கீஸ்! 15.11.24

tt

வெற்றிக் கூட்டணி!

அஜித்திற்கு தொடர் வெற்றியைத் தந்த இயக்குநர் "சிறுத்தை' சிவா, தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள "கங்குவா' படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிக் கூட்டணி நாயகனான அஜித்துடன் ஐந்தாவது முறையாக இணையவுள்ளார். "குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் படம் தொடங்கு வதற்கு காலம் எடுத்துக் கொள்வதால் அந்த இடைவெளியில் வேறொரு படம் இயக்கலாம் என்ற திட்டத்தையும் வைத்திருந்திருக்கிறாராம் சிவா. அதற்கேற்றாற் போல "கங்குவா' படத் தில் சிறிய ரோலில் வந்த கார்த

வெற்றிக் கூட்டணி!

அஜித்திற்கு தொடர் வெற்றியைத் தந்த இயக்குநர் "சிறுத்தை' சிவா, தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள "கங்குவா' படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிக் கூட்டணி நாயகனான அஜித்துடன் ஐந்தாவது முறையாக இணையவுள்ளார். "குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் படம் தொடங்கு வதற்கு காலம் எடுத்துக் கொள்வதால் அந்த இடைவெளியில் வேறொரு படம் இயக்கலாம் என்ற திட்டத்தையும் வைத்திருந்திருக்கிறாராம் சிவா. அதற்கேற்றாற் போல "கங்குவா' படத் தில் சிறிய ரோலில் வந்த கார்த்தி, படப்பிடிப்பின்போது சிறுத்தை சிவா விடம் மீண்டும் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என கூற, அதை கருத்தில் கொண்டு தனது அடுத் தடுத்த நகர்வுகளை திட்டமிட் டுள்ளார் சிவா.

சஸ்பென்ஸ் வில்லன்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் "புறநானூறு'’ படத்தின் ஹீரோயினாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க, முக்கியமான ரோலில் அதர்வா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்துக்கு ஒரு பவர்ஃபுல்லான நடிகரை தேடி வந்த படக்குழு, முதலில் ஃபகத் ஃபாசிலிடம் பேச்சு வார்த்தை நடத்தி யது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் நடிக்க வில்லை. நிவின்பாலியிடம் பேச்சுவார்த்தை நடந்தது, அவர் தரப்பும் தெளிவான எந்த பதிலையும் கொடுக்கவில்லையாம். எனவே எப்படியாவது அந்த கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்கவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறதாம் படக்குழு.

Advertisment

tt

ரியல் ஜோடி!

மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக்பச்சன் -ஐஸ்வர்யா ராய் தம்பதி குரு மற்றும் "ராவண்' (இந்தி) ஆகிய படங்களில் நடித்திருந்தனர். இப்போது மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். மணிரத்னம் "தக் லைஃப்' பட பணியில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தை இந்தியில் உருவாகி மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிடத் திட்டமிட்டுள்ளார் மணிரத்னம். சமீபகாலமாக அபிஷேக்பச்சன் -ஐஸ்வர்யாராய் ஜோடி விவாகரத்து செய்ய வுள்ளது என பாலிவுட் வட்டாரத்தில் பலமாக பேச்சு அடிபட... அதை முறியடிக்கும் விதமாகத்தான் இந்தப் படம் உருவாகிறது என ஒரு தகவல் உலாவருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ளது.

Advertisment

செலக்டிவ் சாய்பல்லவி!

"அமரன்' பட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் சாய்பல்லவி அடுத்தடுத்து படங்களில் நடித்துவருகிறார். தெலுங்கில் நாக சைதன்யாவுடன் "தண்டேல்' படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, இந்தியில் ராமாயணக் கதையை மையப்படுத்தி பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகும் ‘ராமாயணம்’ படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப் பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் அமீர்கான் தயாரிப்பில் ஒரு இந்திப் படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடித்துவரும் சாய் பல்லவி, இனிமேல் தொடர்ச்சியாக படங் களில் நடிக்க முடிவெடுத்துள் ளார். அதோடு தன்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத் துவம் உள்ள படங்களை தேர்வு செய்தே ஒப்புக்கொள்கிறாராம். பெரிய ஹீரோ படம் என்றாலும் இந்த முடிவில் சாய்பல்லவி உறுதியாக இருக்கிறார்.

-கவிதாசன் ஜெ.

nkn151124
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe