டூரிங் டாக்கீஸ்! ரகசியம் அம்பலம்!

cc

ரகசியம் அம்பலம்!

"சித்தா' பட வெற்றிக்கு பிறகு கமல் -ஷங்கர் கூட்டணியில் உருவாகும் "இந்தியன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சித்தார்த். இதையடுத்து அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் "8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீகணேஷ், இயக்கத்தில் நடிக்க ஒப் பந்தமாகியுள்ளார். இதனிடையே தான், காதலித்து வந்த அதிதிராவை வெளியுலகிற்கே சொல்லாமல் திருமணம் செய்துகொள்ள நிச்சயம் செய்துள்ளார். இதையறிந்த ஊடகங்கள், தகவலை வெளியிட்டதும் பிறகு ஆம், நிச்சயம் நடந்துள்ளது என்று சமூக வலைத்தளம் வழியாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சத்யா கெட்டப்!

வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்துவரும் அசோக் செல்வன் தற்போது

ரகசியம் அம்பலம்!

"சித்தா' பட வெற்றிக்கு பிறகு கமல் -ஷங்கர் கூட்டணியில் உருவாகும் "இந்தியன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சித்தார்த். இதையடுத்து அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் "8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீகணேஷ், இயக்கத்தில் நடிக்க ஒப் பந்தமாகியுள்ளார். இதனிடையே தான், காதலித்து வந்த அதிதிராவை வெளியுலகிற்கே சொல்லாமல் திருமணம் செய்துகொள்ள நிச்சயம் செய்துள்ளார். இதையறிந்த ஊடகங்கள், தகவலை வெளியிட்டதும் பிறகு ஆம், நிச்சயம் நடந்துள்ளது என்று சமூக வலைத்தளம் வழியாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சத்யா கெட்டப்!

வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்துவரும் அசோக் செல்வன் தற்போது, நோஹா ஆபிரஹாம் இயக்கும் "கேங்க்ஸ்' என்ற வெப் தொடர், இயக்குநர் பிரியா இயக்கத்தில் ‘"பொன் ஒன்று கண்டேன்'’போன்ற ப்ராஜெக்டில் நடித்துள்ளார். இதையடுத்து விக்னேஷ்ராஜா இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இது "போர் தொழில்' பட இரண்டாம் பாகம் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவலின் படி, கமல் நடித்த "சத்யா' படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. அதற்காக கமல் போல தனது கெட்டப்பை மாற்றி படப்பிடிப்புக்கு தயாராகிவருகிறார் அசோக்செல்வன்.

cc

நயன்தாரா வெயிட்டிங்!

தனது சினிமா கேரியரில் 75 படங்களில் நடித்துள்ள நயன்தாரா, செகண்ட் இன்னிங்சில் ஹீரோயினை மையப்படுத்திய கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். அந்த வகையில் "டெஸ்ட்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித் துள்ளார். மேலும் "மண்ணாங்கட்டி' என்ற படத்திலும் நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாமல், துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படம், மோகன்ராஜா இயக்கும் "தனி ஒருவன் 2' உள்ளிட்ட படங்களிலும் ஒப்பந்தமாகி யுள்ளார். இந்தநிலையில் மீண்டும் ஒரு ஹீரோயின் சப்ஜெக்டில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா. இப்படத்தை சசிகுமார் இயக்கவுள்ளார். மேலும், "குரங்கு பொம்மை' நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இரண்டு படங்களின் பணிகளும் இப்போதைக்கு தொடங்கப்படவில்லை. சசிகுமார் குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸ் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். நித்திலன் சாமிநாதன், விஜய்சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாகவுள்ளார். அதனால் இரு இயக்கு நர்களும் தங்களின் படங்கள் முடிந்ததும் நயன்தாரா படத்தை அடுத்தடுத்து இயக்கவுள்ளதாகத் தெரிகிறது.

நம்பர் 2 ராசி!

பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல் நடித்த "விலங்கு' வெப் தொடர், விமலுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வெற்றியைக் கொடுத்தது. ஆனால் அதன்பிறகு விமல் நடித்த படங்கள் எதுவும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மேலும் அவர் நடித்த 4 படங்கள் ரிலீஸுக்கு தயாராகி சில காரணங்களால் வெளியாகாமல் இருக்கிறது. இதனால் மீண்டும் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸில் நடிக்கிறார். இந்த சீரிஸ் "விலங்கு 2' என கூறப்படுகிறது. இதில் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னணி ஓ.டி.டி. நிறுவனம் தயாரிக்கிறது. இதனிடையே "தேசிங்கு ராஜா 2' படத்திலும் நடித்து வருகிறார் விமல்.

யாஷிகா நம்பிக்கை!

vv

யாஷிகா ஆனந்த் நடிப்பில் இந்தாண்டு எந்த படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் "படிக்காத பக்கங்கள்' என்ற தலைப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் ஒரு படம் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். செல்வம் இயக்கியுள்ள இப்படத்தில் பிரஜின், ஜார்ஜ் மேரியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளதாகவும், தனக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுக்கும் என்றும் தனது நண்பர்கள் வட்டாரத்தில் கூறிவருகிறாராம் யாஷிகா.

-கவிதாசன் ஜெ.

nkn030424
இதையும் படியுங்கள்
Subscribe