ந்தந்த காலகட்டத்தில் முன்னணியில் இருக்கும் கதா நாயகிகள்... தங்கள் காலத்தில் பிரபலமாக இருக்கும் ஹீரோக்கள் எல்லோருடனும் நடித்து விடுவார்கள்.

அதிலும் இரு துரு வங்களாக இருக்கும் ஹீரோக் களுடனும் நடித்துவிடுவார்கள்.

பானுமதி காலத்திலிருந்தே இது நடைமுறை.

Advertisment

rajini-trisha

90-களில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா... ரஜினியுடன் ஜோடி யாக நடித்தபோதும் கமலுடன் சேர்ந்து நடிக்கவில்லை. கமலின் முத்தக்காட்சிகள் குறித்து ரோஜா கண்டித்து ஒரு கட்டுரை எழுதியதால்... கமலுடன் நடிக்கும் வாய்ப்பு அமையாமல் போனது.

Advertisment

அதன்பின்... ரசிகர் களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த சிம்ரன் பெரும் பாலான கதாநாய கர்களுடன் நடித் தார். கமலுட னும் நடித்தார். ஆனால்... கமலுக்கு எதிர்துருவமான ரஜினியுடன் டூயட் பாட சிம்ரனுக்கு வாய்ப்பு அமையவில்லை. அப்படி அமையவிருந்த நிலையில்... கமலும், சிம்ரனும் ரியலாகவே டூயட் பாடிக்கொண்டிருந்ததால்... ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு எட்டாமல் போனது. திருமணம் செய்துகொண்ட நிலையில் ‘"சந்திரமுகி'யாக நடிக்க வாய்ப்பு வந்து... படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். ஆனால் அப்போது கர்ப்பமாக இருந்த தால் சிம்ரன் அந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார். ஜோதிகா நடித்தார்.

பெரும்பாலான கதாநாயகர்களுடன் நடித்து விட்ட அசின், கமலுடன் நடித்தார். ஆனால் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைய வில்லை. திருமணமாகி செட்டிலாகிவிட்டார் அசின்.

இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாராவும், த்ரிஷாவும் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி உட்பட பெரும்பாலான முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துவிட்டார்கள்.

அதிலும் சினிமாவுக்குள் நுழைந்த கால கட்டத்திலேயே ரஜினியுடன் நடித்துவிட்டார் நயன்தாரா. ஆனால் கமலுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் இன்னும் அமையவில்லை.

த்ரிஷாவோ... கமலுடன் நடித்துவிட்டார். ஆனால் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அமையாமல் இருந்தது.

kamal

நீண்ட நாட்களாகவே ரஜினியுடன் நடிக்கும் தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்து வந்தார் த்ரிஷா. "கொடி'’படத்தில் தனுஷுடன் நடித்தபோது... தனுஷிடம், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை அமைத்துத்தர கேட்டுக்கொண்டார் த்ரிஷா.

தனுஷ் தயாரித்த "காலா'’படத்திலேயே ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைக்கும்... என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது அமையவில்லை.

த்ரிஷா இப்போதும் விஜய்சேதுபதியுடன் இரண்டு படம் உட்பட கைவசம் நிறைய வாய்ப்புகளுடன் இருந்தாலும்... "ரஜினியுடன் நடித்து விட்டால் ஒரு முழுமை இருக்கும்' என விரும்புகிறார்.

இதற்காக த்ரிஷா எடுத்த முயற்சிகள் வீண் போகவில்லை.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படத்தில் சிம்ரன் நடிப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், த்ரிஷாவும் நடிக்கவிருப்பது விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

கமல்-டைரக்டர் ஷங்கர் கூட்டணியில் உருவாகவிருக்கும் "இந்தியன்-2'’படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கட்டடமா? தேர்தலா?

தலைவராக நாசரையும், செயலாளராக விஷாலையும், பொருளாளராக கார்த்தியையும் கொண்ட நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கிறது. 35 கோடி பட்ஜெட்டில் நடிகர் சங்க அலுவலக கட்டுமானப்பணிகள் நடந்துவரும் நிலையில்... கட்டுமானத்திற்கு தேவைப்படும் 20 கோடி ரூபாய் நிதியை கலைநிகழ்ச்சி மூலம் திரட்டவேண்டியுள்ளது. வரும் மார்ச் மாதம் சங்க கட்டட திறப்புவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

ஆனால் டிசம்பரில் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் வேலைகள் தொடங்கிவிட்டால் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்படவேண்டியிருக்கும். நிதி திரட்டு வதிலும் சுணக்கம் ஏற்படும் என்பதால்... கட்டுமானப்பணிகள் முடியும்வரை தேர்தலை தள்ளிவைக்க பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதன் அடிப்படையில்... நடிகர் சங்க பொதுக்குழு கூட்டப்பட்டு... ஆறு மாதங் களுக்குத் தேர்தலை தள்ளிவைக்கும் தீர்மானம்’ ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

-ஆர்.டி.எ(க்)ஸ்