Advertisment

டூரிங் டாக்கீஸ்! த்ரிஷாவின் இரட்டை வேடம்!

cc

த்ரிஷாவின் இரட்டை வேடம்!

முன்னணி நடிகையான த்ரிஷா, தற்போது தமிழில் "தக் லைஃப்', மலையாளத்தில் "ராம்' என தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக "விஸ்வம்பரா' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக் கிறாராம். த்ரிஷாவை மையப்படுத்திதான் இப்படத்தின் கதையே நகர்கிறதாம். ஏற்கனவே "மோகினி' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த த்ரிஷா, இப்போது இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

Advertisment

c

நம்பிக்கை அமலாபால்!

இழந்த தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க கடுமையாகப் போராடிவருகிறார் அமலாபால். அதற்காக பல முயற்சிகளை மேற் கொண்டாலும், தோல்விகளையே சந்தித்து வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு "கடாவர்'’படத்தை தயாரித்து லீட் ரோலில் நடித்தா

த்ரிஷாவின் இரட்டை வேடம்!

முன்னணி நடிகையான த்ரிஷா, தற்போது தமிழில் "தக் லைஃப்', மலையாளத்தில் "ராம்' என தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக "விஸ்வம்பரா' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக் கிறாராம். த்ரிஷாவை மையப்படுத்திதான் இப்படத்தின் கதையே நகர்கிறதாம். ஏற்கனவே "மோகினி' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த த்ரிஷா, இப்போது இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

Advertisment

c

நம்பிக்கை அமலாபால்!

இழந்த தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க கடுமையாகப் போராடிவருகிறார் அமலாபால். அதற்காக பல முயற்சிகளை மேற் கொண்டாலும், தோல்விகளையே சந்தித்து வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு "கடாவர்'’படத்தை தயாரித்து லீட் ரோலில் நடித்தார். அதுவும் பெரிதாக கைகொடுக்கவில்லை. பின்பு இந்தி பக்கம் சென்று, கைதி பட ரீமேக்கில் சிறப்பு வேடத்தில் நடித்தார். பாலிவுட்டும் அவருக்கு ராசி இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எந்த வுட்டிலும் கவனம் செலுத்தாமல் தனது தாய்மொழியான மோலிவுட்டில் மட்டும் முழுக்கவனத்தை செலுத்திவருகிறார். அவர் நடிப்பில் அடுத்ததாக "ஆடுஜீவிதம்' படம் மார்ச் 28ல் வெளியாகவுள்ளது. இதில் பிரித்விராஜுக்கு மனைவியாக அமலாபால் நடித்துள்ளார். இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மலையாள எழுத் தாளர் பென்யாமின் எழுதிய ‘"ஆடு ஜீவிதம்'’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. இப்படம் தனக்கு சாதகமாக அமையும் என அமலாபால் நம்புகிறார். அதன் காரணமாகவே, தான் கர்ப்பமாக இருக்கும் நிலையில்கூட இப்பட புரொமோஷன் பணிகளில் கலந்துகொண்டு வருகிறார்

கார்த்தி க்ரீன் சிக்னல்!

மாரி செல்வராஜ் "வாழை' படத்தை முடித்த நிலையில் துருவ்விக்ரம் படம் மற்றும் தனுஷ் படம் என அடுத்தடுத்து இயக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் சமீபத்தில் ரஜினியை சந்தித்தும் கதை கூறினார். அது எதுவும் கைகூடவில்லையாம். அதனால் ஏற்கனவே திட்டமிட்டப்படி துருவ் விக்ரம் படத்தை தூத்துக்குடியில் சமீபத்தில் தொடங்கி நடத்தி வருகிறார். அடுத்ததாக தனுஷ் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் கார்த்தியை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும், கார்த்தி க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகவும் சொல்கின்றனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. துருவ் விக்ரம் படத்தை முடித்த பின் அப்படத்தின் பணிகளைக் கவனிக்கத் திட்டமிட்டுள்ளாராம்

வில்லன் ஹீரோ!

"குட்டிப்புலி', "கொம்பன்', "மருது' என கிராமத்து பின்னணியில் படங்களை இயக்கி பிரபலமான முத்தையா, அதே ஃபார்முலாவில் வித்தியாசம் காட்டாமல் தொடர்ந்து படம் எடுத்து வந்ததால் பெரிய ஹீரோக்களின் கால்ஷீட் கிடைக்காமல் தவித்துவந்தார். அதனால் தனது மகனையே தற்போது ஹீரோவாக வைத்து தனக்கே உரித்தான அதே கிராமத்து பின்னணி ஸ்டைலில் ஒரு படம் எடுத்துவருகிறார். இதில் வில்லன் கதாபாத்திரம் பவர்ஃபுல்லாக எழுதப்பட்டுள்ளதாம். அதனால் அந்த பாத்திரத்திற்கு பல பேரை யோசித்த முத்தையா, ஹீரோ பரத் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத் துள்ளார். உடனே அவரை தொடர்பு கொண்டு கேட்க... பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள பரத், கிராமத்து கதைக்களத்தில் முதல்முறையாக வில்லனாக மிரட்ட உள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் நெகடிவ் ஷேடில் நடித்த "செல்லமே' படம் தனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததால் அந்த சென்டிமெண்ட் தனது கம்லிபேக்கிற்கு கைகொடுக்கும் என நம்புகிறாராம் பரத்.

தலைப்பு முக்கியம்!

விஜய்ஆண்டனி "வள்ளி மயில்', "ஹிட்லர்', "ரோமியோ' என ஏகப்பட்ட படங்களை தற்போது கைவசம் வைத்துள்ளார். இதையடுத்து புதிதாக அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். "அருவி', "வாழ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமன், புதுமுகங்களோடு பயணித்த நிலையில் முதல் முறையாக ஒரு பிரபல ஹீரோவுடன் கை கோர்த்துள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கவுள்ளார். தனது படங் களுக்கு தொடர்ந்து வித்தியாச மான தலைப்பை வைத்து வருவதால் இப்படத்திற்கும் அப்படி தலைப்பு வைக்கும்படி இயக்குநருக்கு அன்புக் கட்டளையிட்டாராம் விஜய் ஆண்டனி.

-கவிதாசன் ஜெ.

nkn160324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe