டூரிங் டாக்கீஸ்! மடோனா வருத்தம்!

dd

மடோனா வருத்தம்!

ss

"பிரேமம்'’ படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் பிரபலமான மடோனா செபாஸ்டியன், தமிழில் "கவண்', "காதலும் கடந்துபோகும்'’ என பல படங்களில் நடித்திருந்தார். அதே சமயம் பிற மொழிகளிலும் நடித்துவந்தார். ஆனால் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக விஜய்யின் தங்கையாக "லியோ'’படத்தில் நடித்திருந் தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் மடோனா தற்போது அப்செட்டில் இருக்கிறார். இருப்பினும் மனம் தளராமல் இயக்குநர்களிடம் கதை கேட்டுவரும் அவர், அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இணைந்த கைகள்!

கமல் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் "தக் லைஃப்' படத்தில் நடித்துவரும் சிம்பு, அடுத்தாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவி

மடோனா வருத்தம்!

ss

"பிரேமம்'’ படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் பிரபலமான மடோனா செபாஸ்டியன், தமிழில் "கவண்', "காதலும் கடந்துபோகும்'’ என பல படங்களில் நடித்திருந்தார். அதே சமயம் பிற மொழிகளிலும் நடித்துவந்தார். ஆனால் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக விஜய்யின் தங்கையாக "லியோ'’படத்தில் நடித்திருந் தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் மடோனா தற்போது அப்செட்டில் இருக்கிறார். இருப்பினும் மனம் தளராமல் இயக்குநர்களிடம் கதை கேட்டுவரும் அவர், அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இணைந்த கைகள்!

கமல் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் "தக் லைஃப்' படத்தில் நடித்துவரும் சிம்பு, அடுத்தாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை படப்பிடிப்பு தொடங்கப் படாமலே இருக்கிறது. மேலும் இந்த படம் குறித்தான எந்த அறிவிப்பும் வெளி யாகாததால், தயாரிப்பாளர் கமலிடம் இருந்து படம் கைமாறுவ தாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் சிம்பு அடுத்ததாக மலையாள இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்புடன் கைகோர்த்துள்ளார். இவர் இயக் கத்தில் கடந்த ஆண்டு வெளியான "2018 திரைப்படம், மலையாள சினிமாவைத் தாண்டி இந்தியளவில் பெரும் கவனம் பெற்றது. இந்த நிலையில் ஜூட் ஆண்டனி ஜோசப் தனது அடுத்த படத்திற்கான கதையை ஐசரி கணேசனிடம் கூற, அருமையான சப்ஜெக்ட் என்று சிம்பு பக்கம் தள்ளியுள்ளார். கதைகேட்ட சிம்புவிற்கும் பிடித்துப்போக, உடனே தான் நடிப்பதாக ஒப்புக்கொண் டுள்ளார். ஏற்கனவே ஐசரி கணேசனுக் கும், சிம்புவுக்கும் இடையே சம்பளம் தொடர்பான பிரச்சனை இருக்கும் நிலையில், ஜூட் ஆண்டனி ஜோசப் சொன்ன கதை இருவரையும் தற்போது இணைத்துள்ளது. இந்த படத்திலும் சம்பளம் தொடர்பாக சில கோடிகள் முன்னும் பின்னும் இழுப்பதாகக் கூறப்பட்டாலும், கண்டிப்பாக இந்த படம் உருவாகும் என்கின்றனர் சிம்புவுக்கு நெருக்க மானவர்கள்.

பெரிய மனசு!

பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் தமிழ் சினிமாவில் ஹீரோ வாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், ‘"டாடா'’ படம் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியை தேடித்தந்தது. அவர் நடித்த ‘"ஸ்டார்'’படம்கூட கை கொடுக்கவில்லை. அடுத்தாக லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் இயக் கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க முதலில் நயன்தாரா புக் செய்யப்பட்ட நிலையில், 15 கோடி சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று தயாரிப்பாளர் லலித்திடம் கறார் காட்டியிருக்கிறார். ஆனால் ரூ.10 கோடிதான் சம்பளம் தருவேன் என்று ஸ்ட்ரிக்ட்டாக தயாரிப்பாளர் கூற... நயன்தாரா படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினார். அதன்பிறகு தயாரிப்பாளரும் படத்தை ட்ராப் பண்ணலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர் லலித்தை தொடர்புகொண்ட நயன்தாரா, தான் ரூ.10 கோடிக்கு நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த லலித், படக்குழுவை அழைத்து முதற்கட்ட பணிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தி யுள்ளார். நயன்தாரா இறங்கி வந்ததால், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப் படவுள்ளது.

மாஸ் ஹீரோ!

cc

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் ஹரீஷ்கல்யாண், தற்போது, ‘"லப்பர் பந்து'’, ‘"ஆயிரம் கோடி வானவில்'’ மற்றும் ‘"டீசல்'’ ஆகிய படங்கள் நடித்துள்ளார். கணிசமான பெண் ரசிகைகளை வைத்திருக்கும் ஹரீஷ்கல்யாண், தனது வழக்கமான கமர்ஷியல் ஹீரோ பாணியிலிருந்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறுவதற்காகப் பலரிடம் கதை கேட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றால்தான், நீடித்து இருக்க முடியும் என்று நினைத்த ஹரீஷ்கல்யாண், அதற்காக தன்னையும் தயார்படுத்தி வரு கிறார். அந்தவகையில் சமீபத்தில் ‘"றெக்க'’ மற்றும் ‘"சீர்'’ படத்தை இயக்கிய ரெத்தின சிவா கூறிய கதை ஹரீஷ் கல்யாண் எதிர் பார்த்த மாஸ் அக்ஷன் சப்ஜெட் என்பதால், உடனே ஓ.கே. சொல்லியிருக்கிறார். இந்த படத்தை ஹரீஷ் கல்யாணின் மேனேஜர் தயாரிக்க, இந்தாண்டு இறுதிக்குள் படப் பிடிப்பு தொடங்க வுள்ளது.

nkn170724
இதையும் படியுங்கள்
Subscribe