லீட் ரோல்!
முதல் படத்திலே தேசிய விருது வாங்கி, டீசன்டான கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி ஹிட் படங்களை கொடுத்துவருகிறார் ரித்திகாசிங். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "கிங் ஆஃப் கொத்தா' படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இப்போது ரஜினி -த.செ.ஞானவேல் கூட் டணியில் உருவாகும் "வேட்டையன்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுவரை ஹீரோயின், முக்கிய கதாபாத்திரம் என பயணித்து வந்த ரித்திகாசிங், முதல்முறையாக லீட்ரோலில் நடிக்கிறார். இப்படத்தை "சேத்துமான்' படத்தை இயக்கிய தமிழ் தயாரிக்க, நாகராஜ் என்பவர் இயக்குகிறார். இவர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் சமீபத்தில் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
த்ரிஷா இல்லன்னா சமந்தா!
பாலிவுட்டில் "ஜவான்' படம் மூலம் என்ட்ரி கொடுத்து வெற்றியை பதிவு செய்த அட்லீ, அடுத்ததாக டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அல்லுஅர்ஜுனை வைத்து படம் இயக்கவுள்ள அட்லீ, அவருக்கு ஜோடியாக ஹீரோயின் தேடும் பணியில் பிஸியாகவுள்ளார். பான் இந்தியா படமாக வெளியிடத் திட்டமிட்ட நிலையில், தென்னிந்திய நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த லிஸ்டில் தற்போது த்ரிஷா மற்றும் சமந்தா இருக்கின்றனர். இரண்டு பேரிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அல்லு அரவிந் தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் தயாரிக் கிறது. ஆகஸ்ட் முதல் படப் பிடிப்பைத் தொடங்க திட்ட மிட்டுள்ளார்கள்.
பச்சைக்கொடி!
கமல் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் "தக் லைஃப்'’படத்தில் தொடர்ச்சி யாக நடிகர்களின் மாற்றங்கள் நடந்து வருகிறது. முதலில் துல்கர் சல்மான் விலகினார். அவருக்கு பதில் சிம்பு கமிட்டானார். இதைத்தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியும் விலகியுள்ளார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு பதில் நிறைய நடிகர்களை அணுகியுள்ளது படக்குழு. முதலில் நிவின் பாலி, பின்பு அருண் விஜய் என இரண்டு நடிகர் களிடமும் பேச்சுவார்த்தை நடந்ததையடுத்து இரண்டுபேரும் சிவப்புக்கொடி காட்டிவிட்டனர். இதைத்தொடர்ந்து அரவிந்த் சாமியுடன் பேசியுள்ளனர். அவர் பச்சைக்கொடி காட்டி விட்டார். அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க வுள்ளது
மூன்று கெட்டப்!
"விடாமுயற்சி' படப் பிடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள அஜித், தற்போது பைக் பயணத் தில் பிஸியாகவுள்ளார். விரை வில் அதை முடித்துவிட்டு "விடாமுயற்சி' படப் பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இப் படத்தை முடித்துவிட்டு ஜூன் முதல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘"குட்-பேட்-அக்லி'’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத் தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார். படத்தின் தலைப்பிற்கேற்ற வாறு படத்தில் மூன்று கதாபாத்திரம் எனச் சொல்லப்படுகிறது. அதனால் மூன்று வெவ்வேறு கெட்டப்புகளில் தோன்றவுள்ளார் அஜித். இதற்கு முன்னதாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளியான "வரலாறு' படத்தில் அப்பா மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.
வில்லி ஆன்ட்ரியா!
ஆன்ட்ரியா கடைசியாக ‘"கா'’ என்ற படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார். அண்மையில் வெளியான இப்படம் சரியாகப் போகவில்லை. இதனால் அப்செட்டில் இருக்கும் ஆண்ட்ரியா, அடுத்த படத்தை கூடுதல் கவனத்துடன் தேர்வுசெய்து வருகிறார். அந்த வகையில் ஒரு பவர்ஃபுல்லான கேங் ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள் ளார். இதில் ஹீரோவாக கவின் நடிக்க, அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் என்பவர், இயக்குகிறார். ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டு வருகிறது. கவின் லைனப்பில் அடுத் தடுத்து படங்கள் இருப்பதால் அதை முடித்துவிட்டு இப்பட படப்பிடிப்பு தொடங்க திட்ட மிட்டுள்ளார்கள். முதல் முறை யாக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஆர்வமாக இருக்கிறார் ஆன்ட்ரியா. மேலும் இப்படம் வெளியான பின்பு தனக்கு ஒரு நல்லபெயரை பெற்றுக் கொடுக் கும் என்றும் மீண்டும் வெற்றிப் பாதைக்கு தன்னை இழுத்து செல் லும் என நம்பிக்கையில் இருக்கிறார்.
-கவிதாசன் ஜெ.