டூரிங் டாக்கீஸ்! ஜோடி கிடைச்சாச்சு!

anjali

anjali

ஜோடி கிடைச்சாச்சு!

தனுஷ் அவரது 50-வது படமான ராயன் பட வெளியீட்டில் பிஸியாக இருக்கிறார். மேலும் ‘"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கிவருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் "குபேரா', அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் "இளையராஜா பயோ#பிக்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். கோ-வுட்டை தாண்டி பா-வுட்டில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகமானார் தனுஷ். தொடர்ந்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து "ஷமிதாப்', மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘"அத்ரங்கி ரே', என தொடர்ந்து... நான்காவது படமாக மீண்டும் ஆனந்த் எல்.ர

anjali

ஜோடி கிடைச்சாச்சு!

தனுஷ் அவரது 50-வது படமான ராயன் பட வெளியீட்டில் பிஸியாக இருக்கிறார். மேலும் ‘"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கிவருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் "குபேரா', அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் "இளையராஜா பயோ#பிக்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். கோ-வுட்டை தாண்டி பா-வுட்டில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகமானார் தனுஷ். தொடர்ந்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து "ஷமிதாப்', மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘"அத்ரங்கி ரே', என தொடர்ந்து... நான்காவது படமாக மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் கமிட்டாகியிருந்தார். கடந்த வருடம் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இப்போது அடுத்தகட்டத்திற்கு நகர்கிறது. தனுஷுக்கு ஜோடியாக பிரபல நடிகை கியாரா அத்வானி கமிட்டாகியுள்ளார். "ராஞ்சனா' படத்தின் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.

சிக்குவாரா கவின்?

சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளியான படம் "சில்லுனு ஒரு காதல்.' இளைஞர்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படத்தை இரண்டாம் பாகமாக உருவாக்க இயக்குநர் கிருஷ்ணா முடிவெடுத்து நடிகர், நடிகைகள் தேடும் பணியில் இருந்துவருகிறார். ஹீரோ கதாபாத்திரத்திற்கு வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவரைத் தேடியவர், தற்போது கவினிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

அஞ்சலிஆர்வம்!

தெலுங்கில் பிஸியாக இருக்கிறார் அஞ்ச-. அங்கு சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான "கேங்ஸ் ஆஃப் கோதாவரி', படத்தின் ப்ரீ#ரிலீஸ் நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா தள்ளிவிட்டது பெரிய பஞ்சாயத்தை கிளப்ப, "நீண்ட கால நட்புடன் நாங்கள் இருந்துவருகிறோம்' என அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தெலுங்கில் ஷங்கர் #ராம்சரண் கூட்டணியில் உருவாகும் "கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துவரும் அஞ்சலி, சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். கண்ணன் என்ற அறிமுக இயக்குநரின் படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார். ராம் இயக்கத்தில் அஞ்ச- நடித்துள்ள "ஏழு கடல் ஏழு மலை'’ விரைவில் ரிலீஸôகவிருக்கிறது.

உதயநிதி உறுதுணை!

கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள "இந்தியன் 2' படம், ஒருவழியாக ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் புரமோஷன் பணிகள் நடைபெறுகிறது. அந்தவகையில் சமீபத்தில் இசை வெளியிட்டை நடத்தி முடித்த படக்குழு, அதில் கமல் கெட்டப்பை பிரத்யேகமாக வெளியிட்டது. விழாவில் பேசிய கமல், “""இந்தியன் 2 சிக்க-ல் மாட்டி 2, 3 வருடமாக நகராமல் இருந்தபோது, அமைச்சர் உதயநிதி ஸ்டா-ன் உதவியதால்தான் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த உதயநிதிக்கு மக்கள் வேறு பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பொறுப்பில் அவர் வெற்றிபெற வேண்டும் எங்களுக்கு அவர் உறுதுணையாக இருந்ததுபோல், அவரோடு நாங்களும் உறுதுணையாக நிற்கவேண்டிய சூழல் வரும். நான் தமிழன், இந்தியன்... இந்தியாவை தமிழன் ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்துகாட்டுவோம். என்னைப் போன்ற பகுத்தறிவுவாதிகளுக்கு கடவுள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனிதர்கள் இல்லாமல் இருக்க முடியாது. அன்புதான் உசத்தி... எனக்கு தற்பெருமை பிடிக்காது, தற்படம் (செல்ஃபி) எடுப்பதும் பிடிக்காது''’என்றார்.

இதையும் படியுங்கள்
Subscribe