Advertisment

டூரிங் டாக்கீஸ்! 3 வீடுகள் இருந்தும்...!

ss

3 வீடுகள் இருந்தும்...!

cc

நடிகை தமன்னாவுக்கு மும்பை அந்தேரி மேற்கு வீர தேசாய் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3 வீடுகள் உள்ளன. அதை இந்தியன் வங்கியில் ரூ.7.84 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார். மேலும் மும்பை ஜுஹு பகுதியில் 6,065 சதுர அடியில் அலுவலகம் ஒன்றை மாதம் ரூ.18 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்துள்ளார். ஐந்து வருடத்துக்கு இந்த வாடகை ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. ஜான் ஆப்ரஹாம் ஜோடியாக தமன்னா நடித்துள்ள "வேதா'’ இந்திப் படம் ஆக.15-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்து இந்தியில் "ஸ்ட்ரீ 2', தெலுங்கில் "ஒடேலா 2' போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

சசிகுமார் ஓ.கே!

"குக்கூ'’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமா

3 வீடுகள் இருந்தும்...!

cc

நடிகை தமன்னாவுக்கு மும்பை அந்தேரி மேற்கு வீர தேசாய் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3 வீடுகள் உள்ளன. அதை இந்தியன் வங்கியில் ரூ.7.84 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார். மேலும் மும்பை ஜுஹு பகுதியில் 6,065 சதுர அடியில் அலுவலகம் ஒன்றை மாதம் ரூ.18 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்துள்ளார். ஐந்து வருடத்துக்கு இந்த வாடகை ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. ஜான் ஆப்ரஹாம் ஜோடியாக தமன்னா நடித்துள்ள "வேதா'’ இந்திப் படம் ஆக.15-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்து இந்தியில் "ஸ்ட்ரீ 2', தெலுங்கில் "ஒடேலா 2' போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

சசிகுமார் ஓ.கே!

"குக்கூ'’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பத்திரிகையாளர் ராஜூமுருகன், "ஜோக்கர்', "ஜிப்ஸி'’என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து பலரின் விருப்ப இயக்குநரானார். அவர் கார்த்தியை வைத்து இயக்கிய "ஜப்பான்'’ படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில்... இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் வகையில் சசிகுமாரை சந்தித்த ராஜூ முருகன், தனது அடுத்த படத்திற்கான கதையைக் கூற, உடனே சசிகுமார் ஓ.கே. சொல்லியுள்ளார். படத்தின் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தனக்கே உரித்தான நையாண்டி கலந்த அரசியல் படமாக உருவாக்க இருக்கிறார் ராஜூமுருகன்.

வில்லன் பிரித்விராஜ்!

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி ‘"ஆர்.ஆர்.ஆர்.'’ படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். ‘இண்டியானா ஜோன்ஸ்’ படம் போல ஆக்ஷன் அட்வென்சர் கதையாக இந்தப் படம் உருவாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல், மகேஷ்பாபுவின் கேரக்டர் ராமாயணத்தில் வரும் ஹனுமானை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டி ருக்கிறது. இந்த படத்தில் மகேஷ்பாபுக்கு இணையான வில்லன் பாத்திரத்திற்கு மகேஷ்பாபுக்கு இணையான மற்றொரு ஹீரோவை ராஜமௌலி தேட... மலையாள நடிகர் பிரித்விராஜின் பெயர் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. "சலார்'’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரித்விராஜ் நடித்த நிலையில், மகேஷ்பாபுவுக்கும் பிரித்விராஜை வில்லனாக ஒப்பந்தம் செய் திருக்கிறார் ராஜமௌலி.

Advertisment

cc

ஓ.டி.டி. என்ட்ரி!

கிராமத்துப் பின்னணியில் படம் இயக்குவதில் தென்மாவட்டங்களில் பிரபலமாக இருப்பவர் முத்தையா. இவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் ஆர்யா -முத்தையா கூட்டணியில் கடைசியாக வெளியான "காதர்பாஷா என்ற முத்துராம லிங்கம்'’ படம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதோடு, வணிக ரீதியாகவும் பாதிப்பைச் சந்தித்தது. இந்நிலையில்... தனது மகனை கதாநாயகனாக்கி கிராமத்துப் பின்னணியில் ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார் முத்தையா. அடுத்தாக நேரடியாக ஓ.டி.டி.க்கு படம் ஒன்றை இயக்க கமிட்டாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிவான நிலையில், நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.

Advertisment

எகிறும் சம்பளம்!

அமெரிக்காவில் பிறந்து, கன்னடத் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீலீலா. பரதநாட்டிய டான்சரான ஸ்ரீலீலாவின் நடனத்திற்கென்றே ஒரு பாடல் கட்டாயம் படத் தில் வைக்கப்படுகிறதாம். அதிலும் மகேஷ்பாபுவின் ‘"குண்டூர் காரம்'’ படப் பாடலில் ஸ்ரீலீலாவின் நடனம் தெலுங்கு ரசிகர் களையும் தாண்டி தென்னிந்திய ரசிகர்களையும் கிறங்கடித் தது. தொடர்ந்து பவன் கல்யாண், பாலய்யா, விஜய்தேவர கொண்டா என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துவரும் ஸ்ரீலீலா, தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துவரு கிறார். தற்போது இந்தியில், வருண்தவான் நடிக் கும் முக்கோணக் காதல் கதையில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தொடர்ந்து டிமாண்ட் அதிகரிக்க, ஸ்ரீலீலா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.

-அருண்பிரகாஷ்

nkn130724
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe