மீண்டும் ஷுட்டிங்!
"இந்தியன் 2' தோல்வியால் கமலும் ஷங்கரும் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். இதனால் "இந்தியன் 3' படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள். அதன்படி "இந்தியன் 3' படத்திற்கான படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவிருக்கிறார்கள். ஏற்கனவே மொத்த படப்பிடிப்பும் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஷங்கரை அழைத்த கமல், "இந்தியன் 3' படத்தை எடிட் செய்த வரையில் போட்டு காண்பிக்கச் சொல்லியுள்ளார். படத்தை பார்த்துவிட்டு, சில அறிவுரைகள் சொல்லி, புதிதாக சில காட்சிகளையும் இணைக்க பரிந்துரைத்துள்ளார். ஷங்கரும் அதற்கு தலையசைக்க, விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படவுள்ளது. இந்தப் படப்பிடிப்பு
மீண்டும் ஷுட்டிங்!
"இந்தியன் 2' தோல்வியால் கமலும் ஷங்கரும் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். இதனால் "இந்தியன் 3' படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள். அதன்படி "இந்தியன் 3' படத்திற்கான படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவிருக்கிறார்கள். ஏற்கனவே மொத்த படப்பிடிப்பும் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஷங்கரை அழைத்த கமல், "இந்தியன் 3' படத்தை எடிட் செய்த வரையில் போட்டு காண்பிக்கச் சொல்லியுள்ளார். படத்தை பார்த்துவிட்டு, சில அறிவுரைகள் சொல்லி, புதிதாக சில காட்சிகளையும் இணைக்க பரிந்துரைத்துள்ளார். ஷங்கரும் அதற்கு தலையசைக்க, விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படவுள்ளது. இந்தப் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 1 மாதம் வரையில் நடக்கவுள்ளது. இதனிடையே "இந்தியன் 2' தோல்வி தெலுங்கிலும் ஷங்கருக்கு எதிரொலித்துள்ளது. ராம் சரணை வைத்து அவர் இயக்கி வரும் "கேம் சேஞ்சர்' படம், இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் அதிலும் சில மாற்றங்களை செய்யச் சொல்லி ஷங்கருக்கு அறிவுரைகள் பறக்கிறதாம்.
மோகன்லால் என்ட்ரி!
சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே தன்னுடைய அரசியல் பிரவேசத்தால் சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளார் விஜய். அவரது கடைசிப் படத்தை வினோத் இயக்கவுள்ளார். இது அவரது 69வது படமாகும். தற்போது படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடிக்கவுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. மல்டி ஸ்டார் ட்ரெண்ட் தற்போது ஹிட்டடித்து வருவதால், அந்த சென்டிமெண்ட் இதிலும் தொடர்வதாக பேசப்படுகிறது. இதற்கு முன்பாக விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் "ஜில்லா' படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
லிஸ்ட் பெருசு!
திருமண வாழ்க்கைக்குப் பிறகும், குழந்தைகள் வந்த பிறகும் இன்னும் சினிமாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. தயாரிப்பாளர்களும் அவரது கதவுகளை தட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் மீண்டும் படு பிஸியான நயன்தாரா, கைவசம் "தனி ஒருவன் 2', "மூக்குத்தி அம்மன் 2', "டியர் ஸ்டூடண்ட்ஸ்' உள்ளிட்ட படங்களை வைத்துள்ளார். இந்த லிஸ்டில் இன்னொரு படமும் தற்போது இணைந்துள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயா ரிக்கும் புதிய படத்தில் லீட் ரோலில் அவர் நடிக்க கமிட்டாகி யுள்ளார். இப்படத்தை சர்ஜுன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நயன்தாராவை வைத்து "ஐரா' என்ற படத்தை எடுத்தவர். இப்படம் மூலம் மீண்டும் நயன்தாராவை வைத்து படம் இயக்குகிறார். இப்படத்திற்கு விமர்சகரும் எழுத்தாளருமான பரத்வாஜ் ரங்கன் கதை எழுதுகிறார். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
ஸ்ரீதேவி வாரிசு!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டே பிரபலமாகி வருகிறார். இந்த நிலையில் இந்தியில் மட்டும் நடித்து வந்த அவர், ஜூனியர் என்.டி.ஆரின் "தேவாரா' படம் மூலம் தெலுங்கில் அறிமுக மாகிறார். இதன்மூலம் தென்னிந்திய சினிமாவில் காலடி வைத்த ஜான்வி கபூர், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அடுத்ததாக ராம் சரணுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள ஜான்வி கபூர், இதைத் தொடர்ந்து மற்றொரு தெலுங்கு முன்னணி நடிகரான நானி படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த நிலையில் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்ட ஜான்வி கபூரை தமிழில் அறிமுகம் செய்ய கோலிவுட்டின் இயக்குநர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் ஜான்வி கபூர், தனக்கு ஏற்ற கதா பாத்திரம் வரும்வரை அவசரப்பட்டு யாருக் கும் பச்சைக்கொடி காட்ட முடியாது என்பதில் தீர்க்கமாக உள்ளார். இதனிடையே ஜான்வி கபூரின் தங்கை குஷிகபூர், லைகா தயாரிப்பில் அதர்வா நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து விரைவில் கோலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.