புது ஹீரோயின்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக ஒரு படம் நடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி விஜய்யின் கடைசிப்படமாக அவரது 69வது படம் உருவாகும் நிலையில், அப்படத்தை அ.வினோத் இயக்கவுள்ளார். அரசியல் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இப்படத்திற்கு கதாநாயகியாக கோலிவுட்டில் தொடங்கி டோலிவுட், பாலிவுட் என வலைவீசி தேடி வருகிறது படக்குழு. அந்த லிஸ்டில் த்ரிஷா, சமந்தா, ஆலியா பட், மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட 4 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஜய்யுடன் புது ஹீரோயின் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறதாம்.

Advertisment

பெரிய தொகை!

"லவ் டுடே' படத்தை தொடர்ந்து விக்னேஷ்சிவன் இயக்கும் எல்.ஐ.சி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) படத்தில் நடித்துவருகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தின் படப்பி டிப்பு முழு வீச்சில் நடந்துவரும் நிலையில், தெலுங்கில் பிரபல நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் பெரிய தொகையை சம்பளமாக கேட்க, தயாரிப்பு நிறுவனமும் ஓ.கே.சொல்லியுள்ளது.

Advertisment

33 ஆண்டுகள்!

dd

ரஜினி தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் "வேட்டையன்' படத்தில் நடித்துவருகிறார். இறுதிகட்டப் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு ஜூன் முதல் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், வில்லனாக ராகவா லாரன்ஸ், முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரன்வீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடந் தது. இவர்களைத் தொடர்ந்து தற்போது ஷோபனா கமிட்டாகி யுள்ளார். "தளபதி' படத்தை தொடர்ந்து 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். இவர் மட்டும் அல்லாது சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்தி ரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை இறக்கியது போல் மலை யாளத்தில் பிரித்விராஜை நடிக்க வைக்க முயற்சிகள் செய்துவரு கிறார்கள்.

ஹிட் போட்டோ ஷூட்!

ss

"ஜோக்கர்' படம் மூலம் கவனம் ஈர்த்த ரம்யா பாண்டியன், தொடர்ந்து "ஆண் தேவதை', "இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்' படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு மம்மூட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். இப்போது "இடும் பன்காரி' எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதுவரை அவர் நடித்த படங்கள் பெரிய அளவுக்கு பெயர் பெற்றுக்கொடுக்காத நிலையில் அவருடைய புது ஃபோட்டோ ஷூட் ஹிட்டடித்துள்ளதால் மீண்டும் பட வாய்ப்புகள் வந்து குவியும் என நம்புகிறார்.

Advertisment

மலையாள என்ட்ரி!

கோலிவுட்டில் தற்போது ராசியுள்ள நடிகராகத் திகழ்கிறார் எஸ்.ஜே. சூர்யா. "இந்தியன் 2', "கேம் சேஞ்சர்', "எல்.ஐ.சி', "ராயன்', விக்ரமின் 62வது படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள அவர், தெலுங்கிலும் ‘"சரிபோதா சனிவாரம்'’ படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கைத் தொடர்ந்து, தற்போது மலையாளத் திலும் என்ட்ரி ஆகிறார். அங்கு விபின்தாஸ் இயக்கத்தில் பகத்ஃபாசில் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

-கவிதாசன் ஜெ.