Advertisment

டூரிங் டாக்கீஸ்! மயிலு மகள்!

ss

மயிலு மகள்!

jhanvi kapoor

"கங்குவா' படத்தை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ள சூர்யா, வெற்றிமாறனின் ‘"வாடிவாசல்'’ மற்றும் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் ‘"கர்ணா'’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் "கர்ணா' படம் பான் இந்திய படமாக இரண்டு பாகங்களாக மொத்தம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம் மாண்டமாகத் தயாராகிறது. ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில்... அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் முதல் முறையாக... அதுவும் முன்னணி நடிகரான சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

கை கொடுக்கும் லாரன்ஸ்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந் தின் மறைவு தமிழ் திரைப் பிரபலங் களை உலுக்கிய நிலையில் அவரது குடும்பத்தினருக்கு உதவி செய்ய பலரும் முன்வந்துள்ள

மயிலு மகள்!

jhanvi kapoor

"கங்குவா' படத்தை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ள சூர்யா, வெற்றிமாறனின் ‘"வாடிவாசல்'’ மற்றும் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் ‘"கர்ணா'’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் "கர்ணா' படம் பான் இந்திய படமாக இரண்டு பாகங்களாக மொத்தம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம் மாண்டமாகத் தயாராகிறது. ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில்... அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் முதல் முறையாக... அதுவும் முன்னணி நடிகரான சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

கை கொடுக்கும் லாரன்ஸ்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந் தின் மறைவு தமிழ் திரைப் பிரபலங் களை உலுக்கிய நிலையில் அவரது குடும்பத்தினருக்கு உதவி செய்ய பலரும் முன்வந்துள்ளனர். அந்த வகை யில் ராகவா லாரன்ஸ், “"நிறைய படங் களில் விஜயகாந்த் சார், கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கெஸ்ட் ரோல் பண்ணுவார். சண்முகப்பாண்டியன் நடிக்கும் படத்தில், படக்குழுவினர் ஒப்புக் கொண்டால், ஒரு கெஸ்ட் ரோலில், ஃபைட் சீனோ, பாட்டோ எது வேண்டு மானாலும் பண்ண தயாராகவுள்ளேன். அதுமட்டுமல்லாமல், சண்முகப்பாண்டியனும் நானும் நடிக்கிற மாதிரி இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் இருந்தாலும் நடிக்க ரெடி'’என கூறியிருந்தார். அதன்படி சண்முகப் பாண்டியன் நடித்துவரும் "படைத் தலைவன்'’படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் கமிட்டாகியுள்ளார். அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

santhanam

பெருத்த எதிர்பார்ப்பு!

"டிக்கிலோனா', "வடக்குப்பட்டி ராமசாமி' படத்தைத் தொடர்ந்து, இன் னொரு புதிய படத்திற்காகவும் கார்த்திக் யோகியுடன் கூட்டணி வைத்துள்ளார் சந்தானம். இப்படத்தில் ஆர்யாவும் இணைந்து நடிக்கவுள்ளார். அட்வென்ச்சர் ஃபேண்டஸி ஜானரில் இப்படம் உருவா கிறது. இந்நிலையில் சந்தானத்தை வைத்து ஒரு படம் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள் ளார் ஆர்யா. இப்படம் சந்தானத்தின் ஹிட் பட லிஸ்ட்டில் இருக்கும் "டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரேம்ஆனந்த் இப்படத்தையும் இயக்குவதாகக் கூறப்படுகிறது. சந்தானத்தின் ட்ரேட்மார்க் ஸ்டைலான நக்கல் காமெடி இப்படத்திலும் தொடர்கிறது. "பாஸ் என்கிற பாஸ் கரன்', "வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' போன்ற படங்களில் காமெடி நடிகராக வந்த சந்தானம், புதிய படத்தில் முதன்மை கதாபாத்தி ரத்தில் நடிக்கிறார். மேலும் காமெடியிலிருந்து ஹீரோவான பிறகு முதல்முறையாக மற்ற ஹீரோ வுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ஹிட்டடித்த காம்போ, ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஷார்ட் பிரேக்!

பிரபாஸ், பிரசாந்த் நீல் இயக்கத் தில் "சலார்' படத்தில் நடித்திருந்தார். இப்படம், உலகளவில் ரூ.600 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் "தி ராஜா சாப்', சந்தீப் ரெட்டி வங்காவின் "ஸ்பிரிட்', இந்தியில் நாக்அஷ்வின் இயக்கும் "கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இப்படி வரிசையாகப் படங்களை கமிட் செய்துள்ள பிரபாஸ், தற்போது நடிப்பிலிருந்து சிறிய பிரேக் எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாதம் ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த மாதம் மீண்டும் நடிப்புக்கு திரும்ப பிரபாஸ் முடிவெடுத்துள்ளார்.

அணி மாற்றம்!

இயக்குநர் ரத்னகுமார், லோகேஷ் கனகராஜுடன் இணைந்து "மாஸ்டர்', "விக் ரம்', "லியோ' உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ஆனால் லோகேஷ் அடுத்து இயக்கவுள்ள ரஜினி 171வது படத்தில் அவர் இடம் பெறவில்லை. இதற்கு காரணமாக "லியோ' பட வெற்றிவிழாவில் “"எவ்வளவு உயரத் தில் பறந்தாலும், பசிக்கு கீழ் வந்து தான் ஆக வேண்டும்'” என பேசியது தான் என பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த படத்திற் காக வேலையைத் தொடங்கி யுள்ள ரத்னகுமார், தற்போது கார்த்தியின் "சர்தார் 2'ல் வசனம் மற்றும் திரைக்கதை உதவியாளராக இணைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

-கவிதாசன் ஜெ.

Advertisment
nkn070224
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe