விரைவில் அப்டேட்!

samantha

Advertisment

தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, கடந்த 1 வருடத்திற்கு மேலாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். உடல் நலம் பூரணமாக குணமடையத் தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சினிமாவிற்கு திரும்பி சமந்தா தனது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார், உடல்நலம் குறித்த பாட்கேஸ்ட் ஒன்றை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் படம் தயாரிக்க முடிவெடுத்துள்ளார். அதற்கான வேலைகளைக் கவனித்து வரும் சமந்தா, தற்போது பல்வேறு இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும் எனத் திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

வளைத்த தனுஷ்!

மலையாளப் படமான "மஞ்சும்மல் பாய்ஸ்', தமிழகத்தில் நடக்கும் கதைக் களத்தைக் கொண்டு உருவாகியிருந்ததால் தமிழ்நாட்டில் படம் சக்கை போடு போட்டு வருகிறது. கேரளாவை விட தமிழக ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். சிலாகித்தும் பேசுகின்றனர். அதனால் அப்பட இயக்குநர் சிதம்பரம் இயக்கும் அடுத்த படத்திற்கு செம்ம டிமாண்ட். அதைப்புரிந்து கொண்ட கோலிவுட் தயாரிப்பாளர்கள் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்பு செழியன் இருவரும் சிதம்பரத்திற்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். இதில் அன்பு செழியன் தயாரிக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க ஓகே சொல்லியுள்ளார். சமீபத்தில் சென்னை வந்த சிதம்பரத்தை தனுஷ் நேரில் அழைத்துப் பேசினார். அப்போது இருவரும் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ப்ராஜெக்ட் தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. முழு திரைக்கதை எழுதும் பணியில் சிதம்பரம் ஈடுபட்டு வருகிறார். ஆனால் தனுஷ், தற்போது அவரது 51வது படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வினோத், இந்தியில் ஆனந்த் எல்.ராய் மற்றும் மாரி செல்வராஜ், அருண் மாதேஷ்வரன் என ஏகப்பட்ட இயக்குநர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய கூட்டணி!

"மாமன்னன்' படத்திற்கு பிறகு "மாரீசன்' என்ற தலைப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. இதில் பகத் பாசிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், இன்னொரு டபுள் ஹீரோ சப்ஜெக்டில் கமிட்டாகியுள்ளார் வடிவேலு. இதில் பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் பொன்ராமின் உதவி இயக்குநர் ஏ.எம். ராஜா இயக்குகிறார். இந்த படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, படத்திற்கு "லைப் இஸ் பியூட்டிபுல்'’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் மூலம் 23 ஆண்டுகளுக்கு பிறகு வடிவேலு - பிரபுதேவா கூட்டணி சேர்ந்து நடிக்கவுள்ளனர். இதற்கு முன்னதாக காதலன், மனதை திருடிவிட்டாய், ராசய்யா உள்ளிட்ட படங்கள் இவர்கள் கூட்டணியில் வந்துள்ளது. இதில் மனதை திருடிவிட்டாய் படத்தில் பிரபுதேவா - வடிவேலு - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூன்று பேரும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ff

40-ல் கல்யாணம்!

எஸ்.ஜே.சூர்யாவின் "அ ஆ' படத்தின் மூலம் அறிமுகமானவர் மீரா சோப்ரா. அர்ஜூனின் "மருதமலை' படத்தின்மூலம் ஹிட் கொடுத்தும் ஏனோ வாய்ப்பு ஜீரோவாகத்தான் இருந்தது. அப்படியே தெலுங்கு, இந்தி என்று போனவர் அங்கும் சைன் பண்ண முடியவில்லை. சினிமாவில் ஜெயிக்க முடியாததை வாழ்க்கையிலாவது ஜெயிக்கலாம்னு தனது 40வது வயதில் முடிவெடுத் துள்ளார் மீரா சோப்ரா. 3 ஆண்டுகளாக காதலித்து வந்தவர் தற்போது காதலரை மணக்கிறார். வாழ்க்கையில் ஜெயிக்க வாழ்த்துக்கள்!

-கவிதாசன் ஜெ.