டூரிங் டாக்கீஸ்! தீவிர யோசனை!

cc

தீவிர யோசனை!

கமல் -ஷங்கர் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப் பட்ட "இந்தியன் 2' படம், தோல்வியடைந்து கடும் விமர் சனத்திற்கு ஆளானதால் "இந்தியன் 3' படத்திற்கு போதிய எதிர்பார்ப்பு இல்லை. இதனால் "இந்தியன் 3' படத்தை நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர். இது தொடர் பாக தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தள நிறு வனத்திடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். ஆனால் நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. அதற்காகக் காத்திருக்கிறது படக்குழு. இந்த இடைவெளி யில் நேரடி ஓ.டி.டி. தகவல் விநி யோகஸ்தர் களுக்கு தெரிய வர லைகா நிறுவனத்துக்கு அவர்கள் போன் போட்டு "திரையரங்கிலே வெளியிடுங்கள், இந்தியன் 2 இழப்பீட்டை சரிசெய்ய வேண்டும்' என கோரிக்கை வைக்க தற்போது திரையரங்கில் வெளியிடலாமா அல்லது ஓ.டி.டி.-யில் வெளி

தீவிர யோசனை!

கமல் -ஷங்கர் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப் பட்ட "இந்தியன் 2' படம், தோல்வியடைந்து கடும் விமர் சனத்திற்கு ஆளானதால் "இந்தியன் 3' படத்திற்கு போதிய எதிர்பார்ப்பு இல்லை. இதனால் "இந்தியன் 3' படத்தை நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர். இது தொடர் பாக தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தள நிறு வனத்திடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். ஆனால் நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. அதற்காகக் காத்திருக்கிறது படக்குழு. இந்த இடைவெளி யில் நேரடி ஓ.டி.டி. தகவல் விநி யோகஸ்தர் களுக்கு தெரிய வர லைகா நிறுவனத்துக்கு அவர்கள் போன் போட்டு "திரையரங்கிலே வெளியிடுங்கள், இந்தியன் 2 இழப்பீட்டை சரிசெய்ய வேண்டும்' என கோரிக்கை வைக்க தற்போது திரையரங்கில் வெளியிடலாமா அல்லது ஓ.டி.டி.-யில் வெளியிடலாமா என்ற யோசனையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

விலகு... விலகு!

"சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கை தொடர்ந்து ‘"புறநானூறு'’படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார் சுதா கொங்கரா. முன்னதாக, இந்தப் படத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங் களை கமிட் செய்தார் சுதா. பின்பு அனை வரும் விலக சூர்யாவுக்கு பதில் சிவகார்த்தி கேயனையும், நஸ்ரியாவுக்கு பதில் ஸ்ரீலீலாவையும், விஜய்வர்மாவுக்கு பதில் லோகேஷ் கனகராஜையும் கமிட் செய் திருந்தார். இதிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் சில காரணங்களால் விலக அவருக்கு பதில் அதர்வாவை கமிட் செய்துள்ளார். அதேபோல் துல்கர் சல்மானும் விலக அவருக்கு பதில் மற்றொரு மலையாள நடிகர் ரோஷன்மாத்யூ என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து படப்பிடிப் பைத் தொடங்க திட்டமிட்டிருக் கிறார். அதற்கேற்றபடி அனைவரிட மும் கால்ஷீட்டும் வாங்கி பக்காவாக பிளான் போட்டுள்ளார். ஏற்கனவே இந்தப் படம் பிப்ரவரியில் திட்ட மிடப்பட்டு நடிகர்கள் விலகியதால் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் அது மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமுடன் இருக்கிறார்.

cc

சிம்பு 50

ஆரம்பகட்டத்தில் ஹிட் கொடுத்தது போல் மீண்டும் தனது ரசிகர்களுக்கு திருப்தி கொடுக்கும் வகையில் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என முயற்சித்துவருகிறார் சிம்பு. தனது 48வது படமாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டான சிம்பு, அப்படத்தை தொடங்குவதற்குள் மணிரத்னம் -கமல் கூட்டணியில் உருவாகும் "தக் லைஃப்' படத்தில் நடிக்கப் போய்விட்டார். அதனால் இந்தப் படம் சிம்புவின் 48வது படமாக மாற, தேசிங் பெரியசாமி படம் 49வது படமாக மாறியது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமலேயே இருந்து வருகிறது. இந்த சூழலில் இந்தப் படத்தை ஆரம்பிப்பதற்குள் இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. அதாவது ‘"ஓ மை கடவுளே'’பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இந்தப் படம்தான் சிம்புவின் 49வது படமாக உருவாகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க படப்பிடிப்பு உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தப் படம் சிம்புவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என கூறப்படு கிறது. இந்தப் படத்தை முடித்து விட்டுத்தான் தேசிங் பெரியசாமி படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இது அவரது 50வது படம்.

நிறைவேறிய ஆசை!

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வந்தாலும் தனக்கு பொருத்தமான கதையை மட்டும் தேர்வு செய்து நடித்துவருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. அந்த வகையில் "தக் லைஃப்' படத்தில் நடித்துள்ள அவர், மலையாளத்தில் ஒரு படமும் தெலுங்கில் ஒரு படமும் நடித்து வருகிறார். இதனிடையே முதல்முறையாக மோகன்லாலுடன் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள நடிகையான இவர், மோகன்லாலுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்கிறார். அது தற்போது நிறைவேறவுள்ளதால் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்கிறார். படத்தின் படப்பிடிப்பு டிசம்பரிலிருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. "ஹிருதயபூர்வம்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இப்படத்தை மோகன்லாலை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள சத்யன் அந்திக்காடு இயக்குகிறார். இப்படத்தில் "பூவே உனக்காக'’ சங்கீதாவும் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

-கவிதாசன் ஜெ.

nkn091024
இதையும் படியுங்கள்
Subscribe