ஸ்பெஷல் படம்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_290.jpg)
அவ்வப்போது ஆக் டிங்கிலும் கவனம் செலுத்தி வரும் ஆண்ட்ரியா, ஹீரோ யினாகவும் முக்கிய கதாபாத்திரத்திலுமே நடித்துவந்தார். ஆனால் வெற்றிமாறன் தயாரிப்பில் முதல் முறையாக "அனல் மேல் பனித்துளி' படத்தில் முதன்மை கதாபாத்தி ரத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2022ஆம் ஆண்டு நேரடியாக ஓ.டி.டி. யில் வெளியானது. தமிழில் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் "கா'. லீட் ரோலில் ஆண்ட்ரியா நடித்துள்ள இப்படம் திரையரங்கில் ரிலீஸாக வுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஆண்ட்ரியா. காட்டில் நடக்கும் கதைக்களத்தை கொண்ட இப்படம் குறித்து அனுபவம் பகிர்ந்த ஆண்ட்ரியா, "“கோவிலைவிட காடுதான் கடவுள். அதாவது இயற்கை தான் எனக்கு கடவுள். அந்தவிதத்தில் இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷ லான படம்’'’ என்கிறார். மேலும் ஆக்ஷன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதால்... அது பெரிதாக பேசப்படும் என்றும் நம்புகிறாராம்.
நீளும் லிஸ்ட்!
கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிப்பில் தனுஷ் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், இயக்குநரை முடிவு செய்ய இளம் இயக்குநர்களான "பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன், "அடங்க மறு' இயக்குநர் கார்த்திக் தங்கவேல் என லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. கடைசியாக மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் கூட தனுஷிற்கு கதை சொல்லி ஓ.கே. வாங்கினார். ஆனால் அடுத்தகட்டத்திற்கு நகரவில்லை. லேட்டஸ்ட் நிலவரப்படி... "அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறிய கதை தனுஷிற்கு பிடித்துப்போக... உடனே ஓகே சொல்லியுள்ளாராம்.
சுந்தர்.சி கணக்கு!
சுந்தர்.சி தற்போது "அரண்மனை 4' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டும் முடியாத நிலையில், அடுத்த மாதம் வெளியிடும் முயற்சியில் தற் போது தீவிரமாக இறங்கி வருகிறார். இப்படம் நடிகராக அவருக்கு 25வது படம். ஏற்கனவே இயக்குநராக கலகலப்பு படம் 25வது படமாக அமைந்தது. இயக்குநராக 25, நமக்கு வெற்றி கொடுத்து தனது இமேஜை மீட்டு கொடுத்த தால், நடிகராகவும் அந்த செண்டிமெண்ட் ஒர்க்காகும் என நம்புகிறார். இந்த சூழலில் அவருக்கு இந்தியிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அக்ஷய்குமார் அவரை அழைத்து கதை கேட்டு, அது தற்போது டேக் ஆஃப் ஆகியுள்ளதாம். இதனால் குஷியில் இருக்கும் சுந்தர்.சி அரண்மனை படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, அக்ஷய் குமார் படத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரங்களில் பேச்சு.
ஜீ.வி. பிரகாஷ் அதிரடி!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_220.jpg)
நடிகர் ஜீ.வி. பிரகாஷ் "ரெபல்', "இடி முழக்கம்', "13', "கள்வன்', "டியர்', "கிங்ஸ்டன்' உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக இருந்ததை விட நடிகராக அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டு வருகிறார். இதே வேகத்தில் தற்போது கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்கு பறக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் இந்தி மற்றும் தமிழில் தயாராகவுள்ளது. ஏற்கனவே அனுராக் கஷ்யப் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்தில் பின்னணி இசையை ஜீ.வி. பிரகாஷ் கவனித்திருந்தார். இப்படம் மூலம் இந்தியில் கால் பதித்த அவர் இப்போது அதே அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுக மாகிறார். இந்தியில் கங்கனா ரணாவத்தின் "எமர்ஜென்சி', "சூரரைப் போற்று' ரீமெக் என இரண்டு படங்களுக்கு இசையமைக்கிறார். கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்... அதைத் தொடர்ந்து டோலிவுட் மற்றும் மல்லு வுட்டிலும் கால் பதிக்க முடிவெடுத்துள்ளா ராம்.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/cinema-t_3.jpg)