Advertisment

டூரிங் டாக்கீஸ்! 17.08.24

tt

வெப்சீரிஸ் விமல்!

"விலங்கு' வெப் சீரிஸிற்கு பிறகு டேக்ஆஃப் ஆன விமல் கேரியர், நிலையான இடத்தில் நிற்கவில்லை. இந்த சூழ லில் "தேசிங்குராஜா 2', "சார்', "போகுமிடம் வெகுதூரமில்லை' போன்ற படங்களை மலைபோல் நம்பியுள்ளார். மேலும் "விலங்கு சீசன் 2' சீரிஸை கைவசம் வைத்துள்ளார். இதன் பணிகள் சில காரணங்களால் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பாக ஒரு வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த வெப் தொடரில் திவ்யா துரைசாமி, பிக்பாஸ் பாவ்னி என இரண்டு கதாநாயகிகள். ராமு செல்லப்பா இயக்கும் இந்த சீரிஸ், ஹாட் ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் மும்முர மாக நடைபெற்று வரு கிறது. ஏற்கனவே வெப் சீரிஸ் தனக்கு வெற்றிப் பாத

வெப்சீரிஸ் விமல்!

"விலங்கு' வெப் சீரிஸிற்கு பிறகு டேக்ஆஃப் ஆன விமல் கேரியர், நிலையான இடத்தில் நிற்கவில்லை. இந்த சூழ லில் "தேசிங்குராஜா 2', "சார்', "போகுமிடம் வெகுதூரமில்லை' போன்ற படங்களை மலைபோல் நம்பியுள்ளார். மேலும் "விலங்கு சீசன் 2' சீரிஸை கைவசம் வைத்துள்ளார். இதன் பணிகள் சில காரணங்களால் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பாக ஒரு வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த வெப் தொடரில் திவ்யா துரைசாமி, பிக்பாஸ் பாவ்னி என இரண்டு கதாநாயகிகள். ராமு செல்லப்பா இயக்கும் இந்த சீரிஸ், ஹாட் ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் மும்முர மாக நடைபெற்று வரு கிறது. ஏற்கனவே வெப் சீரிஸ் தனக்கு வெற்றிப் பாதையை அமைத் துக் கொடுத்ததால், இந்த புது சீரிஸும் சாதகமாக அமையும் என விமல் நம்பிக்கொண்டிருக்கிறார்.

Advertisment

சென்டிமெண்ட் மகாராணி!

"மகாராஜா' படம் மூலம் லைம்லைட்டுக்கு வந்த நித்திலன் சாமிநாதன், அடுத்ததாகப் பெரிய ஹீரோவை வைத்து படமெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஹீரோயின் சப்ஜெக்டை கையில் எடுத்துள்ளார். இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நயன்தாராவை கமிட்செய்துள்ளார். இந்த ஒப்பந்தம் "மகாராஜா' பட வெளியீட்டுக்கு முன்பே போடப்பட்டதாம். சில காரணங்களால் தொடங்கப்படாத நிலையில் தற்போது ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் படத்தை மகாராஜா படத்தைத் தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கின்றனர். படத்திற்கு "மகாராணி' என தலைப்பு வைத் துள்ளனர்.

Advertisment

tt

காத்திருக்கும் அம்மன்!

சமீபத்தில் "மூக்குத்தி அம்மன்' பட இரண்டாம் பாகத்தை அதிரடியாக அறிவித்த படக்குழு, படத்தின் பணிகளைத் தீவிரப் படுத்தியுள்ளது. அதோடு சில மாற்றங் களையும் செய்துள்ளது. படத்தில் ஆர்.ஜே. பாலாஜி இல்லை. அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்கிறார். நடிகர்களுக்கான தேடுதல் பணி நடந்து வருகிறது. மேலும் இயக்குநரிலும் மாற்றம் ஏற்பட்டு தற்போது சுந்தர்.சி-யை டிக் செய்துள்ளது படக்குழு. கடைசியாக அவர் இயக்கிய "அரண்மனை' 4 குடும்ப ரசிகர்களை கவர்ந்து வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால், அவரை தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் சுந்தர்.சி வடிவேலுவை வைத்து தற்போது ஒரு படம் எடுத்து வருவதாகவும், அடுத்து "கலகலப்பு' மூன்றாம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருப்பதாகவும் தன்னை அணுகிய படக் குழுவிடம் சொல்லி இப்போதைக்கு முடியாது என்று கூறிவிட்டார். படக்குழு சுந்தர்.சியின் கமிட்மெண்டை புரிந்துகொண்டு அவருக்கா கக் காத்திருப்பதாக சொல்லியுள்ளனர்.

கதாசிரியர் சூரி!

காமெடியன் டூ ஹீரோ என உருமாறிய சூரி, "விடுதலை', "கருடன்' என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள் ளார். இதை தக்க வைக்க கவனத்துடன் அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வருகிறார் சூரி. இப்போது சிவகார்த்தி கேயன் தயாரிப்பில் "கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ள சூரி, படம் வெளி யான பிறகு தனது இமேஜ் மாறும் எனச் சொல்கிறார். ஆகஸ்ட் 23ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து வெப் சீரிஸிற்கு நகர்கிறார் சூரி. இதில் புது அவதாரமாக சூரியே கதையும் எழுதியுள்ளார். மதுரை பேக்ட்ராப்பில் நாட்டுப்புற கலைஞர்களை சம்பந்தப்படுத்திய கதை. "மதயானைக் கூட்டம்', "இராவண கோட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இந்த சீரிஸை இயக்குகிறார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 6 எபிசோடுகளுடன் வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மீண்டும் ஜோடி!

பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் "ஆயிரத்தில் ஒருவன்' படத்தை பார்த்து ஜி.வி. பிரகாஷை பாராட்டி, இந்தியில் தனது "கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' படத்தில் பின்னணி இசையை கவனிக்க சொல்லியிருந்தார். இதையடுத்து இருவரும் தற்போது மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளனர். ஆனால் இந்த முறை ஒரு வெப் சீரிஸிற்காக கை கோர்த்துள்ளனர். இதில் ஜி.வி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். முதல் முறையாக அனுராக் கஷ்யப் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள நிலையில் இசையை யும் அவரே கவனிக்கவுள்ளார். இந்த சீரிஸ் எட்டு எபிசோடு களைக் கொண்ட த்ரில்லர் ஜானரில் உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

-கவிதாசன்

nkn170824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe