Advertisment

டூரிங் டாக்கீஸ்! பிரியங்காமோகன் ஆட்டம்!

111

பிரியங்காமோகன் ஆட்டம்!

cc

தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த ‘"கேப்டன் மில்லர்'’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த பிரியங்கா மோகன், தற்போது தனுஷ் இயக்கத்தில் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'’ படத் திலும் நடித்துள்ளார். இப்படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில், படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பிரியங்காமோகன் ஆடினார். இப் பாடல் படத்தின் புரமோஷனுக்காக பயன்படுத்தப்படுகிறது. தனுஷின் சகோதரி மகன் வருண் ஹீரோவாக அறிமுகமாக, முக்கிய வேடத்தில் அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வருகிறது.

மமிதா அலை!

Advertisment

cc

நடிகை மமிதாபைஜூ. இளம் நடிகையான இவர் மல்லுவுட்டில் பல படங்களில் நடித்திருந்தாலும், அவர் நடித்த "பிர

பிரியங்காமோகன் ஆட்டம்!

cc

தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த ‘"கேப்டன் மில்லர்'’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த பிரியங்கா மோகன், தற்போது தனுஷ் இயக்கத்தில் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'’ படத் திலும் நடித்துள்ளார். இப்படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில், படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பிரியங்காமோகன் ஆடினார். இப் பாடல் படத்தின் புரமோஷனுக்காக பயன்படுத்தப்படுகிறது. தனுஷின் சகோதரி மகன் வருண் ஹீரோவாக அறிமுகமாக, முக்கிய வேடத்தில் அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வருகிறது.

மமிதா அலை!

Advertisment

cc

நடிகை மமிதாபைஜூ. இளம் நடிகையான இவர் மல்லுவுட்டில் பல படங்களில் நடித்திருந்தாலும், அவர் நடித்த "பிரேமலு' படம் ரசிகர் களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக தெலுங்கு மற்றும் தமிழிலும் இப்படம் வெளியானது. இதனால் தென்னிந்திய அளவில் கவனம் பெற்றுள்ள மமிதாபைஜூ, கோலிவுட்டில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள "ரெபல்' படம் மூலம், எண்ட்ரி கொடுக்கிறார். தற்போது இன்னொரு தமிழ் படத்திலும் கமிட்டாகியுள்ளார். "ராட்சசன்' பட ராம்குமார் மூன்றாவது முறையாக விஷ்ணு விஷாலை வைத்து இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பாலாவின் "வணங்கான்' படத்தில் சூர்யாவின் தங்கையாக சில நாட்கள் நடித்து பின், மமிதாபைஜூ விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

சிம்பு என்ட்ரி!

கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜுஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். தற்போது துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்திலிருந்து வெளியேறிவிட்டார். அவருக்குப் பதில் இன்னொரு ஹீரோவாக சிம்புவை படக்குழு அணுக, அவர் ஓ.கே. சொல்லிவிட்டார். இப்படம் மூலம் கமல்ஹாசனுடன் முதல் முறையாக ஸ்கிரீன் ஷேர் செய்யவுள்ளார். கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ள சிம்பு, ஏற்கனவே மணிரத்னத்தின் "செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்திருந்தார்.

த்ரிஷா குத்தாட்டம்!

விஜய்யின் "தி கோட்'’படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது கேரளாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார். முதல் முறையாக யுவன்ஷங்கர் ராஜா இசையில் அவர் பாடியுள்ளார். முதல் பாடலாக இப்பாடல் மே மாதம் ரிலீஸாகவுள்ளது. ரசிகர்களைக் குஷிப்படுத்தும் ஒரு குத்துப் பாடலும் படத்தில் இடம் பெறுகிறது. இதற்கு டாப் ஹீரோயின்களில் யாரை யாவது நடனமாட வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்தார். விஜய்யின் காதுக்கு அவர் அதைக் கொண்டுபோக, த்ரிஷா சரியாக இருப்பாரா என அவர் கேட்டுள்ளார். வெங்கட்பிரபுவும் டபுள் ஓகே சொல்ல, த்ரிஷாவை அணுகி ஓகே வாங்கியுள்ளார் விஜய். அதோடு த்ரிஷாவிற்கு சில சீன்களும் வைக்கும்படி வெங்கட் பிரபுவிடம் கேட்டுகொள்ள, குத்தாட்டம் போட்ட கையோடு சில காட்சிகளிலும் தோன்றவுள்ளார் த்ரிஷா. அந்த பாடலுக்கு தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி அதிரி புதிரி ஹிட்டடித்த குண்டூர் காரம் படப்பாடலுக்கு நடனம் அமைத்த சேகர் மாஸ்டர்தான் நடனம் அமைத்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

அஜித் படத்தின் ஆங்கிலத் தலைப்பு!

"விடாமுயற்சி' படத்தை தொடர்ந்து ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘"குட், பேட், அக்லி' ’படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. ‘"குட், பேட், அக்லி'’என்ற தலைப்பு அஜித்தின் பரிந்துரையாம். சக நடிகரான விஜய் ‘ஜி’ என ஆரம்பிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ என்ற தலைப்பில் நடித்து வருவதால் அதே போல் ‘ஜி’ என ஆரம்பிக் கும் தலைப்பு வரவேண்டும் எனவும் அதுவும் இங்கி லீஷில்தான் வர வேண்டும் எனவும் அஜித் கண்டிஷன் போட்டாராம். அதன் விளை வாகவே இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடி படுகிறது. "வில்லன்' படத் திற்கு பின் 22 ஆண்டுகள் கழித்து அஜித் படத்திற்கு ஆங்கிலத் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிதாசன் ஜெ.

nkn200324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe