அண்ணனுக்கு ஜோடி!
"கங்குவா'’ படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது அடுத்த படத்திற்குத் தயாராகி வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ள சூர்யா, பிப்ரவரி இறுதி அல்லது, மார்ச் தொடக்கத்தில் இப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். மதுரையில் ஒரு கல்லூரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சமீபத்தில் முதல் பாடலை பதிவு செய்துள்ளது படக்குழு. இப் படத்தில் துல்கர்சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய்வர்மா உள் ளிட்ட பிர பலங்கள் கமிட்டாகியுள்ளனர். மேலும் மற்ற கதாபாத்திரங் களுக்கான நடிகர்களையும் நடிகைகளையும் தேர்வுசெய்யும் பணிகளை படக்குழு நடத்தி வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் கமிட்டாகியுள்ளார். தம்பி கார்த்தியின் விருமன் படம் மூலம் என்ட்ரி கொடுத்த அதிதி ஷங்கர், தற்போது அண்ணன் சூர்யாவுடன் ஜோடி போடவுள்ளார். அவர் ஏற்கனவே விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_206.jpg)
இரண்டாம் இயக்குநர்!
முதல் படத்திலே ஹிட் கொடுத்து பலரது கவனம் பெற்ற இயக்குநர்களின் இரண்டாவது படத்தில் கைகோர்க்கவே சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டிவருகிறார். "இன்று நேற்று நாளை' பட ரவிக்குமாருடன் "அயலான்', "மண்டேலா' பட மடோன் அஷ்வினுடன் "மாவீரன்'. இந்த வரிசையில் "ரங்கூன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் தனது 21வது படத்திற்காக கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் "குட் நைட்' படம் மூலம் கவனம் ஈர்த்த விநாயக் சந்திரசேகரனிடம் கதை கேட்டுள்ளார். கதை பிடித்துப் போக முழுக்கதையையும் ரெடிபண்ணச் சொல்யுள்ளார். அதனால் அதன் பணிகளில் ஈடுபட்டு வரும் விநாயக் சந்திரசேகரன், சிவகார்த்திகேயனின் அந்த செகண்ட் இயக்குநர் -ஸ்டில் கண்டிப்பாக இடம் பெறுவோம் என நம்பிக்கையில் உள்ளார்.
கனவு கனிந்தது!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_272.jpg)
மல்டி ஸ்டாரர் படம் தற்போது ஹிட்டடித்து வருவதால், அதையே பெரிய ஸ்டார்கள் மற்றும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் படங்கள் அதிகம் பின்பற்றி வருகின்றனர். அந்த டிரண்டை "பொன்னியின் செல்வன்' படத்தில் பின்பற்றிய மணிரத்னம், அதையே தனது அடுத்த படத்திற்கும் ஃபாலோ செய்கிறார். கமலை வைத்து "தக் லைஃப்' படத்தை இயக்கி வரும் மணிரத்னம், முன்னணி பிரபலங்களான த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌ தம் கார்த்திக் மற்றும் மலை யாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோரை புக் செய்து வைத்திருந்தார். மேலும் ஐஸ்வர்யா லட்சுமியை சமீபத்தில் கமிட் செய்து வைத்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் படத்தில் அவருக்கு சிறிய கதாபாத்திரம்தானாம். இருப்பினும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம்வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் கதாநாயகியாக நடித்த "ஆக்ஷன்', "ஜகமே தந்திரம்', "கேப்டன்' உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை. ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த "பொன்னியின் செல்வன்' ரசிகர்களை லைக் பண்ண செய்தது. அதனால் அதன் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும், ரொம்ப கவனத்துடனேயே கமிட் செய்து வந்தார். தான் ரசிகர்கள் மனதில் இடம் பெற காரணமாக இருந்த மணிரத்னம் அழைத்ததால் சிறிய வேடமென்றாலும் பரவாயில்லை என இப்படத்திற்கு ஓ.கே. சொல்-யுள்ளார். கமலுடன் ஸ்க்ரீன் ஷேர் செய்வது என்ற ஐஸ்வர்யா லட்சுமியின் நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது.
தமிழில் ஹீரோ!
நீண்ட காலமாகவே தமிழ்ப் படங்களில் தலை காட்டாமல் இருந்துவந்த கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார், "ஜெயிலர்' படம் மூலம் தமிழ் ரசிகர் களிடையே தோன்றி நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து "கேப்டன் மில்லர்' படம் மூலமாகவும் தனக்கு கிடைத்த இடத்தைத் தக்க வைத்துள்ளார். இதனால் ஹீரோவாக நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் புதுப் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்ட்ரி இந்தப் படத்தை தயாரிக்க அறிமுக இயக்குநர் வடிவேலு இயக்கவுள் ளார். இப்படம் கமர்ஷியல் அம்சங்கள் கலந்த மாஸ் படமாக உருவா கிறதாம்.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/cinema-t_3.jpg)