Advertisment

டூரிங் டாக்கீஸ்! பெரிய ஆசை!

cc

பெரிய ஆசை!

dd

Advertisment

"இமைக்கா நொடி கள்' மூலம் கோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுத்தவர் டோலிவுட் நடிகை ராஷிகண்ணா. தொடர்ந்து "அயோக்யா', "அரண்மனை 3', "திருச் சிற்றம்பலம்' உள்ளிட்ட பல்வேறு படங் களில் நடித்திருந்தார். இப்போது சுந்தர்.சி இயக்கிவரும் "அரண்மனை 4' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகிவருகிறது. விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது ராஷிகண்ணாவின் ஆசையாம். இதுகுறித்துப் பேசிய அவர், "கோலிவுட்டில் விஜய், டோலிவுட்டில் மகேஷ்பாபு, அல்லுஅர்ஜுன், பாலிவுட்டில் ரன்பீர்கபூர், ஷாருக்கான் ஆகியோருடனும் நடிக்க விருப்பம்'' என தெரிவித்துள்ளார்.

ஒரிஜினல் சிங்கம்!

காடு மற்றும் மலைகள் சார்ந்த பகுதிகளில், படங்கள் எடுத்து வெற்றிகண்டவர் இயக்குநர் பிரபுசாலமன். குறிப்பாக, யானையை ம

பெரிய ஆசை!

dd

Advertisment

"இமைக்கா நொடி கள்' மூலம் கோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுத்தவர் டோலிவுட் நடிகை ராஷிகண்ணா. தொடர்ந்து "அயோக்யா', "அரண்மனை 3', "திருச் சிற்றம்பலம்' உள்ளிட்ட பல்வேறு படங் களில் நடித்திருந்தார். இப்போது சுந்தர்.சி இயக்கிவரும் "அரண்மனை 4' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகிவருகிறது. விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது ராஷிகண்ணாவின் ஆசையாம். இதுகுறித்துப் பேசிய அவர், "கோலிவுட்டில் விஜய், டோலிவுட்டில் மகேஷ்பாபு, அல்லுஅர்ஜுன், பாலிவுட்டில் ரன்பீர்கபூர், ஷாருக்கான் ஆகியோருடனும் நடிக்க விருப்பம்'' என தெரிவித்துள்ளார்.

ஒரிஜினல் சிங்கம்!

காடு மற்றும் மலைகள் சார்ந்த பகுதிகளில், படங்கள் எடுத்து வெற்றிகண்டவர் இயக்குநர் பிரபுசாலமன். குறிப்பாக, யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "கும்கி' படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதையடுத்து அவரின் "கயல்', "தொடரி' படங்கள் எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மீண்டும் யானையை வைத்து "காடன்' என்ற படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிட்டார். அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதையடுத்து வந்த "செம்பி' ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வெற்றி கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பிரபுசாலமன், அடுத்ததாக யானைக்கு பதிலாக சிங்கத்தை மையமாக வைத்து எழுதியுள்ளார். அதனால் சிங்கத்தை வைத்து படப்பிடிப்பு நடத்த தற்போது வெளிநாட்டில் லொகேஷன் பார்த்து வருகிறார். இப்படத்தை "தேவதையை கண்டேன்', "பேரரசு' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரிக்கிறது.

cc

கார்த்தி பிஸி!

கார்த்தி தற்போது நலன்குமரசாமி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். "வா வாத்தியாரே'’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத் தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தனது அடுத்த படத்திற்காக "96' பட இயக்குநர் பிரேம் குமாருடன் கைகோர்த்து, படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு வருகிறார். "மெய்யழகன்'’என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு ஏற்கனவே அவர் ஒப்புக்கொண்ட "சர்தார் 2' படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். பி.எஸ். மித்ரன் இயக்கவுள்ள இப்படம் பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாகிறது. பிறமொழி நடிகர், நடிகைகளும் நடிக்க, பெரும் பொருட் செலவில் "சர்தார் 2' பிரம்மாண்டமாக தயாராகிறது.

விஷால் விருப்பம்!

Advertisment

நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பயணிக்கும் விஷால், அடுத்ததாக இயக்குநராகிறார். "துப்பறிவாளன் 2' மூலம் ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் சொல்லத் தயாராகும் விஷால், கமிட் செய்துவைத்த படங்களில் நடித்துக்கொண்டே "துப்பறிவாளன் 2' பட ப்ரீ- புரொடக்ஷன் பணிகளைக் கவனித்து வந்தார். மேலும் அவர் நடித்து வந்த இயக்குநர்களிடம் அவ்வப்போது டிப்ஸ்களையும் கேட்டு வந்தார். இந்த நிலையில் கமிட் செய்த படங்கள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதால் "துப்பறிவாளன் 2' படத்தில் தனது முழுக் கவனத் தையும் செலுத்தி வருகிறார். ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் அடுத்தகட்டமாக நடிகர், நடிகைகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கி, முதற்கட்ட படப்பிடிப்பை லண்டனின் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தாண்டுக்குள் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம். "துப்பறிவாளன் 2' படத்தை முடித்துவிட்டு, விஜய்யிடம் கதை சொல்லி அவரை இயக்கும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற திட்டமும் விஷாலிடம் உள்ளதாம்.

கவினுக்கு மவுசு!

"நட்புனா என்னான்னு தெரியுமா', "லிஃப்ட்'’போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் கவின். இவரின் சமீபத்திய படமான "டாடா'வும் பெரும்’வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் பல படங்களில் பிஸியாக நடித்துவருபவர், இப்போது,‘"பியார் பிரேமா காதல்'’ பட இயக்குநர் இளன் டைரக்ஷனில் "ஸ்டார்'’ என்ற படத்தில் நடிகிறார். கதாநாயகியாக அதிதி எஸ்.போஹன்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் "ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்'’என்ற படத்தில் அறிமுகமானவர்.

-கவிதாசன் ஜெ.

nkn030224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe