சேட்டன்களுக்கு உதவிக்கரம்!

kerala-flood

விஜய், அஜீத், சூர்யா ஆகியோருக்கு கேரள நடிகர்களுக்கு இணையான செல்வாக்கு கேரளாவில் உண்டு. சீனியர் நடிகர்களில் கமல்ஹாசனை சேட்டனாகவே பாவிக்கிறார்கள்.

கேரளா, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்... மக்களிடம் ‘நிவாரண நிதி’ கோரினார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

Advertisment

25 லட்ச ரூபாய் நிதியை கேரளாவுக்கு தருவதாக கமல் அறிவிக்க... சூர்யாவும், கார்த்தியும் சேர்ந்து 25 லட்ச ரூபாயும், விஷால் 10 லட்ச ரூபாயும் அறிவித்தனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கமும் ஐந்து லட்ச ரூபாயை அறிவித்தது.

ஆனால்... சுமார் ஐநூறு உறுப்பினர்களைக்கொண்ட மலையாள நடிகர் சங்கமான "அம்மா'’ பத்துலட்ச ரூபாயை நிவாரண நிதியாக அறிவித்தது... கேரள மக்களை எரிச்சலடைய வைத்திருக்கிறது.

touringtalkies

Advertisment

இன்னொரு கூடுதல் எரிச்சலாக... கேரள சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மம்முட்டி தனது "குட்டநாடன் பிளாக்'’படத்தின் ட்ரெய்லரை தனது டுவிட்டரில் வெளியிட்டு மகிழ்ச்சியடைய... "கேரளாவே தண்ணியில மிதக்குது... மக்கள் அவஸ்தைப்படுற நேரத்துல ட்ரெய்லரை வெளியிட்டு பகுமானம் பண்ணலாமா?'’என மக்கள் மம்முட்டியை வறுத்தெடுத்ததோடு... "வேறு மாநில நடிகர்கள் நிதி அறிவிச்சிருக்காங்க.... ஆனா... எங்ககிட்ட கோடிகோடியா சம்பாதிக்கிற நீங்க என்ன செஞ்சுக்கிட்டிருக்கீங்க?'’எனவும் கேள்வியெழுப்பினர்.

இதன்பிறகு உஷாரான மம்முட்டியும், மோகன்லாலும் தலா 25 லட்ச ரூபாயை நிவாரண நிதியாக அறிவித்திருக்கிறார்கள்.

"சென்னை வெள்ளத்தின்போது கற்றுக்கொண்ட பாடம்'’எனச்சொல்லி சில முன்னெச்சரிக்கை ஐடியாக்களை கேரள மக்களுக்கு சொல்லியிருக்கும் நடிகை ரோஹிணி, ஆன்-லைன் பேங்கிங் மூலம் இரண்டு லட்ச ரூபாயை நிவாரண நிதியாக உடனடியாகத் தர... கேரள அரசாங்கம் டுவிட்டர் மூலம் ரோஹிணிக்கு நன்றி தெரிவித்துள்ளது.

ஸ்ரீரெட்டியின் குட் புக்!

touringtalkies

கோலிவுட் பிரபலங்கள் மீது பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளைச் சொல்லிவந்த ஸ்ரீரெட்டி, சென்னையிலேயே தங்கி தமிழ் சினிமாவில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம். “சில தமிழ்ப்பட வாய்ப்புகள் வந்திருக்கு. "பேசிக்கிட்டிருக்கோம், சீக்கிரமே அறிவிப்பு வரும்'’என தெரிவித்துள்ளார். "தான் தயாரிக்கவிருக்கும் வெப்-சீரியல்களில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்புத் தரத் தயார்...' என ஏற்கனவே குட்டி பத்மினி அறிவித்திருக்கிறார்.

ஸ்ரீரெட்டி மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. காரணம்... ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டதாக நடிகர் சங்கத்தில் யாரும் புகார் தரவில்லை. தேவையில்லாத சிக்கல் எதுக்கு என நினைக்கிறார்களோ என்னவோ?

ஸ்ரீரெட்டியோ வலைப்பக்கம் மூலம் தனது ஃபாலோயர்களுடன் ஜாலியாக உரையாடி வருகிறார்.

தான் டி.வி. நிருபராக இருந்தபோது சூர்யாவை பேட்டியெடுத்திருப்பதாகவும்... அப்போது, தான் சூர்யா ரசிகையாக இருந்ததாகவும், இப்போது அஜீத் ரசிகையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

எந்த குருநாதர் கொடுத்த ஐடியாவோ... இப்போது முன்னணி ஹீரோக்கள் சிலர் பெயரைக் குறிப்பிட்டு லிஸ்ட் போட்டிருக்கிறார்.

இது வேற லிஸ்ட். அதாவது குட் லிஸ்ட்....

"அஜீத்தை எனக்கு ரொம்பப் பிடிக்கும். விஜய் ரொம்ப அழகு. சூர்யா நல்லவர். சிம்பு அருமையானவர்...'’’இப்படி ஸ்ரீரெட்டி சிலாகிக்கிறார்.

"இதனால்... “ஸ்ரீரெட்டி லிஸ்ட்டுல என் பெயர் இல்ல...'’’ என நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார் சிம்பு.

மயிலுக் குட்டி!

"ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர்... ‘பாலிவுட்டின் ராசாத்தியா?'’ என நம்ம டாக்கீஸ்ல ஒரு நியூஸ் ரீல் போட்டிருந்தோம்.

ஜான்வி நடித்த "தடக்'’இந்திப்படம் வெளியாகி... இதுவரை 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிட்டதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கரண்ஜோஹர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார். “"புதுமுகங்கள் நடித்த படம் இவ்வளவு வசூலை பெற்றிருப்பது சிறப்புதான்'’என அவர் சொல்லியுள்ளார்.

இது காதலுக்கு எதிரான கௌரவக் கொலை சம்பந்தமான படம் என்பதால்... படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மயிலுக்குட்டி ஜெயிச்சிருச்சு!

-ஆர்.டி.எ(க்)ஸ்