Advertisment

டூரிங் டாக்கீஸ்! கன்னடத்திலும் என்ட்ரி!

ss

கன்னடத்திலும் என்ட்ரி!

cc

Advertisment

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கவனம்செலுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் "கருப்பர் நகரம்', "மோகன்தாஸ்', "தீயவர் குலைகள் நடுங்க' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் 2 படங்களை வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், கன்னடத்திலும் அறிமுகமாகிறார். அங்கு முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமார் மற்றும் தனஞ்செயா இருவரும் நடிக்கும் "உத்தரகாண்டா'. படத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக பாவனா நடிக்க, தனஞ்செயாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. "இந்தக் கதையில் நாயகிகளுக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதனால் நன்ற

கன்னடத்திலும் என்ட்ரி!

cc

Advertisment

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கவனம்செலுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் "கருப்பர் நகரம்', "மோகன்தாஸ்', "தீயவர் குலைகள் நடுங்க' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் 2 படங்களை வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், கன்னடத்திலும் அறிமுகமாகிறார். அங்கு முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமார் மற்றும் தனஞ்செயா இருவரும் நடிக்கும் "உத்தரகாண்டா'. படத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக பாவனா நடிக்க, தனஞ்செயாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. "இந்தக் கதையில் நாயகிகளுக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதனால் நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகைகளைத் தேர்வு செய்தோம்''’என படக்குழு தெரிவித்துள்ளது.

பாண்டிராஜ் நம்பிக்கை!

முதல் படத்திலே தேசிய விருது வென்று சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து படமெடுத்தவர் இயக்குநர் பாண்டிராஜ். ஆனால் கடந்த 2 வருடங் களாக அடுத்த படம் எடுக்க முடியாமல் தவிது வந்தவர், விஜய்சேதுபதியை சந்தித்து தனது அடுத்த பட கதையை கூறியுள்ளார். விஜய்சேதுபதிக்கும் கதை பிடித்துப்போக உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்சேதுபதி தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘"ட்ரெயின்'’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு பாண்டிராஜ் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். இப்படம் தனக்கு கம்பேக் படமாக அமையும் என நம்புகிறார் பாண்டிராஜ். ஏனெனில் இதற்கு முன்பு தனக்கு வெற்றி கொடுத்த கமர்ஷியல் ஃபார்முலாவை இந்த படத்திலும் பயன்படுத்த முடிவெடுத்துள்ளார்.

ss

சுதா பேச்சுவார்த்தை!

Advertisment

"சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து அதன் இந்தி ரீமேக்கை தொடங்கிய சுதாகொங்கரா, அதன் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாகவுள்ளார். இப்படம் ஜூலை 12 வெளியாகவுள்ள தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த படமாக கே.ஜி.எஃப். பட நிறுவனம் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில், உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் ஒரு படம் இயக்க கமிட்டானார். இதையடுத்து மீண்டும் சூர்யாவை வைத்து சுதாகொங்கரா ஒரு படம் இயக்கவுள்ளதாக கடந்த ஆண்டு அறி விப்பு வீடியோ வெளி யாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. தொ டர்ந்து துல்கர் சல் மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என பிரபலங் கள் கமிட்டாகி பணிகளும் விறுவிறுவென போனது. இந்நிலையில் இப்படத்தை தொடங்குவதற்கு முன்பு துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க பேச்சு வார்த்தை நடத்திவருகிறார் சுதாகொங்கரா. ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, "மாவீரன்' பட தயாரிப்பு நிறுவனம் ஷாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

காந்தியில் நட்டி!

இந்தியில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நட்டி என்கிற நடராஜ், தமிழில் நடிகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்துவருகிறார். இந்தநிலையில் பாலிவுட்டிலும் நடிகராக அறிமுகமாகவுள்ளார். காந்தி வாழ்க்கையைத் தழுவி "காந்தி' என்ற பெயரிலேயே ஒரு வெப் சீரிஸ் உருவாகிறது. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் ஆரம்ப காலத்தில் தொடங்கி இந்திய சுதந்திரத்திற்கு பங்காற்றியதுவரை பெரும்பாலான சம்பவங்கள் இந்த சீரிஸில் இடம்பெறப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை "ஸ்கேம் 1992' வெப் சீரிஸை இயக்கிய பிரபல இயக்குநர் ஹன்சல் மெஹ்தா இயக்குகிறார். காந்தி கதாபாத்திரத்தில் ஸ்கேம் 1992-ல் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த பிரவீன்காந்தி நடிக்க, நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காந்தியின் நண்பரான தமிழர் குமரேசபிள்ளை கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கவுள்ளார்.

-கவிதாசன் ஜெ.

nkn010524
இதையும் படியுங்கள்
Subscribe