ராசி ராஷ்மிகா!

cc

குறுகிய காலத்தில் விஜய், மகேஷ்பாபு, ரன்பீர் கபூர் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டுவிட்டார் ராஷ்மிகா. அடுத்ததாக இன்னொரு டாப் நடிகரான சலமான்கானுடனும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘"சிக்கந்தர்'’ படம் மூலம் நடிக்கவுள்ளார். இப்போது இவர் கைவசம் தனுஷின் குபேரா, அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 உள்ளிட்ட சில படங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் ஜோடி போடவுள்ளார். ஏற்கனவே இரண்டு படங்களில் இணைந்து நடித்துவிட்டனர். தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் அவரது 14வது படத்தில் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர்.

பேமிலி எண்டர்டெயின்மெண்ட்!

சுந்தர்.சி இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த படம் "கலகலப்பு.' 2012ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கலகலப்பாக்கியது. அந்த உற்சாகத்தோடு "கலகலப்பு' இரண்டாம் பாகத்தை எடுத்தார் சுந்தர். சி. இதில் ஜீவா, ஜெய், கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் முதல் பாகம் அளவு வெற்றி பெறவில்லையென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது "கலகலப்பு' மூன்றாம் பாகத்தை எடுக்கவுள்ளார் சுந்தர்.சி. முதல் பாகத்தில் நடித்த விமல், மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளனர். சுந்தர்.சி தற்போது ஹீரோயின் தேடுதல் வேட்டையில் இருக்கிறார். சமீபத்தில் அவர் இயக்கிய "அரண்மனை 4' வெளியாகி வழக்கம்போல் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. ரசிகர்கள் கொடுத்த வரவேற்பே "கலகலப்பு 3' எடுக்கக் காரணம் என சொல்கிறார் சுந்தர்.சி.

சிறப்புத் தோற்றத்தில் சிவகார்த்திகேயன்!

cc

Advertisment

முன்பெல்லாம் வளர்ந்துவரும் ஹீரோ படங்களில் பெரிய ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடித்து வந்தனர். இப்போது பெரிய ஹீரோக்கள் படங்களில் வளர்ந்து வரும் ஹீரோக்கள் கேமியோ ரோலில் வருகின்றனர். அந்த வகையில் இந்த ட்ரெண்டிற்கு ஏற்றவாறு ஒரு சம்பவம் நடந்துள்ளது. வெங்கட் பிரபு -விஜய் கூட்டணியில் உருவாகும் ‘"தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'’ படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அதற்கான படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக த்ரிஷா இப்படத் தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சில காட்சிகளில் நடித்துள்ளதாகக் கூறப்பட்டது. இதையடுத்து மறைந்த நடிகர் விஜயகாந்த், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக இப்படத்தில் தோன்றவுள்ளதாக சொல்லப்பட்டது. அதோடு பிரபல கிரிக்கெட் வீரர்களும் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்களாம். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

அப்செட் விஜய்சேதுபதி!

இயக்குநர் மணிகண்டன் "கடைசி விவசாயி' படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து ஒரு வெப் தொடர் தொடங்கினார். கடந்த ஆண்டு மே மாதம் மதுரையில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றது. ஆனால் தற்போது இந்த வெப் தொடர் கைவிடப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. பட்ஜெட் அதிகரித்ததனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்செட்டான விஜய்சேதுபதி, மணிகண்டனிடம் வேறு கதை இருக்கிறதா என கேட்டுள்ளார். அவரும் ஒரு கதை சொல்ல, தற்போது அந்த கதையை படமாக்க முடிவெடுத்துள்ளனர். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.

மீண்டும் ஜோஜு ஜார்ஜ்!

சூர்யா "கங்குவா' படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க இசையமைப்பாளராக தனது ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனை புக் செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். படத்தில் சூர்யா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு குத்துப் பாடல் இருப்பதாக முணு முணுக்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜையும் கமிட் செய்துள்ளார். இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "ஜகமே தந்திரம்' படத்தில் நடித்துள்ளார்.

-கவிதாசன் ஜெ.