சமந்தாவுக்கு சான்ஸ்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_270.jpg)
தமிழில் "அறிந்தும் அறியாமலும்', "பட்டியல்', "பில்லா-2' போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் இந்தியில் வெளிவந்த "ஷேர்ஷா' திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. தற்போது சல்மான்கான் நாயகனாக நடிக்க, கரண்ஜோகர் தயாரிப்பில் "தி பூல்' என்ற படத்தை இயக்குகிறார். நாயகியாக முதலில் த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் தற்போது அவருக்குப் பதிலாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். "புஷ்பா' படத்தில் "ஊ சொல்றியா' பாடலுக்கு சமந்தா ஆடிய கவர்ச்சி நடனம் இந்தி ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போனதே அதற்குக் காரணமாம்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_204.jpg)
நம்பிக்கை நாயர்!
அஜித்தின் "என்னை அறிந் தால்', மூலம் கோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுத்தவர் பார்வதி நாயர். தொடர்ந்து ஹீரோயினாகவும், முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக பெரிய ஹீரோ படங்களில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் மறுக்காமல் நடித்துவரு கிறார். அந்த லிஸ்ட்டில் கமலின் "உத்தம வில்லன்', விஜய்சேதுபதியின் "சீதக்காதி', ரன்வீர்சிங்கின் "83' உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் அந்த லிஸ்ட்டில் மற்றொரு பெரிய ஹீரோவான விஜய் படமும் இடம்பெற்றுள்ளது. விஜய் தற்போது நடித்து வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Greatest of All Time) படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருப்பினும் அது முக்கியமான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. பான் இந்தியா திரைப்படமாக இப்படம் வெளியாகவுள்ளதால், தனது இமேஜ் மற்றும் மார்க்கெட்டை இந்த படம் மேலும் உயர்த்தும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் பார்வதி நாயர்.
நயன்தாரா ஓ.கே!
"நெஞ்சுக்கு நீதி' படத்தை தொடர்ந்து, ஜெய்யை வைத்து "லேபிள்' வெப் சீரிஸை இயக்கியிருந்தார் அருண்ராஜா காமராஜ். இது பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அதனால் இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகளை தொடங்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் நயன்தாரா நல்ல சாய்சாக இருக்கும் என படக்குழு நினைத்துள்ளது. மேலும் நயன்தாராவை அணுகியபோது, கதையைக் கேட்டு இம்ப்ரஸான நயன்தாரா, ஏற்கனவே நடிப்பதற்கு ஓ.கே. சொல்லியுள்ளார். கமிட்டான படங்களை முடித்துவிட்டு இப்படத்திற்கு டேட்ஸ் கொடுப்பதாக வாக்கு கொடுத்துள்ளாராம் நயன்தாரா.
ரூட்ட மாத்தியாச்சு!
கமல் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள ‘தக் லைஃப்’ படம், தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் முடிந்து படப்பிடிப்பிற்கு தயாராகியுள்ளது. சென்னையில் தற்போது படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர். இப்படத்தில் ஏற்கனவே ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், அபிராமி உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிதாக கௌதம் கார்த்திக் இணைந்துள்ளார். அவருக்கும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்கிறார்கள். சிம்புவுடன் "பத்து தல' படத்தை தொடர்ந்து தற்போது ஆர்யாவுடன் மிஸ்டர் எக்ஸ் (Mr.X) படத்தில் மற்றொரு ஹீரோ வுடன் இணைந்து முன் னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் முதல் முறையாக கமலுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், அவர் ஹீரோவாக நடித்த சமீபத்திய படங்கள் சரியாக போகாததால் கொஞ்சம் ரூட்டை மாற்றிப் பார்ப்போம் என முடிவெடுத்துள்ளாராம். அந்த மாற்றம் தன்னை அறிமுகப்படுத்திய மணிரத்னம் படத்தின் மூலம் நடக்கட்டுமே என இப்படத்திற்கு ஓகே சொல்லியுள்ளாராம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema2_57.jpg)
பாட்டு ஹிட்டு!
சிறுத்தை சிவா இயக்கும் "கங்குவா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா, அப்போது ஏற்பட்ட காயம் காரணமாக பிரேக் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு ஓய்வெடுக்க சென்றார். பின்பு குணமடைந்து அண்மையில் சென்னை வந்த அவர், மீதமுள்ள "கங்குவா' படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுப்பதற்காக அதன் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு சுதா கொங்கரா படத்திற்கு செல்லவுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது இப்போது தள்ளிப்போகிறது. கங்குவா படப்பிடிப்பை முடித்துவிட்டு சிறிது கேப் விட்டுவிட்டுத்தான் சுதாகொங்கரா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறாராம். இது ஒருபுறமிருக்க... ஜி.வி.பிரகாஷ் படத்தின் பாடல் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். இப்பாடலை பாடகி தீ பாடியுள்ளார். ஏற்கனவே சூரரைப் போற்று படத்தில் இதே கூட்டணியில் வந்த ‘காட்டு பயலே...’ பாடல் நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப் பிடத்தக்கது.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/cinema-t_1.jpg)