Advertisment

டூரிங் டாக்கீஸ்! தேர்தலுக்கு முன் எமர்ஜென்சி!

cc

தேர்தலுக்கு முன் எமர்ஜென்சி!

cc

கங்கனா ரணாவத், தனது படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் அடுத்தடுத்த படங்களை கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு கமிட்செய்து வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத் தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்துவருகிறார். மாதவன் ஹீரோவாக நடிக்க, ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப் பிடிப்பு சில மாதங் களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப் பாக நடைபெற்று வந்த நிலையில்... இப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம். கங்கனா ரணாவத், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கி

தேர்தலுக்கு முன் எமர்ஜென்சி!

cc

கங்கனா ரணாவத், தனது படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் அடுத்தடுத்த படங்களை கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு கமிட்செய்து வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத் தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்துவருகிறார். மாதவன் ஹீரோவாக நடிக்க, ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப் பிடிப்பு சில மாதங் களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப் பாக நடைபெற்று வந்த நிலையில்... இப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம். கங்கனா ரணாவத், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். அதனால் தேர்தல் முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்துகொள்வாராம். இதனிடையே அவர் நடித்து இயக்கியுள்ள எமெர்ஜென்சி படத்தை தேர்தலுக்கு முன்பு வெளியிட்டு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த முனைப்பு காட்டி வருகிறாராம்.

Advertisment

80 நாட்கள்!

cc

மாரிசெல்வராஜ் -துருவ்விக்ரம் இருவரும் 2021ஆம் ஆண்டு ஒரு படத்திற்காக கைகோர்த்தனர். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தமிழ்நாட்டு கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது. இந்த படத்திற்காக நீண்ட காலமாக கபடி பயிற்சி எடுத்து வந்தார் துருவ் விக்ரம். ஆனால், மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. ஒரு வழியாக வருகிற 15ஆம் தேதி இப் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி களில் தொடங்க வுள்ளது. அதற்கான பணிகளும் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் அனுபமா பரமேஷ்வரன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் என இரண்டு மலையாள ஹீரோயின்கள் கமிட்டாகியுள்ளனர். மொத்த படப்பிடிப்பையும் 80 நாட்களுக்குள் முடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

காத்திருக்கும் கில்லர்!

எஸ்.ஜே சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு "கில்லர்' என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து நடிக்கவும் திட்டமிட்டிருந்தார். படத்திற்காக ஜெர்மனியில் இருந்து ஒரு சொகுசு காரை இறக்குமதி செய்து படப்பிடிப்பிற்காக தயார் செய்திருந்தார். ஆனால் "மார்க் ஆண்டனி', "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' உள்ளிட்ட படங்கள் அடுத்ததடுத்து ஹிட்டடித்ததால் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. இதனால் கமிட் செய்த படங்களை முடித்துவிட்டு கில்லர் படத்தை எடுக்க முடிவு செய்திருந்தார். இப்போது "இந்தியன் 2', "ராயன்', "கேம் சேஞ்சர்' என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளதோடு, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், ராஜு முருகன், அருண் குமார் என அடுத்தடுத்து பயணிக்கவுள்ளார். தொடர்ந்து நடிப்பில் பிஸியாக இருப்பதால் கில்லர் படம் இன்னும் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாம்.

அப்செட் ஐஸ்வர்யா!

"லால் சலாம்' படம் சரியாகப் போகததால், அப்செட்டான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உடனே தனது அடுத்த பட ஒன்லைனை எடுத்துக்கொண்டு பல ஹீரோக்களிடமும் சொல்லிவந்தார். அந்த வரிசையில் சித்தார்த்திடம் சொல்ல, உடனே அவர் ஓ.கே. சொல்லிவிட்டார்.

அதனால் தற்போது திரைக்கதை எழுதும் பணியில் இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி காந்த். சித்தா பட வெற்றியைத் தொடர்ந்து கமல் -ஷங்கர் கூட்டணியில் உருவாகும் "இந்தியன் 2' படத்தில் நடித்து வரும் சித்தார்த், அதை முடித்துவிட்டு ஐஸ்வர்யா படத்தில் நடிப்பதாகக் கூறியுள்ளாராம்.

-கவிதாசன் ஜெ.

Advertisment
nkn060324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe