Advertisment

டூரிங் டாக்கீஸ்!

touringtalkies

ஹீரோக்கள் சம்பளம்! குறையும்... ஆனா குறையாது!

ஹீரோக்களின் சம்பள சர்ச்சைதான் எப்போதும் சூடாக விவாதிக்கப்படுகிற விஷயம் என்றாலும்... இப்போது ரொம்பவே சூடாக விவாதிக்கப்பட்டுவருகிறது.

Advertisment

கணினிமயமாக்கப்படும் ஒவ்வொரு தியேட்டரின் வசூல் மூலம் இனி ஹீரோக்களின் சம்பளத்தை நிர்ணயிக்க தீர்மானிக் கப்பட்டிருக்கிறது... தயாரிப்பாளர் -அரசு -தியேட்டர் உரிமையாளர் முத்தரப்பு பேச்சுவார்த்தையில்.

ஆனால்... "இதன் மூலமெல் லாம் ஹீரோக்கள் சம்பள விஷயத் தில் தயாரிப்பாளர்கள் விரும்பும் மாற்றம் முழுக்க நிகழ்ந்துவிடாது' என்கிற கருத்தும் நிலவுகிறது... தயாரிப்பாளர்கள் மத்தியில்.

touringtalkies

Advertisment

கமல், விஷால் ஆகியோர் பெரும்பாலும் வெளிப்படங்களில் நடிப்பதில்லை. தங்கள் நிறுவனத் தின் பேரிலேயே தயாரிக்கிறார்கள். (கமல் படத்தை வெளியார் நிறுவனம் தயாரித்தாலும்... அதன் முதல் காப்பி புரொடியூஸராக கமலின் ராஜ்கமல் நிறுவனமே இருக்கிறது.)

கொஞ்ச காலத்திலேயே வசூலில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துவிட்ட சிவகார்த்திகேயனின

ஹீரோக்கள் சம்பளம்! குறையும்... ஆனா குறையாது!

ஹீரோக்களின் சம்பள சர்ச்சைதான் எப்போதும் சூடாக விவாதிக்கப்படுகிற விஷயம் என்றாலும்... இப்போது ரொம்பவே சூடாக விவாதிக்கப்பட்டுவருகிறது.

Advertisment

கணினிமயமாக்கப்படும் ஒவ்வொரு தியேட்டரின் வசூல் மூலம் இனி ஹீரோக்களின் சம்பளத்தை நிர்ணயிக்க தீர்மானிக் கப்பட்டிருக்கிறது... தயாரிப்பாளர் -அரசு -தியேட்டர் உரிமையாளர் முத்தரப்பு பேச்சுவார்த்தையில்.

ஆனால்... "இதன் மூலமெல் லாம் ஹீரோக்கள் சம்பள விஷயத் தில் தயாரிப்பாளர்கள் விரும்பும் மாற்றம் முழுக்க நிகழ்ந்துவிடாது' என்கிற கருத்தும் நிலவுகிறது... தயாரிப்பாளர்கள் மத்தியில்.

touringtalkies

Advertisment

கமல், விஷால் ஆகியோர் பெரும்பாலும் வெளிப்படங்களில் நடிப்பதில்லை. தங்கள் நிறுவனத் தின் பேரிலேயே தயாரிக்கிறார்கள். (கமல் படத்தை வெளியார் நிறுவனம் தயாரித்தாலும்... அதன் முதல் காப்பி புரொடியூஸராக கமலின் ராஜ்கமல் நிறுவனமே இருக்கிறது.)

கொஞ்ச காலத்திலேயே வசூலில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துவிட்ட சிவகார்த்திகேயனின் சம்பளம் மிகப்பெரும் தொகையாக இருப்பதால்... “"அவரை வச்சு படம் பண்ற அளவுக்கு நம்ம கம்பெனி பெரிய கம்பெனி இல்லை'’என தனுஷ் வெளிப்படையாக சொல்கிற அளவுக்கு இருக்கிறது. சிவகார்த்தியும் வெளியார் படங்களில் நடிக்காமல் தனது நண்பர் ராஜாவின் தயாரிப்பிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார்.

sivakarthikeyan

னுஷும் பெரும்பாலும் சொந்த தயாரிப்பில்தான் நடிக்கிறார்.

அப்படியென்றால் இந்த சம்பள சர்ச்சை யாரால் ஏற்படுகிறது?

ஜினி, விஜய், அஜீத்... மூவர்தான் பிறர் தயாரிப்பில் பெரும் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிப்பவர்கள்.

ரஜினியின் "எந்திரன் -2' படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரித்துவருகிறது லைக்கா நிறுவனம். பட்ஜெட் அதிகம் என்பதாலும், நீண்டகால தயாரிப்பில் படம் இருப்பதாலும் ‘லைக்காவின் முதலுக்கு வட்டி எகிறி வருகிறது. இதைச் சரிக்கட்ட... தனுஷ் தயாரிப்பில் தான் நடித்திருக்கும் "காலா'’பட தமிழக வெளியீட்டு உரிமையை லைக்காவுக்கு கிடைக்கச் செய்திருக்கிறார் ரஜினி. 140 கோடி ரூபாய்க்கு இந்த உரிமையை லைக்கா வாங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தான், பெரிய சம்பளம் வாங்கி நடிப்பதால்... தனது படங்களால் விநியோகஸ்தர்கள் நஷ்டப்பட்டால் தன் சம்பளத்தில் ஒரு தொகையை விட்டுக்கொடுக்கிறார் ரஜினி. லேட்டஸ்ட்டாக "லிங்கா'’ பட நஷ்டத்தைச் சரிக்கட்ட ஒரு தொகையை கொடுத்தார்.

