Advertisment

டூரிங் டாக்கீஸ்! நான் ரொம்ப பிஸி!

cc

நான் ரொம்ப பிஸி!

dd

Advertisment

தென்னிந்திய படங்களில் பிரபல ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்ற ராஷ்மிகா மந்தனா பா-வுட்டில் நுழைந்து, பிரபல நடிகர் களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை ஸ்டெடியாக வைத்துள்ளார். ரன்பீர்கபூருக்கு ஜோடியாக அவர் நடித்த "அனிமல்' படம் அங்கே அதிரிபுதிரி வெற்றியடைந்தது. "இந்தப் படம் பெண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது' என எதிர்மறை விமர்சனங் கள் வந்தபோதும், படம் சூப்பர்ஹிட்டாகி வசூலில் பட்டையைக் கிளப்பியது. இதற்கிடையே "படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மற்றும் வெற்றிவிழாவில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை'' என பத்திரிகை யாளர்கள் கேள்வியால் கொக்கிபோட... "எனது அடுத்த படத்த

நான் ரொம்ப பிஸி!

dd

Advertisment

தென்னிந்திய படங்களில் பிரபல ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்ற ராஷ்மிகா மந்தனா பா-வுட்டில் நுழைந்து, பிரபல நடிகர் களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை ஸ்டெடியாக வைத்துள்ளார். ரன்பீர்கபூருக்கு ஜோடியாக அவர் நடித்த "அனிமல்' படம் அங்கே அதிரிபுதிரி வெற்றியடைந்தது. "இந்தப் படம் பெண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது' என எதிர்மறை விமர்சனங் கள் வந்தபோதும், படம் சூப்பர்ஹிட்டாகி வசூலில் பட்டையைக் கிளப்பியது. இதற்கிடையே "படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மற்றும் வெற்றிவிழாவில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை'' என பத்திரிகை யாளர்கள் கேள்வியால் கொக்கிபோட... "எனது அடுத்த படத்தில் பிஸியாக இருந்ததால் அப்போது நடந்த வெற்றி விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. படத்தின் வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது'' என்று கூறியுள்ளார்.

இளையராஜா டிக்!

இளையராஜா தனது வாழ்க்கை வரலாற்றை படமாக்க திரைக்கதை எழுதி வருகிறார். கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குரூப் என இரண்டு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை இயக்க ஆர்வமாக இருப்ப தாகவும், அதில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனவும் பாலிவுட் இயக்குநர் பால்கி தெரிவித் திருந்தார். ஆனால் தற்போது மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஷ்வரன் இருவரையும் தனுஷ், இளையராஜாவிடம் பரிந்துரைக்க... இதில் அருண்மாதேஷ்வரனை ஓ.கே. செய்துள்ளாராம் இளையராஜா.

விறுவிறு லாரன்ஸ்!

dd

Advertisment

"ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' பட வெற்றியைத் தொடர்ந்து, ஏகப்பட்ட படங்களில் ராகவா லாரன்ஸ் கமிட்டாகி வருகிறார். ரஜினி -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லன், விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் "படைத்தலைவன்' படத்தில் கேமியோ ரோல், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில் ஹீரோ என ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வரிசையில் விஷாலை வைத்து அயோக்யா படத்தை எடுத்த வெங்கட்மோகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கோல்டு மைன்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கும் நிலையில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகிறது. மிருகங்களை மையப்படுத்தி இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதால் பெரும்பகுதி படப்பிடிப்புகள் தாய்லாந்தில் நடைபெறுகிறது.

காமெடி படத்தில் த்ரிஷா!

தமிழ், மலை யாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் த்ரிஷா, கோலிவுட்டில் கமலின் "தக் ஃலைப்', அஜித்தின் "விடாமுயற்சி', மோலிவுட்டில் மோகன்லாலின் "ராம்', டொவினா தாமஸின் "ஐடென்டிட்டி'... டோலிவுட்டில் சிரஞ்சீவியின் "விஸ்வம்பரா' என கைவசம் வைத்துள்ளார். தற்போது வெங்கடேஷ் நடிக்கும் புதிய தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகி யுள்ளாராம் த்ரிஷா. தில்ராஜு தயாரிக்கும் இப்படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். காமெடி ஜானரில் இப்படம் உரு வாகிறதாம்.

மீண்டும் சிவகார்த்திகேயன்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத் தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்தாக ஏ.ஆர் முருகதாஸ் படத்தில் நடித்துவருகிறார். இதை முடித்துவிட்டு வெங்கட் பிரபு படத்தில் நடிக்க முடிவெடுத் துள்ளார். அடுத்து, டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் அவரை சந்தித்து மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்க ஓ.கே. சொல்லி யுள்ளார். இதையடுத்து அயலான் பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.

-கவிதாசன் ஜெ.

nkn020324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe