டூரிங் டாக்கீஸ்! செகன்ட் இன்னிங்ஸ்!

cc

செகன்ட் இன்னிங்ஸ்!

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த சமந்தா, கடந்த சில ஆண்டு களாக மயோசிட்டிஸ் நோயால் சினிமாவை விட்டு விலகியிருந் தார். அவர் நடித்து முடித் திருந்த "சிட்டாடெல்' என்ற இந்தி வெப் தொடர் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே "தி ஃபேமிலி மேன் -2' வெப் சீரிஸின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்த அவர், தற்போது அந்த சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே தயாரிக்கும் புதிய வெப் சீரிஸில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதில் ஆதித்யராய் கபூர் ஹீரோவாக நடிக்க வாமிகா கபியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த தொடரை ரகிஅனில் பார்வே இ

செகன்ட் இன்னிங்ஸ்!

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த சமந்தா, கடந்த சில ஆண்டு களாக மயோசிட்டிஸ் நோயால் சினிமாவை விட்டு விலகியிருந் தார். அவர் நடித்து முடித் திருந்த "சிட்டாடெல்' என்ற இந்தி வெப் தொடர் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே "தி ஃபேமிலி மேன் -2' வெப் சீரிஸின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்த அவர், தற்போது அந்த சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே தயாரிக்கும் புதிய வெப் சீரிஸில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதில் ஆதித்யராய் கபூர் ஹீரோவாக நடிக்க வாமிகா கபியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த தொடரை ரகிஅனில் பார்வே இயக்குகிறார். இத்தொடர் மூலம் செகண்ட் இன்னிங்ஸில் பாலிவுட்டிலும் தனது மார்க்கெட்டை உயர்த்த திட்டம் வைத்துள்ளார் சமந்தா.

மகாராஜா ஹேப்பி!

cc

தனது 50வது படமான மகாராஜா, வசூல் ரீதியாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதால், விஜய் சேதுபதியின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது. இப்போது அவருக்கு வரும் படங்களெல்லாம் பெரிய பட்ஜெட்டில்தான் வருகிறது. அந்த வகையில் தெலுங்கு மற்றும் இந்தியில் ஏகப்பட்ட படங்களை இயக்கிய ராம்கோபால் வர்மா, விஜய் சேதுபதியை வைத்து பிரம்மாண்ட பொருட்செலவில் ஒரு படம் இயக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக விஜய் சேதுபதியை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கதை கூறியுள்ளார். இப்படம் தமிழில் உருவாக்கப்பட்டு பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாக வுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் முதல் முறையாக ஒரு நேரடி தமிழ் படத்தை இயக்கவுள்ளார் ராம்கோபால் வர்மா. இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கிய "திருடா திருடா' படத்துக்கு கதை எழுதியுள்ளார். மேலும் சூர்யா நடித்த "ரத்த சரித்திரம்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் படமாக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

cc

தயாரிப்பாளர் சிம்பு!

மணிரத்னம் -கமல் கூட்டணியில் உருவாகும் "தக் லைஃப்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் சிம்பு. ஆனால் இப்படத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட அவரது 48வது படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக தள்ளிக்கொண்டே போகிறது. இப்படத்தை கமல் தயாரிக்கும் நிலையில் பட்ஜெட்டில் சில சிக்கல் வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் அதிரடி முடிவெடுத்த சிம்பு, இப்படத்தை தானே தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதனை கமலிடம் தெரிவிக்க, அவரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காததால், ஆத்மன் சிம்பு என்ற புதுப் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் முதல் படமாக இப்படத்தை தயாரிக்க திட்டம் தீட்டியுள்ளார். சிம்பு கரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

விக்ரம் ஓ.கே!

விக்ரம் நடித்துள்ள "தங்கலான்' ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது. இதனிடையே சித்தா பட இயக்குநர் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் "வீர தீர சூரன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சாந்தகுமார் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லியுள்ளராம். விக்ரமிற்காக ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இருக்கிறார் சாந்தகுமார். மௌனகுரு, மகாமுனி என வித்தியாசமான படங்களைக் கொடுத்த சாந்தகுமார் கடைசியாக "ரசவாதி' படத்தை இயக்கியிருந்தார்.

nkn270724
இதையும் படியுங்கள்
Subscribe