Advertisment

டூரிங் டாக்கீஸ்! முதல்வன் 2

cc

முதல்வன் 2

இந்தியன் 2, மற்றும் இந்தியன் 3, படத்துக்கான படப்பிடிப்பை ஒரு வழியாக முடித்துள்ளார் ஷங்கர். "கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு வேள்பாரி நாவலை கையிலெடுக்கத் திட்டமிட்டு வைத்திருந்தார். அதற்காக ரன்வீர் சிங்கிடமும் ஓகே வாங் கினார். ஆனால் தற்போது முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பிளான் போட்டுள் ளார். ஆனால், தமிழில் இல்லை இந்தியில். முதல் பாகத்தை "நாயக்' என்ற பெயரில் அனில் கபூரை வைத்து எடுத் திருந்த நிலையில், மீண்டும் அவரை வைத்து இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். இதற்காக அனில் கபூரிடமும் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தி ஓகே வாங்கி வைத்துள்ளார். பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகிறது. தனது முந்தைய படங்களைப் போல் இப்பட

முதல்வன் 2

இந்தியன் 2, மற்றும் இந்தியன் 3, படத்துக்கான படப்பிடிப்பை ஒரு வழியாக முடித்துள்ளார் ஷங்கர். "கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு வேள்பாரி நாவலை கையிலெடுக்கத் திட்டமிட்டு வைத்திருந்தார். அதற்காக ரன்வீர் சிங்கிடமும் ஓகே வாங் கினார். ஆனால் தற்போது முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பிளான் போட்டுள் ளார். ஆனால், தமிழில் இல்லை இந்தியில். முதல் பாகத்தை "நாயக்' என்ற பெயரில் அனில் கபூரை வைத்து எடுத் திருந்த நிலையில், மீண்டும் அவரை வைத்து இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். இதற்காக அனில் கபூரிடமும் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தி ஓகே வாங்கி வைத்துள்ளார். பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகிறது. தனது முந்தைய படங்களைப் போல் இப்படத்தையும் பிரமாண்டமாக எடுக்க ஷங்கர் திட்டம் தீட்டியுள்ளார்.

Advertisment

cc

மூன்றாவது முறை!

அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவுள்ளார். அதற்கான பணிகளைத் தொடங்கிய அட்லீ தற்போது ஹீரோயினை தேடி வருகிறார். இதனிடையே ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் தற்போது இந்தியில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் "பேபி ஜான்' படத்தை தயாரித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தமிழில் ஒரு படம் தயாரிக்கிறார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். இருவரும் "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "சீதக்காதி' படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

Advertisment

விக்ரம் ஓ.கே.!

"தங்கலான்' பட ரிலீஸுக்காகக் காத்திருக்கும் விக்ரம், அடுத்ததாக சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு "மஞ்சும்மல் பாய்ஸ்' பட இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அருண் குமார் படத்தில் நடித்து முடித்தவுடன் இப்படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் சிதம்பரம் முன்னதாக தனுஷை சந்தித்து கதை கூறினார். ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. பின்பு மலையாளத்தில் ஒரு படம் இயக்கத் திட்டமிட்டுள்ளார். அப்படத்தை முடித்துவிட்டு தான் விக்ரம் படத்தைத் தொடங்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகவுள்ளது.

cc

பரபர பேச்சுவார்த்தை!

ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் பெயரிடாத படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்கு மோகன்லாலை படக்குழு தேர்வு செய்தது. ஆனால் அவர் தற்போது நடிக்கவில்லை. இதையடுத்து வில்லனாக துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜம்வாலை புக் செய்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் கேட்டவுடன் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மோகன்லால் நடிக்கவிருந்த கதாபாத்திரத்திற்கு மற்ற மொழிகளின் சீனியர் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது வருகிறது. கன்னடத்தில் சிவராஜ் குமாரிடமும், மலையாளத்தில் ஜெயராமிடமும் படக்குழு பேசி வருகிறது. மொத்த படப்பிடிப்பையும் ஜூனுக்குள் முடித்து சல்மான் படத்திற்கு செல்லவுள்ளதால் யாருடைய கால்ஷீட் இருக்கிறதோ அவரை தேர்வு செய்து படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள் படக்குழுவினர்.

அஞ்சலி 50

அஞ்சலி தனது திரைத் துறையில் 50 படங்களில் நடித்துள்ளார். அவரது 50-வது படமாக தெலுங்கில் "கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' எனும் திரைப் படம் வருகிற 11ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் ஹேப்பி மோடில் இருக்கும் அஞ்சலி, தான் நடித்த பெரிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால் அப்படங்கள் தன்னை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்பிக்கையில் உள்ளார். தெலுங்கில் கிருஷ்ண சைதன்யா - விஷ்வக் சென் கூட்டணியில் உருவாகும் "கேங்ஸ் ஆஃப் கோதாவரி' மற்றும் தமிழ், தெலுங்கு, இந்தியில் ராம் சரண் - ஷங்கர் கூட்டணியில் உரு வாகும் "கேம் சேஞ்சர்' படங்கள் இந்தாண்டு வெளியாகவுள்ளன.

- கவிதாசன் ஜெ.

nkn100424
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe