Advertisment

டூரிங் டாக்கீஸ்! மெய்யழகி!

ss

மெய்யழகி!

ff

Advertisment

நடிகர் கார்த்தி தற்போது நலன் குமரசாமி இயக்கத்தில், "வா வாத்தியாரே'’படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் "96' பட இயக்குநர், பிரேம் குமார் இயக்கத்தில் "மெய்யழ கன்'’என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யா தயாரிக்க, அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை சுவாதி கொண்டே நடிப்பதாக ஆரம் பத்தில் சொல்லப்பட்டாலும், அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறார். ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். விக்ரம்பிரபுவின் "ரெய்டு' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஸ்ரீதிவ்யா. கடந்த தீபாவளிக்கு வெளியான இப்படம் அவருக்கு எதிர்பார்த

மெய்யழகி!

ff

Advertisment

நடிகர் கார்த்தி தற்போது நலன் குமரசாமி இயக்கத்தில், "வா வாத்தியாரே'’படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் "96' பட இயக்குநர், பிரேம் குமார் இயக்கத்தில் "மெய்யழ கன்'’என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யா தயாரிக்க, அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை சுவாதி கொண்டே நடிப்பதாக ஆரம் பத்தில் சொல்லப்பட்டாலும், அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறார். ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். விக்ரம்பிரபுவின் "ரெய்டு' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஸ்ரீதிவ்யா. கடந்த தீபாவளிக்கு வெளியான இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இப்போது கார்த்தி பட வாய்ப்பு கிடைக்க... அதை நழுவ விடாமல், உடனே ஓ.கே சொல்லியுள்ளார். ஸ்ரீதிவ்யா ஏற்கனவே "காஷ்மோரா' படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் உறுதி!

நீண்ட ஆண்டுகளாக அரசியல் ஆசையிலிருந்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து கட்சியை ஆரம் பித்துள்ளார். முழுநேர அரசியலில் ஈடுபடு வதற்கு முன் கடைசியாக ஒரு படத்தில் நடிப்ப தாகத் தெரிவித்துள்ளார். இதனால் அப்படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி கோடம்பாக் கத்தின் ஹாட் டாப் பிக்காக இருந்து வருகிறது. விஜய்யின் லிஸ்டில், கார்த்திக் சுப்புராஜ், அட்லீ உள்ளிட்ட இயக்குநர் கள் இருக்க... தற்போது புதிதாக வினோத்தும் இணைந்துள்ளார். கமலை இயக்க காத் திருந்த வினோத், அப்படம் தள்ளிப்போன தால், விஜய்யிடம் அந்தக் கதையை கூறியுள்ளார். விஜய்யிடமிருந்து எந்த பதிலும் இன்னும் வரவில்லையாம். விஜய் ஒரு முடிவில் தெளிவாக இருக்கிறார். அதாவது, அரசியல் என்ட்ரிக்கு முன் கடைசி படம் என்பதால், அரசியல் கதையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் அரசியல் கதை கேட்டு வருகிறார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'’ படத்தில் நடித்து வருகிறார்.

cc

கதை ஓ.கே!

Advertisment

"சண்டக்கோழி', "சென்னை 600 028' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றிய சௌந்தர்யா ரஜினி காந்த், "கோவா' படம் மூலம் தயாரிப்பாளரானார். பின்பு ரஜினியை வைத்து "கோச்சடையான்', தனுஷை வைத்து "வேலையில்லா பட்டதாரி 2' படங்களை இயக்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது அசோக்செல்வன் நடிக்கும் ‘"கேங்க்ஸ்'’வெப் சீரிஸில் ஷோ ரன்னராக பணியாற்றுகிறார். இதையடுத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில், ராகவா லாரன்ஸிடம் கதை சொல்லி ஓ.கே. வாங்கி யுள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹீரோவுக்கு நோ!

"குட் நைட்' படம் மூலம் ஹீரோவான மணிகண்டன், "விக்ரம் வேதா', "விஸ்வாசம்', "தம்பி' என சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இந்தச்சூழலில் விரைவில் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார். அதற்கான பணிகளில் நீண்டகாலமாக இருந்துவந்த அவர், தற்போது தீவிரமாக இறங்கியுள்ளார். ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் முழுமூச்சுடன் செயல்பட்டு வரும் அவர், அதில் விஜய்சேதுபதியை நடிக்கவைக்க முயன்றுவருகிறார். விஜய்சேதுபதியை இயக்க வேண்டும் என்பது அவரது ஆசையாம். இதை விஜய்சேதுபதியிடமே அவர் வெளிப்படுத்திய நிலையில், கதை எழுதி முடித்ததும் தன்னிடம் வந்து சொல்ல அனுமதித்துள்ளார் விஜய்சேதுபதி. அதனால் அதற்கான முனைப்பில் இருக்கும் மணிகண்டன், ஹீரோ வாய்ப்புகளைக்கூட இதற்காக தவிர்த் துவருகிறாராம்.

-கவிதாசன் ஜெ.

nkn100224
இதையும் படியுங்கள்
Subscribe