மீண்டும் ஜோடி!
அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் "விடாமுயற்சி' படத்தில் பிசியாக நடித்துவருகிறார் அஜித். இப்படத்தில் ரக்ஷித் என்ற கதாபாத்தி ரத்தில் அர்ஜுன் நடிக்க படப்பிடிப்பு அஜர்பைஜானில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அஜித் பிறந்தநாளான மே 1 அன்று, படத்தை வெளியிட படக்குழு முயற் சித்து வருகிறது. இதனை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் 63வது படத்திற்காக கமிட்டாகியுள்ளவர், அதன் படப்பிடிப்பில் ஏப்ரல் மாதம் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை தபுவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே அஜித் -தபு இருவரும் ‘"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'’படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்கள் என்பது நினைவுகூரத்தக்கது. 2025 பொங்கலுக்கு ஏ.கே. 63 படத்தை வெளியிட படக்குழு பிளான் போட்டுள்ளது.
பூரிப்பில் அதிதி!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_275.jpg)
"விருமன்', "மாவீரன்' படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அதிதி ஷங்கர். மேலும் விஷ்ணு விஷாலை வைத்து ராம்குமார் இயக்கி வரும் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் படத்தில் கமிட்டாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை கமிட் செய்துவரும் அதிதி ஷங்கர், தற்போது அடுத்தகட்டத் திற்கு நகர்ந்து, கதாநாயாகி டூ லீட் ரோல் என்ற இடத்திற்கு சென்றுள்ளார். முதல்முறையாக ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயா ரிக்க மாமுண்டி என்கிற அறிமுக இயக்குநர், இயக்கவுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இப்படம் உருவாகிறது. குறுகிய காலத்திலே லீட் ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் அதிதி ஷங்கர்.
டேக் ஆஃப்!
"முண்டாசுப்பட்டி', "ராட்சசன்' பட இயக்குநர் ராம்குமார் தற்போது விஷ்ணுவிஷாலை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடாத இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க முழு வீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு முன்பாக அதே சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டானார். ஆனால் அப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதனால் விஷ்ணு விஷால் படத்தை முடித்துவிட்டு மீண்டும், அந்த தனுஷ் நடிக்கவிருந்த படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்த ராம்குமார், தனுஷிற்கு வைத்திருந்த கதையை சொல்லியுள்ளார். கதையை கேட்ட சிவகார்த்திகேயனும் நடிப்பதாகக் கூறியுள்ளார். அனேகமாக ராம்குமார் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் கைவிட்ட படம் டேக் ஆஃப் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க வுள்ளதாக கோலிவுட் வட் டாரங்கள் தெரிவிக்கின் றன.
பட்ஜெட் படத்தில் யோகிபாபு!
"துணிவு' படத்தை தொடர்ந்து கமல் படத்தை இயக்கவிருந்த வினோத், அப்படம் தள்ளிப்போனதால் கார்த்தியை வைத்து "தீரன் 2' படத்தை எடுக்க திட்டமிட்டார். ஆனால் கார்த்தி அடுத்தடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளதால், உடனே ஆரம் பிக்க முடியாத சூழலில் வினோத் இருக்கிறார். அதனால் யோகி பாபுவை வைத்து சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் பண்ண ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த நிலையில், அந்தப் படத்தை தற்போது எடுத்து முடிக்க முடிவெடுத்துள்ளார். இப்படத்திற்கு குறுகிய காலமே தேவைப்படுவதால் கார்த்தி வருவதற்குள் இப்படத்தை எடுத்துவிடலாம் என திட்டம் தீட்டி, அதன் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
நான்காவதாக நயன்தாரா
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_208.jpg)
த.செ.ஞானவேல் இயக்கும் "வேட்டையன்' படத் தில் நடித்துவருகிறார் ரஜினி. இதை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், நெல்சன் இயக்கத் தில் "ஜெயிலர் 2' என தனது லைனப்பை திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் "ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. ஏற் கனவே ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில் மீண்டும் நான்காவது முறையாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/cinema-t_6.jpg)