Advertisment

டூரிங் டாக்கீஸ்! கங்கனா சொத்து!

ss

கங்கனா சொத்து!

ss

Advertisment

இமாச்சல பிரதேச மண்டி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் களமிறக்கப்பட்டுள்ளார். வரும் ஜூன் 1-ம் தேதி மண்டி மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தன்னிடம் ரூ.62.92 கோடி அசையா சொத்து, ரூ.28.73 கோடி அசையும் சொத்து இருப்பதாக வும் குறிப்பிட்டுள்ளார். அதில் ரூ.3.91 மதிப்புள்ள ஒரு மெர்சிடீஸ் மேபெக் சொகுசு காரும் அடக்கமாம். மேலும் தனக்கு ரூ.17.38 கோடிக்கும் அதிகமான கடன் இருப்பதாகவும், ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ரூ.1.35 கோடி வங்கி இருப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 5 கோடி மதிப்புள்ள 6.70 கிலோ தங்கம், 5 லட்சம் மதிப்புள்ள 60 கில

கங்கனா சொத்து!

ss

Advertisment

இமாச்சல பிரதேச மண்டி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் களமிறக்கப்பட்டுள்ளார். வரும் ஜூன் 1-ம் தேதி மண்டி மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தன்னிடம் ரூ.62.92 கோடி அசையா சொத்து, ரூ.28.73 கோடி அசையும் சொத்து இருப்பதாக வும் குறிப்பிட்டுள்ளார். அதில் ரூ.3.91 மதிப்புள்ள ஒரு மெர்சிடீஸ் மேபெக் சொகுசு காரும் அடக்கமாம். மேலும் தனக்கு ரூ.17.38 கோடிக்கும் அதிகமான கடன் இருப்பதாகவும், ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ரூ.1.35 கோடி வங்கி இருப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 5 கோடி மதிப்புள்ள 6.70 கிலோ தங்கம், 5 லட்சம் மதிப்புள்ள 60 கிலோ வெள்ளி மற்றும் சுமார் 3 கோடி மதிப்புள்ள 14 காரட் வைரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தன் மீது 8 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் கங்கனா குறிப்பிட்டுள்ளார். அதில் மூன்று வழக்குகள் மத உணர்வுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகப் பதியப்பட்டவை. தன் பெயரில் 50 எல்.ஐ.சி. பாலிசிகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதை வைத்து நெட்டிசன்கள் பலரும் கேலி செய்கிறார்களாம்.

விக்ரம் வெயிட்டிங்!

அருண்குமார் இயக்கத்தில் "வீர தீர சூரன்'’ படத்தில் நடித்துவருகிறார் விக்ரம். இப்படத்தை முடித்துவிட்டு சுதா கொங்கரா படத்தில் நடிக்கவுள்ளார். சுதா கொங்கரா "சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாகவுள்ளார். இப்படம் ஜூலை 12 வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து மாவீரன் பட தயாரிப்பு நிறுவனமான ஷாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் படத்தில், விக்ரம் கதாநாயகனாகவும், ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. விக்ரம் "தங்கலான்' பட ரிலீஸுக்காக காத் திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டபுள் சந்தோஷம்!

"சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை கஷ்மிரா பர்தேசி. தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு', ஜீவாவின் "வரலாறு முக்கியம்', பாபி சிம்ஹாவின் "வசந்த முல்லை', சரத்குமாரின் "பரம்பொருள்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமுமே அவருக்கு வெற்றியைத் தரவில்லை. இந்த சூழலில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில், வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ள "டப சார்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் தனக்கு வெற்றிப் படமாக அமையும் என நம்புகிறார். மேலும், ஹிப்ஹாப் ஆதியுடன் இரண்டாவது முறையாக நடித்தது சந்தோஷம் என்கிறார். இப்படம் ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25வது படம் என்பது கூடுதல் தகவல்.

Advertisment

ss

சர்ப்ரைஸ் ஷங்கர்!

கமல் நடிப்பில் "இந்தியன் 2' தொடங்கிய ஷங்கர், 4 வருடங்களுக்கு மேலாக படப்பிடிப்பை நடத்தி னார். அதன் விளை வாக ஏகப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட, படத்தை "இந்தி யன் 2' மற்றும் "இந்தியன் 3' என இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டார். முதல் பாகம் வெளியாவது தள்ளிப் போவதால் ரசிகர்கள் வருத்ததில் இருக்கும் நிலையில்... அவர்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு விஷயத்தை பிளான் செய்துள்ளார் ஷங்கர். அதாவது "இந்தியன் 2' படத்தில் "இந்தியன் 3' படத்தின் ட்ரைலரையும் சேர்த்து வெளியிட ஏற்பாடு செய்து ள்ளாராம்.

மம்மூட்டி- மேனன்!

இயக்குநர் கௌதம் மேனன் ஜோஷ்வா நடிப்பில் "இமைபோல காக்க'’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், அவர் பெரிதாக நம்பிய துருவ நட்சத்திரமும் வெளியாகவில்லை. இதனால் அப்செட்டில் இருந்த கௌதம் மேனன், அடுத்த படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். இந்த முறை மலையாள டாப் ஹீரோவான மம்மூட்டியை இயக்கவுள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார்.

இன்னொரு வாரிசு!

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் , இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுக மாகும் படம் "ஹிட் லிஸ்ட்'. சூர்யகதிர் மற்றும் கார்த்திகேயன் இரட்டையர்கள் இயக்கியுள்ள இப்படத்தில் சரத்குமார், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள னர். சத்யா இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா என அனைவரும் இப்படத் திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

-கவிதாசன் ஜெ.

nkn220524
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe