"கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படம் "டாக்சிக்'. இப்படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, ப்ரீ-புரடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் பல்வேறு லொகேஷன்களை தேர்வு செய்துள்ளது படக்குழு. முதற்கட்டமாக கர்நாடகாவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_303.jpg)
படத்தில் அக்கா - தம்பி உறவுகளுக்கான எமோஷன், முக்கிய பங்கு வகிக்கிறதாம். அதனால் அக்கா கேரக்டரில் நடிக்க பான் இந்தியா லெவலில் ஒரு ஹீரோயினை தேடி வந்தது படக்குழு. ஒரு வழியாக பாலிவுட் நடிகை கரீனாகபூர் கமிட் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் விலக... அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா ஆர்வம் காட்டு கிறாராம். அக்கா கதாபாத்திரம் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளதால், தனக்கு பொருத்தமாக இருக்குமென படக்குழுவிடம் நயன்தாரா சொல்லியுள்ளார். அவரிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்துள்ளது. யுஷுக்கு ஜோடி கியாராஅத்வானி.
சிம்பு ஓ.கே!
கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் கமிட்டானார் சிம்பு. அப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் சற்று தாமதமாகி வருகிறது. அந்த இடைவெளியில் கமல் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் "தக் லைஃப்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்பு. டெல்லியில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தனது அடுத்த படத்திற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்துள்ளார். அந்த வகையில் "டைனோசர்ஸ்' என்ற தமிழ் படத்தை இயக்கிய எம்.ஆர். மாதவன் கூறிய கதை, சிம்புவிற்கு பிடித்துவிட.... முழு திரைக்கதையை எழுதியவுடன் மீண்டும் வந்து சந்திக்கச் சொல்லியுள்ளார். அதனால் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் சிம்பு அடுத்தாக நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. "தக் லைஃப்', தேசிங் பெரியசாமி படங்களை முடித்துவிட்டு, ஆர்.மாதவன் இயக்கத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_233.jpg)
அனுபமா நம்பிக்கை!
தமிழில் பரிச்சயமான மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கு மற்றும் மலை யாளத்தில் டாப் நடிகையாக வலம்வருகிறார். தொடர்ந்து அவரது படங்கள் அங்கு அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. மாரி செல்வராஜ் -துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘"பைசன்'’ படத்தில் தற்போது கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் லைகா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கும் ‘"லாக்டவுன்'’ என்ற படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார். இந்த இரு படங்களும் தனது மார்க்கெட்டை கோலிவுட்டில் உயர்த்தும் என நம்புகிறார்.
யுவன் பயோ-பிக்!
"ஸ்டார்'’ பட இயக்குநர் இளன், யுவன்ஷங்கர் ராஜாவின் பயோ-பிக் எடுக்க தனது விருப்பத்தை யும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “"யுவனிடம் அவருடைய பயோ-பிக் உருவானால், அதை நான்தான் இயக்குவேன் எனச்சொல்லிவிட்டேன். அதற்கு பேச்சுவார்த்தை அடிப்படையில் ஒப்பந்தமும் போட்டுள்ளேன். அதோடு ஒரு சீனையும் அவருக்குச் சொன்னேன். அவரும் சிறப்பாக இருப்பதாகச் சொன்னார். அந்த படம் யுவனுடைய பாதிப்புகள், அவருடைய ஏற்ற, இறக்கங்கள் என அனைத்தையும் சொல்லக் கூடிய படமாக இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்''’என்றார். யுவன்ஷங்கர் ராஜா, தனது பயோ-பிக் படத்திற்கு இன்னும் ஓ.கே. சொல்லவில்லை. இருப்பினும் இளனின் விருப்பத்தை பாராட்டியுள்ளார். "பியார் பிரேமா காதல்' படம் மூலம் தயாரிப்பாளராக கால்பதித்த யுவன், அப்படம் மூலம் இளனை இயக்குநராகவும் அறிமுகப் படுத்தினார். அதன் பிறகு யுவன்ஷங்கர் ராஜாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இளன் இருந்து வரு கிறார்.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-05/cinema-t_1.jpg)