ஆனால்... பெரிய சம்பளம் வாங்கும் விஜய்... தன் படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக பிரச்சினைகள் வந்தாலும்... அதை ஏற்பதில்லை. ஜி.எஸ்.டி. வசனத்தால் மோடி வரைக்கும் ரீச்சான "மெர்சல்'’படம் வெளியிடும்போதே... நஷ்டக் கணக்கோடுதான் வெளியிடப்பட்டது. இதற்குக் காரணம்... டைரக்டர் அட்லீ பட்ஜெட்டை எகிறவிட்டது தான். "இதற்கு தான் பொறுப்பாக முடியாது' என்பதுதான் விஜய்யின் எண்ணம். "இந்தப் படத்திற்கு ரிலீஸ் நேர சிக்கல் வந்தபோது... ஐந்துகோடி ரூபாயை தன் சம்பளத்திலிருந்து திருப்பித் தருவதாகச் சொன்ன விஜய், சொன்னபடி தரவில்லை...' என்கிற பேச்சும் இண்ட்ஸ்ட்ரியில் உலவுகிறது.

அஜீத்தின் "விவேகம்'’படம் அவரின் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரிக்கட்ட... "விவேகம்'’படத்தைத் தயாரித்த "சத்யஜோதி' தியாகராஜனுக்கே மீண்டும் "விஸ்வாசம்'’படத்தை நடித்துத் தருகிறார்.

சமீபத்தில் சூர்யா நடித்த "தானா சேர்ந்த கூட்டம்'’படம் நஷ்டத்தை உண்டாக்கியதாக விநியோகஸ்தர்கள் புலம்பினார்கள். ஆனால் சூர்யாவோ, "தனக்கு தானா சேர்ந்த கூட்டம்'’என்கிற வெற்றிப் படத்தைத் தந்ததாகச் சொல்லி, அந்தப் படத்தின் டைரக்டர் விக்னேஷ்சிவனுக்கு கார் பரிசளித்தார்.

ஆக... "தங்கள் படத்தால் நஷ்டம் என்றால் ஏதாவது ஒரு வகையில் அதைச் சரிக்கட்ட முயற்சிக்கிறார்களே தவிர... "நஷ்டம் ஏற்படவில்லை'’எனச் சமாளிக்கிறார்களே தவிர... தங்களது சம்பளத்தை இந்த பெரிய ஹீரோக்கள் குறைப்பதில்லை.

சூர்யாவை வைத்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்த ஞானவேல்ராஜா... ஹீரோக்களைப் பற்றி குமுறியிருக்கிறார்.

""தமிழில் ஒரு படம் நூறுகோடி ரூபாய்க்கு விற்பனையானால்... அந்தப் படத்தின் ஹீரோ 50 கோடி சம்பளம் கேட்கிறார். படத்தில் நடிக்க சம்மதித்த உடனே... 15 கோடி ரூபாயை அட்வான்ஸாக கேட்கிறார். ஆனால்... தெலுங் கில் ஒரு படம் நூறுகோடி ரூபாய்க்கு விற்பனை ஆனால்... அந்தப் படத்தின் ஹீரோ 15 கோடி சம்பளம் கேட்கிறார். படத்தில் நடிக்க சம்மதித்த உடனே... 50 லட்ச ரூபாய் மட்டும்தான் அட்வான்ஸாக கேட்கிறார். அதனால் தெலுங்கு சினிமா ஆரோக்கியமா இருக்கு. தமிழ் சினிமா ஹீரோக்கள் சுயநலமா செயல்படுறாங்க. நான் தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு போகப் போறேன். இதுக்காக அங்க ஆபீஸ் போட்டுட்டேன்...''’என ஃபீல் பண்ணியிருக்கிறார்.

சம்பளக் குறைப்பு என்பது உடனடி சாத்தியமில்லை என்பதால்... "தயாரிப்புச் செலவைக் குறைக்க வேறு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்' என ஆலோசித்த சூர்யா, கார்த்தி, விஷால்... மூவரும்... இனி தங்களின் உதவியாளர்களுக்கான சம்பளத்தை தங்களது சம்பளத்திலிருந்தே தர முடிவெடுத்தனர். இதுவே தயாரிப்பில் பல லட்சங்கள் குறையும். சமீபத்தில் நடிகர்கள் கூடி நடத்திய கலந்துரையாடலில்... இந்த விஷயத்தை முன்வைத்து விவாதித்ததில்... எல்லா ஹீரோக்களுமே தங்களின் உதவியாளர்கள் சம்பளத்தை தாங்களே ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறார்களாம்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

touringtalkies
இதையும் படியுங்கள்
Subscribe